சுடும் உண்மை

2 ரசித்தவர்கள்
சுடும் உண்மை 

ஒட்டிய வயிறு
ஒடுங்கிய கன்னம்
கலைந்த கேசம்
கண்களில் மிரட்சி
ஒரு பிடி கவளம்
உண்ணும்வரை...

வண்ண வண்ண தொலைகாட்சியில்
வண்ணமாய் தெரிந்த படத்தில்
வறுமையும் தெரிந்தது
ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிவான்
ஏழை எப்போது சிரிப்பான்??
இறைவனை காணும் ஆவலில்
இறைஞ்சுகிறேன் ???


தினமும் என்னை கவனி
இயந்திரத்தின் மீது
எழுதப்பட்ட வார்த்தை
எழுதபடாமல் இருக்கும்
ஏழையின் வயிறு!!!

குசேலன் கூட
பணக்காரன் ஆனான்
கண்ணனின் கடை பார்வையில்
கடைசி வரை ஏழை மட்டும்
ஏழையாகவே இருக்கிறான்
கரை ஏற்ற கண்ணனை
காணோம் ??

இல்லாதவர்களுக்கு
இலவசம் தரும் அரசே
அவர்களால் இயன்றதை
பெற ஏதாவது செய்
பிச்சை என்ற வார்த்தை
அகராதியில் கூட வேண்டாமே !!!!

ஒட்டு கேட்டு வரும்
அரசியல் வாதி
வரும்போதே
கத்து கொடுக்கிறார்
பிச்சை எப்படி
எடுக்கவேண்டும் என்று!!!

எங்கள் ஊரில்
ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை தான்
ஏழை கூட
பணக்காரன் ஆகிறான்
அரசியல் வாதி உபயத்தில் ....

ஒவ்வொரு முறையும்
தவறாது வந்து
ஒட்டு கேட்டு செல்லும்
தலைவன் தவறியும்
தொகுதி நலன் கருதி
எதுவும் செய்யவில்லை
தன் சுயநலத்தை தவிர??