0 ரசித்தவர்கள்
நிழல் உருவங்களை
நிலவு ஒளியில் கண்டதுண்டா?
கிளை இல்லா மரம்
கரங்கள் வெட்ட பட்ட
வீரனை போல்
கம்பீரமாய்
விண்வரை வளர்ந்து
காற்றின் கோர பிடியில்
சொந்தங்களை இழந்து
துயரத்தின் முனையில்
இருந்தாலும்
துளிர் விடும்
நம்பிக்கை என்னும்
தாரக மந்திரம்
மரத்திற்கு
தெரியும் போலும் !!!

ஹைக்கூ

2 ரசித்தவர்கள்சிறை பிடித்த வார்த்தைகள்
கவிதையாய் !!!!
சிறை பிடித்த இதயங்கள்
காதலாய்!!!!
சுதந்திரமாய்  இருந்தால்
எதுவுமே நிலையாய் இல்லை...

உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் எதுவுமில்லை
ஆனாலும் உன்னிடம் பேச
காரணம் வேண்டுமா என்ன?

காலையில் விழித்தவுடன்
கண்ணாடி பார்க்கிறேன்
என் கண்ணில் எப்போதும்
நீ இருக்கிறாய் என்பதற்காக

உனக்கும் எனக்கும்
என்ன சம்பந்தம் ? -கேட்கிறாய்
உன்னிடம் என்னை
தொலைத்துவிட்டு
நான் படும்
அவஸ்தை தெரியாமல்?


கூடு விட்டு கூடு பாயும்
வித்தை
காதலில் மட்டுமே
காரணம்
அவளுக்காக
இவன் படும்  அவஸ்தை

உயிர் இருக்கிறது
எப்படி தெரியும் ?
இதய துடிப்பாய்
நீ இருக்கும்போது !!
மட்டுமே

உலகம் உருண்டை
உலகறிந்த உண்மை
நீ மட்டுமே அழகி
நான் மட்டும் அறிந்த
உண்மை !!!!

ஆலயம் ஆண்டவன்
இருக்கும் இடம்..
அவள் இருக்கும் இடமே
எனக்கு ஆலயம் !!!

என்னை உன் கண்ணால்
தினமும் அடிக்கிறாய்
ஆனாலும் எனக்கு
சுகமாய் தான்
இருக்கிறது...!!
நிறுத்திவிடாதே !!!

மயக்கும் உன் விழிகளை
கொஞ்சம் மூடிகொள்
மருத்துவர் எல்லாம்
உன் வாசலில்
மயக்க மருந்து
மிச்சமாம் !!!

இதயத்தை
பறவையோடு ஒப்பிடாதீர்
எப்போது பறக்கும்
என்று யாராலும்
கணிக்க முடியாது !!!

கொலுசு அணிந்த
உன் கால்கள்
நக பூச்சோடு
உன் கை விரல்கள்
மையிட்ட உன் கண்கள்
இதை எழுதினாலே
கவிதையாய் தெரிகிறது
உண்மைதானே?

பல நிறங்களில் -  நீ -
உடை அணிந்தாலும்
உன் வெட்கபுன்னகையில்
அவைகள் நிறங்கள்
அற்று போகின்றன !!!

உன்பெயர் சொல்லி
அழைக்கும்போது
தேனை   தடவிய
சுளையாய்
நாவில் இனிக்கிறது !!
எனக்கு மட்டுமே!!!

முதன் முதலில்
உன்பெயரை உச்சரித்தேன்
 திரும்பி பார்த்து
புன்னகை பூத்தாய்
இப்போதெல்லாம்
உன்பெயர் தான்
எனக்கு மந்திரமாய் !!!

நேயர் விருப்பமாம்
அவர்களுக்கு தெரியுமா
என்னுடைய விருப்பம்
நீதானென்று ??

உதட்டு பூச்சு
நக பூச்சு
நகை பூச்சு
எல்லாம் சரி
அதென்ன
வெட்கபூச்சு?
யார் சொல்லி கொடுத்தது? 

 

ஹைக்கூ

0 ரசித்தவர்கள்ஹைக்கூ


பனித்துளிகள் காற்றோடு
பூக்களின் மீது
சரசமாட  -
சந்திர ஒளியில்
ஒளியும் -ஒலியும

உன்னை தேடி தேடி
காலணி கூட
பழையதாகி போனது  - ஆனால்
உன்னை பற்றிய நினைவு மட்டும்
புதிதாய் - இன்று பழகியதை போல்.... 

உலகம் அறிந்த அழகி -  நீ
உன் நிழல் தொடும் அருகதை அற்ற
அசிங்கம் நான்
ஆனாலும் நமக்குள் நடந்த
வேதியல் மாற்றம் தான் காதலா?

நிலவில் கால் வைத்த
ஆர்ம்ஸ் ஸ்ட்ரோங்
நிச்சயம் உணர்ந்து இருப்பான்
ஒரு பெண்ணை ஸ்பரிசித்த உணர்வில்
நிலவு ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் !!!

எத்தனையோ நிழல் உருவங்கள்
என் வீட்டு மாடியில்
உன்னை மட்டும் கண்டுபிடித்தேன்
எப்படி என்று கேட்டாய் ??
உன்னை மட்டும் அல்ல - உன்
நிழலையும் சேர்த்து தான்
பதித்திருக்கிறேன் என் விழியில் !!!

உள் வாங்கி வெளி விடும்
மூச்சை கூட கொஞ்சம்
பிடித்து வைக்கிறேன்
உன் வாசம் வரும்போது ,,,!


என்னை பித்தனாகி
விட்டதாய் பெருமைகொண்டாய்
பித்தனாய் இருந்த நான்
புத்தனாய் மாறியதை
அறியாமல் ...!

அடிக்கடி நகம் கடிக்கிறாய்
எங்கள் வீட்டில் என்னை
திட்டுகிறார்கள் - உபயம்
உன்னால்  தானடி  ?

கனலாய் கக்கிய
உன்பார்வை  - என் மீது
அனலாய் மோதியதில்
சென்னை வெயில்
எனக்கு குளிரடித்தது

மோகத்தை மறைக்காதே
உன் முகம் காட்டி
"கண்கள் "
என்னிடம் கெஞ்சுகிறது