3 ரசித்தவர்கள்
எழுத்தாணி பிடித்து

எழுதிய காலம் போய்
இணையத்தில் எழுதும்
காலம் வந்தாலும்
இலவசம் என்ற சொல்
இருக்கும் வரை
இந்தியா ஒளிராது

பிச்சை காரர்கள்
நிறைந்த நாடு
பிச்சை பற்றி
அறிந்த நாடு
எங்கள் அரசியல்
கூட பிச்சை கேட்டு
தான் ....
ஆன்மிகம் பேசினாலும்!!
பகுத்தறிவாக பேசினாலும் !!!

புண்ணியம் தேடி
காசிக்கு செல்லும் பக்தா!!
எல்லாம் உனக்குள் அடக்கம்
கீதையும் அதை தான் சொல்லுகிறது
உன்னை சுற்றி அனைத்தும் இருக்கும்போது
உலகை சுற்றி ஆராய்வதேன்?

280 லட்சம் கோடி
வெளிநாட்டு வங்கியில் முடக்கம்
ஆனாலும் இன்றும் பிச்சை
எடுக்கும் அரசியல் வாதிகள்
இந்தியா இன்றும்
பிச்சைகார நாடு தான்
நிமிர விடாமல்
முதுகெலும்பை
இலவசத்தால் வளைத்து
வைத்திருக்கும்
வித்தை
இவர்களால் மட்டுமே
முடியும் போலும்??