ஹைக்கூ

3 ரசித்தவர்கள்
                                                                   ஹைக்கூ 

என்னுடைய கற்பனை எல்லாம்
உன்னிடம் இருந்தான் பெற்றது!!!
நீ சொல்லும் ஒரு வார்த்தைக்கு
இவை எல்லாம் ஈடாகி போகும்!!!

அனுப்பும் வார்த்தை மாலைகள்
உனக்கு அர்ப்பணம்!!
படிக்கிறாய் என்றே அனுப்புகிறேன்
கட்டும் போது உன் பெயர் சொல்லி
கட்டுகிறேன்
உன்னை நீ அதில் காணலாம்!!


மின்னலுக்கும் உனக்கும் - உள்ள
ஒரே ஒற்றுமை எப்போதோ
ஒரு முறை தான்
வந்து நொடியில்
செல்கிறது!!!

உன்னிடம் பேச
வார்த்தை தேடுகிறேன்!!!அட!!
வார்த்தை கூட அழகாய் !!!

உன்னிடம் உள்ள ஏதாவது
ஊனமாக இருந்தால் என்னிடம் கொடு...!
சரி செய்து கொடுக்கிறேன்
மனமாக இருந்தால் கூட...!!!


என்னிடம் உள்ள எல்லாத்தையும்
எடுத்துகொள்
இழப்பதற்கு என்று எதுவம் இல்லாது
எடுத்துகொள் !!!
மீண்டு வருவேன் பீனிக்ஸ் பறவையாக
நம்பிக்கை இருக்கும் வரை!!


கண்களில் உள்ள மிருட்சி
மானுக்கு மட்டு மல்ல!!!
மாதர்க்கும் தான்!!!விழியில் தேக்கி வைத்திருக்கும் - கணைகளை
வீணடிக்காது என் மீது தொடு!!!
கணைகள் மலர்களாய்
மாறும் அதிசயம்
இங்கு மட்டுமே!!!