அவளோடு உரையாடல்

2 ரசித்தவர்கள்மழை வரும்போதெல்லாம்
குடையை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை!!!
தேங்கிய குட்டையாய்
உன் நினைவுகள்...!!!

உன் சிரிப்பை பார்த்து
நாட்கள், மாதங்கள்,
வருடங்கள் ஆனாலும்
உன் வெட்க புன்னகை ஒன்று போதும்
இவை அனைத்தையும் மறந்து போக!!!

உன் பெயரை
சொல்லும் யாரும் -
எனக்கு எதிரி அல்ல
அது உன் எதிரியாக
இருந்தாலும் கூட!!

தனியாய் நடந்தேன்
துணையாய் வந்தாய் -
இப்போதும் நான்
தனியாக தான் இருக்கிறேன்
உன் நினைவுகளோடு
உறவாடிக்கொண்டு

இருப்பதை எல்லாம்
கொடுத்து விட்டேன்
ஆனாலும் எனக்கு
கவலை இல்லை -ஏனெனில்
கேட்டது நீயல்லவா?

குறுந்தகவல் தான்
ஆனால் நீ படிப்பதால்
அது தொடர்கதையானது!!

உன் மேல்
விழுந்த மழை துளி - கூட
சந்தோஷ படுகிறது
உன்னை தொட்டு விட்ட
சந்தோஷத்தில் !!

நீ என்னை பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
மாண்டு பின் உயிர்ந்தேழுகிறேன்
உன்னால் எனக்குள் நடக்கும்
அதிசய விளையாட்டு!!!

நீ செல்லமாய்
சிணுங்கும் போதெல்லாம்
கொலுசு மணிகள்
வாயை மூடி கொண்டன
உன் மீது பொறாமை கொண்டு!!!


உன் மீது கோவம்
கொள்ள ஆசை ?
அப்போதுதான் - நீ என்னை
சமாதான படுத்த
இதழ் பதிப்பாயே?

உன்னிடம் ஏதாவது
பெறவேண்டும் என்று
ஆவலாய் உள்ளது !!
இதழால் அடிப்பாயா?

உன்னை தொட - எனக்கும்
காற்றுக்கும் போட்டி
காற்றிடம் நான் தோற்று போனேன்
ஆனாலும் என் மனதை
முதலில் தொட்டது நீ தான்
என்று தேற்றினாய்!!!