அவதார புருஷர்

உயிர்கள் ஜனிப்பது
உறவுக்காக
உறவுகளால்
உயிர் ஜனிக்கும்
நான்கு விரல்களாய் இருந்தோம் 
ஐந்தாம் விரலாய் அவதானித்தார்
உன்னதமாய் உயிர் எடுத்து 
உறவாய் வந்த வரவு
சேகர் என்ற பெயரோடு
தமக்கை கொண்டு வந்த சீர் -
உறவாய் வந்து
உயிரில் கலந்த உன்னதம்
இன்று நினைத்தாலும்
கனவாய் தோன்றும்
நிழலாய் மனதில்
நிஜங்கள் ஓடும்
ஒட்டி இருந்த உறவுகள்
வெட்டி போன போது
கண்ணின் இமையென
காத்து நின்ற தனயன்
இறைவனை கண்டதில்லை
இவரை கண்ட பிறகு
இறைவனை காணும்
எண்ணம் எனக்கில்லை
இனியொரு பிறப்பு
இப்புவியில் இருந்தால்
இவருடைய அங்கமாய்
இருக்க ஆசை
இதயமாய் இருந்தால்
இதமாய் இருப்பேன்
காலாய் இருந்தால்
இவரை சுமப்பதில்
இறுமாப்பு கொள்வேன்
எதுவாய் இருந்தாலும்
அதனதன் பலனை
அக்கணமே தருவேன்
இருந்தவரை
இதுவரைக்கும்  
இவரிடம்  
நான் பட்ட கடனை
எப்படி செலுத்துவேன்
நன்றி என்ற ஒற்றை வார்த்தை
இதழ் சொன்னாலும்
இதயம் விம்முகிறது
இவருடைய
கனிவு மிகு
கருணைக்கு
தலை தாழ்த்தி
வணங்கினேன்
வழங்கினேன்
வாழ்த்துப்  பா!!

0 Response to " "