Showing posts with label போலி முகமூடி. Show all posts
Showing posts with label போலி முகமூடி. Show all posts

போலி முகமூடி

4 ரசித்தவர்கள்


போலி முகமூடி
போலி என்று சொல்லுபோதே - உங்கள் 
முகம் சுளிக்கிறதே - 
தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையை 
தன் பிள்ளை என உரிமை கொண்டாடும் 
தன் மானம் இலா கயவர் கூட்டம் - யாரோ 
பெற்ற பிள்ளையை திருடி செல்லும் 
மானம் இல்லா வர்க்கம் -
சமூகத்தில் நடந்தேறும் அவலம்- 
திருட்டு திரை குதிரைகளை தான் -
மனம் வெம்பி கூறுகிறேன் -
பலமாதம் காத்திருந்து - 
இரவு பகல் கண் விழித்து 
ஊண் உறக்கம் பல மறந்து 
உயிரையும் துச்சமென 
ஊசலில் ஆட விட்டு -
வெண் திரையில் நாம் காண
வெந்து மடியும் கலைஞன் -
பிறன் மனை நோக்குவது  - எப்படி பழியோ 
அது போல் தான் இதுவும் -
தான் பெற்ற பிள்ளையை 
தானே கொஞ்ச முடியாத தாய் உள்ளம்!!
மனசாட்சி உள்ள எவரும் இதை 
அங்கீகாரம் செய்யாது இருந்தாலே 
இதன் இறுமாப்பு இல்லாது போகும்
மூடிய கையில் என்ன உள்ளது என்று தான் 
எவரும் நினைப்பர் - இப்படி 
மூடி வைத்த ரகசியத்தை திறந்து 
வைத்த கள்ளன் தன் தாயையும் கூட
விற்று பிழைப்பான் போலும்- 
பிறர் உழைப்பை உறிஞ்சி வாழும் 
அட்டையை அண்ட விடாதீர் 
அன்பு நெஞ்சங்களே !!