அவளோடு உரையாடல்

2 ரசித்தவர்கள்







மழை வரும்போதெல்லாம்
குடையை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை!!!
தேங்கிய குட்டையாய்
உன் நினைவுகள்...!!!

உன் சிரிப்பை பார்த்து
நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் ஆனாலும்
உன் வெட்க புன்னகை ஒன்று போதும்
இவை அனைத்தையும் மறந்து போக!!!

உன் பெயரை
சொல்லும் யாரும் -
எனக்கு எதிரி அல்ல
அது உன் எதிரியாக
இருந்தாலும் கூட!!

தனியாய் நடந்தேன்
துணையாய் வந்தாய் -
இப்போதும் நான்
தனியாக தான் இருக்கிறேன்
உன் நினைவுகளோடு
உறவாடிக்கொண்டு

இருப்பதை எல்லாம்
கொடுத்து விட்டேன்
ஆனாலும் எனக்கு
கவலை இல்லை -ஏனெனில்
கேட்டது நீயல்லவா?

குறுந்தகவல் தான்
ஆனால் நீ படிப்பதால்
அது தொடர்கதையானது!!

உன் மேல்
விழுந்த மழை துளி - கூட
சந்தோஷ படுகிறது
உன்னை தொட்டு விட்ட
சந்தோஷத்தில் !!

நீ என்னை பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
மாண்டு பின் உயிர்ந்தேழுகிறேன்
உன்னால் எனக்குள் நடக்கும்
அதிசய விளையாட்டு!!!

நீ செல்லமாய்
சிணுங்கும் போதெல்லாம்
கொலுசு மணிகள்
வாயை மூடி கொண்டன
உன் மீது பொறாமை கொண்டு!!!


உன் மீது கோவம்
கொள்ள ஆசை ?
அப்போதுதான் - நீ என்னை
சமாதான படுத்த
இதழ் பதிப்பாயே?

உன்னிடம் ஏதாவது
பெறவேண்டும் என்று
ஆவலாய் உள்ளது !!
இதழால் அடிப்பாயா?

உன்னை தொட - எனக்கும்
காற்றுக்கும் போட்டி
காற்றிடம் நான் தோற்று போனேன்
ஆனாலும் என் மனதை
முதலில் தொட்டது நீ தான்
என்று தேற்றினாய்!!!

2 ரசித்தவர்கள்





என்னிடம் சொல்லாமல்
காலன் எடுத்து சென்ற
என்னுயிர் அண்ணனை
தினமும் தேடுகிறேன்
அண்ட வெளியில்
ஆவியாய் இருந்தாலும்
ஆத்மாவாக இருந்தாலும்
ஆதரவாய் இருந்தான்
தோள் சாய ......
அழுதால் துடைக்கும் - கை
அவனாக தான் இருக்கும் ....
என்னிடம் எதை கேட்டாலும்
கொடுத்து இருப்பேன் காலனுக்கு
உயிர் எடுத்த பிறகு
உடலுக்கு என்ன வேலை
அவனை எரித்தேன்
உலாவுகிறேன்
உயிரோடு பிணமாக...
கண்களில் காந்தம்
அவனுக்கு மட்டுமே சொந்தம்..!
அதனால் தான் அதை பிறர்க்கு
அளித்துவிட்டான் உவகையோடு ...!
என்னுடன் பயணித்த காலங்கள்
இனி கிட்டுமா?
அழுவது தெரியாது
சிரித்து மழுப்புகிறேன்
வாழ்க்கை நாடகம் தான்
இப்போது புரிகிறது...
புரிய வைத்துவிட்டு
பறந்து போய்விட்டான்
காற்றோடு...!!!!

தவறிய தருணங்கள்

1 ரசித்தவர்கள்


வழி தவறிய
செம்மறி ஆடு..
கசாப்பு கடையில்
அலங்கார பொருளாய்
அதன் தலை....!!!

வகை வகையாய் மீன்கள்
வரிசையாய் ....
விற்றால் தான்
விறகு எரியும்
மீன்காரி வீட்டில் - பசி
ஏக்கத்துடன்
அவளின் கைக்குழந்தை
பாலுக்கு அழுகிறது...

உன்னிடம் உள்ளதை
கொடுத்துவிட்டு
ஊமையாய் அழுகிறேன்
இதயம் தொலைந்துபோன
துக்கத்தில் ....!!
இன்று
நினைவு நாள்
புதைந்துபோன
காதலை
புதுப்பிக்க ஒரு
நாள் தாருங்கள் !!
மீண்டு உயிர் வாழ?

சொல்லி கொள்ளாமல்
சென்றது அவள் - ஆனாலும்
இன்றும் அழுகிறது
அவளை பற்றிய
என் நினைவு மட்டுமே!!!

எனக்கு தெரியும்
அவள் என்னை
காதலித்ததை விட
என்னுடைய
பரிசை மட்டுமே!!!

என்னுடைய கவிதையை
ரசித்து பேசினாள்
என்னுடைய காதலை
நிராகரித்தாள் - இன்றும்
ரசிக்கிறாள் ....!!!

எழுதுகோல்
ஏட்டை காதலித்தால்
கவிதை குழந்தை
பிறந்தது...!!!

அப்படி என்ன இருக்கிறது
காதலில் ?
காதலித்து தோற்று போன
தந்தை கேட்டார்?

காதல் ஒருமுறை தான்...
அங்கீகரிக்க
பட்டால்!!
சத்தம் இல்லாமல்
இதயத்தோடு இதயம்
சேரும் விந்தை
காதலில் மட்டுமே !!!

இருமனம் சேர்ந்தால்
திருமணம் -
இன்றும் எனக்கு
தனியாவர்த்தனம் தான் !!

பாவூர் ராஜா கவிதைகள்

குறுந்தகவல்

2 ரசித்தவர்கள்




கட்டண தேதியும்
கடன் வசூலிப்பும்
கச்சிதமாய் வருகிறது
குறுந்தகவலாக

காதல் செய்தியை
தூதாக
குறுந்தகவலில்
அனுப்பினாள் - கல்யாண
பத்திரிக்கை
கூரியரில் வந்தது!!
சரியான விலாசத்துடன்

கைபேசியின்
பயன்
குறுந்தகவல்
களஞ்சியமே

குறுந்தகவல்
விலாசம் தெரியாத
தபால் காரன் போல்
எவர்க்கும் கிடைக்கும் - உபயம்
கைபேசி மட்டுமே!!

கைபேசிக்கு
பிடித்த வார்த்தை
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளார்!!!

பிச்சை காரன் கையில் - இருக்கும்
கைபேசியின் ரிங் டோன்
"அம்மா தாயே " !!!!

கைபேசியின்
அழைப்புக்கு
காரிகையின் பதில்
டயல் செய்த எண்ணை
சரிபார்க்கவும்!!!

கைபேசி
நம்கூடவே
இருக்கும் எமன்
பொய்கள் உற்பத்தி
ஆகும் பாசறை
நுணலும் தன் வாயால் கெடும்
என்பதை போல!!

காலையில்
கைபேசியில் விழித்து
குறுந்தகவல் படித்து
காலை கடன் முடித்து
கிளம்பு முன்
இன்று ஒரு தகவல்
இனிய நாளாக !!

காதல் ஒரு அனுபவ பாடம்

2 ரசித்தவர்கள்

காதல்
திறந்து வைக்கப்பட்ட இதயத்தில்
மூடி வைக்கப்பட்ட ரகசியங்கள்
விழிகளில் உறவாடி
இதழ்களில் விளையாடி
இரவில் மட்டும்
விழித்திருக்கும் செவிகள்
கண்கள் பனித்தாலும்
இமைகள் மூடாது
விடியும் வரை
இருட்டோடு
போட்டி போட்டு
விழித்திருந்து
மொழி பேசிய
மௌன கதைகள்
ஏராளம்..!!!
கோபத்தை கூட
குரலில் காட்ட முடியா
கும்மிருட்டுக்கும் கேட்காது
பேசிய வார்த்தைகள் ...!!
இரவு எங்களுக்கு காவலன்
நிலவு தான் எங்கள்
திண்ணை விளக்கு
நேரம் பார்த்து பேசியதில்லை
நெடிய பயணம் அது
சுவாரசியமாய் இருக்கும்
கணக்கில் அடங்காது
திருமணம் இல்லாமல்
நாங்கள் குழந்தையோடு
கொஞ்சி விளையாடிய
நிகழ்வுகளும் உண்டு
பேர் வைக்க சண்டையும் உண்டு
நினைத்து பார்த்தால்
சிரிப்பாய் இருக்கும்
ஆனால்
காதலில் மட்டுமே
இது சாத்தியம்
கற்பனை திறன்
அதிகரிக்க
காதலித்து பாருங்களேன் ...!!!
நீங்களும் கவி பாடுவீர்கள்
கவி பாடும் அனைவரும்
நிச்சயம் காதலை
உணர்ந்து இருப்பர்!!!
இல்லை என்று சொன்னால்
உண்மை உரைக்கவில்லை
என்று தான் பொருள் ...!
எவரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை...!!
என் அனுபவத்தை
உங்களிடம்
பகிர்ந்தேன்..
அவ்வளவே!!!

காதல் ஒரு அனுபவ பாடம்

haikoo

1 ரசித்தவர்கள்




செடியில் இருந்து
விழுந்த மலர்
செடியில் ஒட்டுவதில்லை..
உடைந்துபோன மனங்களும் தான்!!

பொய் பேச தெரியாது
கபடம் அறியாது இருந்தேன் !!!
காதலிக்கும் வரை!!!
இப்போது பொய்
என்னிடம் கற்கிறது!!!
பொய் சொல்ல...???

எனக்கு தெரியாது
எதை வேண்டுமானாலும்
எடுத்து செல்
என் இதயத்தை தவிர!!!
பிடித்தவற்றை பிரியத்துடன்
கொடுத்தல் சுகம்!!!


அழுதால் அழுவேன் ...!!
சிரித்தால் சிரிப்பேன் ...!!
உன்னுடைய நிழல்
பிம்பம் நான் தான்!!
உன் முகத்தை
கண்ணாடியில் பார்ப்பது போல்!!

பூக்கடையில் அளந்து
கொடுக்கிறார்கள் பூக்களை
அவர்களிடம் சொன்னேன் !!
பூக்களை அளக்காதீர்கள்
அழகுக்கு அளவு கிடையாது!!!

சிரத்தையாக
எழுதினேன்
பரீட்சையில் தோல்வி
சிந்தித்து எழுதினேன் -
கவிதை
காதலில் வெற்றி !!!

எப்போதும் சுற்றி வரும்
நீ
இப்போதெல்லாம்
வருவதில்லையே?
நிழலை பார்த்து
நிஜம் கேட்டது ...
குடையை மடக்கும் வரை..

உன்னிடம் சொல்லாமல்
தினமும் கடந்து
செல்கிறேன் ...
ஆனாலும் எனக்கு தெரியும்
நீ என்னை மட்டுமே
பார்க்கிறாய் என்று?!!?

உனக்கு மட்டும் சொல்கிறேன்
உன்னை பேதலிக்க வைக்க
என்னை தவிர
யாரும் இலர்!!

haikoo

0 ரசித்தவர்கள்










மயான காட்டில்
மக்கி போகும்
உடலுக்கு
மரியாதை
பிரேதத்தின் மீது மாலை!!!


பிறக்கும்போது
ஒட்டு துணி இல்லாது
வெற்றுடம்பாய்
அழுத உடன் தெரிகிறது
அம்மணம்...!!!


வழி மாறிய பாதை
நிழல் தப்பிய இரவு
மழை தப்பிய பருவம்
எதுவும் நினைவில் - இல்லை
ஒட்டிய வயிறை நினைக்கையில் ...


பிறப்பும் இறப்பும்
பிரபஞ்சம் அறியும்
பிறவாமல் இருக்க
பிறிதொரு வழி உண்டோ?
பிணியும் பசியும்
பின்னிருந்த போழ்து
பேதலித்த மனது!!!

வாசல் வரை வந்து
பிச்சை கேட்ட மனது
பிச்சை போட எத்தனிக்கும்போது
எங்கோ எட்டி பார்க்கிறது
வறட்டு கௌரவம் ..!!

எப்போதும் சிரித்தேன்
என்னை கேலிபொருளாய்
எண்ணி என்னையும்
காட்சி பொருளாக்கி
கடை விரித்து விட்டனர்...!!!


சிறிது சிறிதாக
சேர்த்து வைத்த
சந்தோசம்
ஒரே நொடியில்
காணாமல் போனது
என்னுடைய கிழிந்த
கோவணம்!!!


களவாணிகள்
நிறைந்த ஊர்
சொன்னது ஒரு
களவாணி...!!
நகரத்தின் காவல் அதிகாரி !!!

அறிவு குருடு

0 ரசித்தவர்கள்




கல்லாய் இருந்தால் -
சுமை கல்லாய் !!!
முள்ளாய் இருந்தால்
ரோஜாவில்...
சதை பிண்டமாய்
இருப்பதால்
ஆறாவது அறிவு
என்னை அறிவு குருடு
என்றது...
தமிழ் கூறும் நல் உலகம்
என்னை மன்னிக்கட்டும்
எட்டு திக்கும் புகழ் பரப்பும்
எட்டாவது அறிவுக்கு
என் முயற்சி வீண் !!!
முடிந்தவரை
முடித்துகொள்கிறேன்
விமர்சனங்கள்
பாராட்டுக்கள்
ஏச்சுக்கள்
பேச்சுக்கள்
இனி முடியட்டும்
சிரித்து கொண்டே
விடை பெறுகிறேன்!!!

தன்னை உணர்தல் பெரும்தவம்

0 ரசித்தவர்கள்



அறியாமல் செய்த பிழை
அறிந்து செய்த தவறு
அழிக்க முடியாத கறை
வடுவாய் நெருஞ்சி முள்ளாய்
மனதில் இனம் புரியாத வலி
மாசு படுத்தியது மனதை .....
தீராத பகையாய்
தினம் தினம்
மடிந்து வீழ்கிறேன்
மண்ணுக்கு இரையாகும் வரை
தீருமா இந்த துயர்?
தீங்கு இழைத்தவன்
தவறை உணர்ந்து
கொள்ளல் நன்று தானே?

கையறு நிலை

1 ரசித்தவர்கள்


என்னை ஊனமாய்- படைத்த
இறைவனை திட்டினேன் !!
கால்கள் இல்லாத மனிதனை காணும் வரை!!


முத்துகளாய் வியர்வை
முன் நெற்றியில்
தெப்பலாய் சட்டை - மழை அல்ல!!!
விரக்தியின் விளின்பில்
கசக்கப்பட்ட கைக்குட்டை
தெருவில் பொம்மையோடு !!!!
விற்றால் தான் அடுப்பெரியும்....!!!
விற்பனை பிரதிநிதி .....!!!

கூலியை கூவி அழைத்தேன்
பேரம் பேசி தூக்க வைத்தேன்
பேரமே இல்லாமல் கடையில்
ஊதுகுழல் வாங்கி பற்ற வைத்தேன்...
கூலியின் வயிறு எரிந்தது....!!


கணினி பொய் சொல்லாது
வழக்காடினான் நண்பன்
அமைதியாய் சொன்னேன்
உண்மைதான் !!!
ஆனால் நீயல்லவா அதை
இயக்குகிறாய் ???


இன்றைய தினத்தில்
இணையத்தளம்
ஈடு இல்லா பணி செய்கிறது!!
ஆனால் இன்றும் பிச்சை
தட்டில் தான் விழுகிறது!!!
வங்கி கணக்கு பார்த்தாலும்!!!



உன்னுடன் பேசணுமாம்
தோழி சொன்ன வார்த்தைக்கு
மௌனமாய் ஒற்றை பார்வை
பதிலேதும் சொல்லாமல்
சென்று விட்டாள் !!!
என்னுடன் பேச
என்ன இருக்கிறது
முறிந்து போன
காதலுக்கு தூது
தோழிக்கு இன்று
தீபாவளி தான்??


பஞ்சம்
பட்டினி
வறுமை
எப்படி சொன்னாலும்
பசி வயிறுக்கு மட்டுமே
தெரியும்!!!
மூளைக்கு வேலை அல்ல?