2 ரசித்தவர்கள்

 அக்கா பொண்ணு 

தாய் பத்துமாதம் கருவில் சுமந்தாள்!!!
தந்தை தன் நெஞ்சில் சுமந்தார்!!!
தனயன் கைகளில் தாங்கினான் !!-
தாய்மாமன் ஈடு செய்ய இவளுக்கு ஒரு
வாழ்த்துப்பா எழுதினேன் -!
என்னால் இயன்றதை தான் முயல்கிறேன் !
"மாமோய்" என்று மதுரமாய் அழைத்தவள் !!!
நால்வர் ஓடுவோம் கூப்பிட்ட மாத்திரத்தில் -
பேசும் பொற்சித்திரம் இவள் -
கண்கள் பேசியதை யாரேனும் கண்டதுண்டோ ?
மொழி இல்லாமல் விழியால் பேசுவாள் -
சிறு பிராயம் முதல் "வெற்றி" என்ற
வார்த்தைக்கு விளக்கம் அளித்தவள் !! 
வெற்றி இருக்கும் இடத்தில வீரம் இருக்கும்
வீரம் இருக்கும் இடத்தில கருணை இருக்கும்
கருணை இருக்கும் இடத்தில அன்பு இருக்கும்
அன்பு இருக்கும் இடத்தில செல்வம் இருக்கும்   
ஆனால் இவை அனைத்தும் இருந்தாலும்
அமைதியாய் இருப்பாள் -
 நிறை குடம் நீர் தளும்பாது -
 நிதர்சனமான உண்மையை
உண்மையாய் உணர்த்தியவள் -
உலகம் கண்ட மாமனிதர்கள்
உறவாய் அமைதல் பேறு
இவளும் அப்படி தான்
இவளை உறவாய் பெற்றது
நான் பெற்ற பேறு !!

நிலவு இவளிடம்
நாணத்தை பயின்றது
மின்னல் இவளிடம்
சிரிக்க கற்றது
காற்று இவளிடம்
நிதானத்தை கற்றது
அற்றனைகள்
அனைத்தும் கற்றது
அடியேனும் கற்கிறேன்
அமைதியாய் இருக்க !