0 ரசித்தவர்கள்
அடையாளங்கள் வாழ்வின் அங்கங்களாய்
பால்ய பருவம் முதலே குறியீடு முக்கியமானதாய்....!!!

வீட்டிற்கு பேர் வைக்கும் பழக்கம் எங்கிருந்து
தொற்றி கொண்டதோ தெரியாதே....!!!!


பால் காரர் வீடு மணிய காரர் வீடு பங்களா வீடு
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.....!!!!

தெருவுக்கு தெரு ஏதாவதொரு வீட்டிற்கு
நிச்சயமெனும் பேரிருக்கும் அடையாளமாய்....!!!!

பேய்க்கு கூட வீடுண்டு அதில் குடியிருக்க மட்டுமே
பயமும் கூடவே உண்டு....!!!!

அக்காக்களின் தோழிகளும் அக்காக்களே ஆனால்
தங்கைகளின் தோழிகள் மட்டுமே தன்னுடைமையாய்....!!!!

மனதிற்குள் பயம் இருந்தாலும் நயந்து பேசியே
கனிய வைக்கும் காதலும் உண்டு....!!!!

வீச்சருவா வேல்கம்பு படைசூழ விரட்டி வரும்
சொந்த பந்தங்களும் தொப்புள் கொடி அறுபட்டால்
அடங்கி போகும் அமைதியாய்.....!!!

எல்லாம் ஒரு நாளில் புரிய வரும் தெரிய வரும்
எல்லாமே வெறும் மாயை தானென மனதினுள்
எங்கோ ஓங்காரமாய் ஒலமிடும் வெளி தெரியாமலே....!!!!

மீண்டும் ஒரு ஜனன மரண போராட்டமாய் வாழ்க்கை
மட்டும் பயணிக்கும் எந்ததொரு சலனமில்லாமல்....!!!! 


------------//---------------///------------------////-----------//////------------


நிதமும் நீ கடந்து போன ஒவ்வொரு நொடியும்
எனக்கு திரும்பி கிடைக்காதாவென ஏக்கத்துடனே
கடந்து போகிறேன்.....!!!!

விடியலில் ஆரம்பிக்கும் உன்னின் துரத்தல்
நன்பகல் பகல் பிற்பகலென விரிந்தே
என்னையும் உன்னோடு சேர்த்து கொண்டே.....!!!!

எப்போதுமே என்னுடன் பயணிக்கிறாய்
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!

நொடி வினாடி நிமிடத்தில் ஜனித்தே
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!

பிறிதொரு நாளின் துவக்கத்தில் எனக்குள்
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!

ஒவ்வொரு நாளும் என்னை அழகுபடுத்துகிறாய்
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!

வருடங்கள் நகர நகர என்னுள் ஒரு பெரியதோர்
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!

காலமே உன்னை வணங்குகிறேன் ஒவ்வொரு
நாளும் என்னை புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!

எதையும் தாங்கும் வலிமையதை வலியால்
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகி போகிறேன் இறுமாப்பாய்/...!!!! 
 
--------------------///---------------------////--------------------/////-----
 
 
ஞானம் என்பதென்ன...?

பிறப்பில் சிறந்ததென இறைவனை கேட்டேன்
பிறந்ததனைத்தும் சிறப்பே என்றான்...!!!

புல்லாய் புழுவாய் எறும்பாய் ஓரறிவாய்
பிறந்தவையெலாம் என எதிர்கேள்வியில் வினவ...!!!

மௌன பார்வையில் முற்பிறவி எதுவோ
அதிலிருந்தே இப்பிறப்பும் என பதிலுரைத்தான்....!!!

செய்யும் செயலும் அறமும் மட்டுமேயன்றி
வேறெதுமில்லை யென கூறி முடித்தான்....!!!!

இப்பிறப்பில் எனை ஏனோ ஆறறிவு படைத்த
மனிதனாய் இருத்தினாயே இதனின் அர்த்தம்
எதை குறித்தே என விளக்கம் கேட்டேன்...!!!!

அர்த்தமாய் சிரித்து விட்டே அவசியமா உனக்கென
அமைதியாய் கேட்டான் ......!!!!

தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேனன்றி
வேறெதும் இல்லையென பதிலுரைத்தேன்.....!!!!

இப்பிறப்பு உனக்கு இந்த வையகமே வாழ்த்துரைக்க
வாழ பிறந்தாயென கூறி முடித்தான்.....!!!

வாழ்த்துரைப்பதாய் கூறினாயே வசைபாடி தானே
மகிழ்கிறதென மனம் வருந்தி கூறினேன்...!!!

எல்லாமே ஒரேநாளில் முடிந்துவிட்டால் ஜனன
மரண கணக்கு தவறாகி போகுமென தவறாமல்
சொல்லி முடித்தான்....!!!

இத்தனை காலமும் இழிந்துரைத்த சமூகம் எனை
எப்போது உச்சி மோந்து பாக்குமென கேட்டதொரு
கேள்விக்கு பலமாய் சிரித்தான் பதட்டமில்லாமல்.....!!!

பயிரிட்ட நாளிலே விளைவதில்லை பயிரெலாம்
விட்டதொரு துளியிலே பிறப்பதில்லை கருவெலாம்
அதற்கென காலகெடு இருக்கிறதே நீ அறியாயோ......!!!!

ஞானம் பெற்றால் மட்டுமே என்னோடு பேசமுடியுமென
எப்போது நீ உன்னை உணர்கிறாயோ அப்போது தானுனக்கு
வையகம் பின்னே வருமென வாழ்த்தி சென்றான்....!!!

ஞானம் என்பதென்ன என வினவினேன் அனுபவித்து
அறிந்து கொள்ளென சொல்லி சென்றான்....!!!

அனுபவிக்கிறேன் இன்றும் ஞானமென எதாகினும்.....!!!!

களவா... காதலா... உயிர்வதையா.... கொடுஞ்செயலா...?
ஏதும் அறியாமல் தத்தளிக்கிறேன் தரையில் விழுந்த மீனாய்...!!!
 
--------------------///------------------////------------------////-------------------------///
 
இலையிலிருந்து வெளியேறிய புழுவாய்
மனம் முழுதும் கீறிய ரணமாய்.....!!!

படைத்திட்ட இறைவனிடம் இறைஞ்சினேன்
இப்படி ஒரு இழி பிறப்பு எனக்கெதற்கென..!!!

சிரித்தவாறே இறைவன் சொல்லி சென்றான்
பொறுமையாய் இருவென.....!!!!

நாட்கள் நகர்வதே பெரும்பாடாய் என்னின்
நகர்தலும் சேர்த்தே....!!!!

மெல்ல மெல்ல எனக்குள் பரிணாம வளர்ச்சியாய்
சிறகுகள் தோன்ற வலிபொறுக்காது அரற்றியே....!!!

அப்போது சொன்னான் இறைவனும் அமைதியாய்
இருவென....!!!

பார்ப்பவர் மனம் கவர அழகாய் பவனி வருகிறேன்
அனைவருமே எனை விரும்பியே...!!!!

இப்போது இறைவன் எனை கேட்டான் இந்த
பிறப்பு உனக்கு வேண்டுமா என...!!!

இப்போதும் இறைவனிடம் வேண்டுகிறேன்
இந்த பிறப்பே போதுமென...!!!

 

 

நினைவு பெட்டகத்தில் சாரலாய் சில துளிகள்

0 ரசித்தவர்கள்
மௌனமான இரவு பொழுதின் சுவர் கோழியின்
சீழ்க்கை மட்டும் அடிக்கடி தூக்கம் கலைக்க ....!!!

தூக்கத்தை துடைத்துவிட்டு இருட்டை வெறித்தேன்
கருமேகம் மழையை தூது விட துடித்தவாறே......!!!!


புள்ளிகள் வைத்தவாறே மழையும் தொடங்கியது
பூமியை நனைத்தவாறே......!!!!

குளிர் தென்றலும் சாமரம் வீச கிளைகளும்
தாலாட்டு பாடி கொண்டே.....!!!!

மண்ணின் மணத்தை நுகர்ந்தவாறே மெல்ல
ஜன்னலின் அருகமர்ந்து மழையை ரசித்தேன்.....!!!

தனிமையில் இருப்பதிலும் எல்லாம் மறந்து
இயற்கை ரசிப்பதிலும் இருக்குமொரு ஏகாந்தமே....!!!!

தூரத்தே தெரிந்த விளக்கொளியில் மழை துளிகள்
முத்துக்களாய் ஜொலித்தவாறே......!!!!!

மின்னிய் முத்துக்கள் என்னின் முகத்தில் தெறித்தே
மறந்து போன என்னின் நினைவை மீட்டெடுத்தே....!!!!

இப்படி ஒரு இரவில் கொட்டும் மழையில் நம்மின்
கலவியும் இருட்டுடன் ஐக்கியமானதே....!!!!

இதழ் பிரித்து இருட்டுக்கு தெரியாமல் நீ கொடுத்த
முத்தமதில் என்னின் கன்னங்களும் சிவந்தே...!!!!

கீழ் உதடும் மேல் உதடுமாய் மாறி மாறியே
உனக்கு தந்த முத்தத்தில் ரகம் பிரிக்க வகை பிரிக்க ...!!!

மன்மதனும் ரதியுமே பொறாமை கொண்டு
மறைந்தோடி போனாரே.....!!!!

ஆடை விலகிய பதுமையை அணு அணுவாய் ரசித்தே
அட்டையாய் ஒட்டி கொண்டே.....!!!!

ஊர்ந்து ஊர்ந்தே மேலேறி உச்சம் முதல் கால் வரையில்
காம கணைகளை வீசியவாறே....!!!

குத்தும் ரோமகற்றைகளும் உணர்ச்சி பிரதேசத்தில்
முத்துக்களை அள்ளி தெளித்தவாறே.....!!!!

அச்சமும் நாணமும் விலகி போன தருணத்தில்
ஆண்மையும் பெண்மையும் மென்மையாய்......!!!!

குறியோடு குறி நோக்கி மோக மழை கொட்ட
கொட்டும் மழையும் சற்றே நிதானித்தே....!!!!

துய்த்ததொரு இச்சையும் இன்று வரையில்
நிஜமாய் மனதில் நிழலாய் படரும் நினைவுகள்....!!!

ஓ...!!! இன்றும் என் தூக்கம் கெட்டே அதனோடு
என்னின் அமைதியும் பறந்தே.....!!!!

வெறிக்கிறேன் இருளை மீண்டும் ஒரு அத்யாயமாய்
ஆரம்பமானது அடுத்த ஜனனம்.....!!!!-----//-----------------////-----------------////--------------------/////------////


மூங்கில் காட்டில் வண்டாய் துளை போட்டே
காற்றின் வேகத்தில் துளையோடே வந்துலாவும்
சங்கீதமாய்....!!!!

என் நெஞ்சு கூட்டில் எப்போது போட்டாயடி
குருதி பெருக துளை விழுந்தே என்னோடு
கலந்தாய் சுவாசமாய்...!!!

தண்ணீரில் அமிழ்ந்த காற்றடைப்பானாய்
சிக்குண்டு தவிக்கிறேன் உன்னொடுனான
அன்னோன்னியமான அருகாமையில்....!!!!

மூச்சு திணறுகிறது சந்தோசத்தில் மனதினுள்
இனம் புரியா உற்சாகமும் சீழ்க்கையுமாய்
மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட....!!!!

ஆசை ஆசையாய் கேட்கிறது மனம்
அள்ளி தரும் எச்சில் முத்தங்களை
எண்ணிக்கையே இல்லாமல் சிவக்க சிவக்க....!!!!

வாழ்க்கையின் தத்துவமே இதைத்தானோ
சொல்லுகிறதோ இன்பத்தின் ஊற்றாய்
உணர்ச்சி குவியலோடு புணர்ச்சியுமாய்....!!!

சர்ப்பம் தீண்டிய உடலாய் மேனி முழுதும்
வேகமாய் பரவுகிறதே உன் மீதான ஆசை
உன்னை முழுதுமாய் ஆக்ரமித்தே....!!!!

அணு அணுவாய் நுகர்கிறேன் உன்னின்
வாசத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரையில்
இப்போதெல்லாம் பெண்ணின் வாடை
மிகவும் பிடித்தமானதாய்....!!!!

மெல்ல மெல்ல உச்சத்திற்கு செல்கிறேன்
உன்னின் துணையோடே.....!!!! 
 
-----//--------------////--------------------/////-------------------/////---------------


சிறகுகள் இல்லாமலே என்னின் எண்ண பறவை
பறக்கிறதே நீயிருக்கும் இடம் தேடியே.....!!!!

வாசம் தேடும் மலராய் உன்னின் வாசம் தேடுகிறதே
என்னின் சுவாசமும்....!!!!

மௌன ஒத்திகை நடத்துகிறேன் உன்னோடு பேசவே
மனனமாய் சில வார்த்தைகளும் கூடவே...!!!!

நமக்குள் இருப்பதெல்லாம் வெறும் நட்பென
நினைக்கிறேன் சில சமயங்களில்....!!!

என் மீது நீ காட்டும் கரிசனம் அவ்வபோது என்னின்
தாயார் காட்டும் அன்பாய் தெரிகிறது.....!!!!

உரிமையாய் நீ கண்டிக்கும் போதும் சரி
உறவாடி கண்ணடிக்கும் போதும் சரி ....!!!!

எனக்குள் பிரளயமாய் பிரவாகமாய் நீ
ஆக்ரமிக்கும் போது தான் உணர்கிறேன்
நம்மிடையெயான காதலை...!!!

தொலைந்து போகிறேன் உனக்குள்ளே
தொலைத்து கொள்கிறேன் மீட்பதெற்கேனும்
நீ வருவாயென...!!! 
 
 
//----------////-------------/////----------------------//////---------------//////--------


குளத்தில் தெரிந்த நிலவின் நிழலை நிஜமென
துரத்தும் பேதையாய் மனது...!!!!

கழுதையாய் மனது பொதிகளை சுமந்தே
நினைவு படுகையில் சுமை தாங்கியாய்.....!!!

பெண்ணெனும் மாயை என்னையும் கவர்ந்தே
நானும் கவிழ்ந்தே .......!!!!!

நித்தமொரு பிம்பமாய் காட்சி பிழையில்
பாதரசம் தாங்கிய பிரதிபலிப்பில்......!!!!

விழிகள் இருந்தும் பெயர் தெரியா நகருக்கு
தன்னந்தனியனாய் பயணிக்கிறேன்.....!!!

இன்றேனும் கடந்திடுமோ என்னை தொடரும்
நிழலும் தான் வெளிச்சம் பாயும் ராப் பொழுதில்....!!!!

முற்றும் துறக்க மனமில்லாது பற்றி கொண்டு
நிற்கிறேன் ஆசையெனும் தூண்டிலோடு....!!!!

//---------------////----------------////------------/////---------/////-----------////----

பனி பெய்யும் பொழுது கவிந்த இருட்டும்
களவு செய்யவும் கலவி செய்யவும்
ஏற்றதாய் ....!!!!!

இரண்டுமே ஏதோ மோகத்திலும் வேகத்திலும்
கவர்ந்து செல்லும் மானுட தேவையாய்
இருப்ப்தும் எடுப்பதுமாய் வாழ்க்கை....!!!!

ஊர்ந்து செல்லும் காலம் கூட சற்றே
ஒய்வாய் மௌனமான இருட்டும் கூட
மெல்லமாய்.....!!!!

சலனமே இல்லாமல் காற்றும் கூட
பூக்களோடு களித்து கொண்டே
மகரந்தசேர்க்கைக்கு கட்டியமாய்...!!!

இரண்டாம் சாமம் நெருங்க நெருங்க
எங்கோ கேட்கும் நாயின் ஓலம் கூட
மனதிற்குள் சங்கடமாய்......!!!!

இரவின் தாலாட்டில் தொட்டிலில்
தூங்கும் மழலையாய் மனது
தூக்கம் தேடியே.....!!!! 
 
//------------////------------------------/////--------------------////------------- ////

என்னின் நாட்குறிப்பில் பல நாட்கள்
தொலைந்து போன பக்கங்களிலிருந்த சில
தொலையாத உன்னின் நினைவுகள் என் மனதில்.....!!!!

ஆழமாய் மூச்சிழுத்தே சுவாசிக்கிறேன் மனதினுள்
வெற்றிடமாய் ஆகி போன உன்னின் இருப்புகள்
இன்றும் வெற்றிடமாய்.....!!!

மந்தகாசமாய் புன்னகைக்கிறேன் அதனொடே
மறைக்கிறேன் என்னின் மன அழுத்தங்களை
மருந்திட்டாலும் மறையாத வடுக்களை....!!!

எப்படி வந்தாய் ஏன் வந்தாய் எப்போது சென்றாய்
ஏதும் நானறியேன் வந்ததும் இருந்ததும் சென்றதும்
நீ தான் ஏதும் சொல்லாமலே......!!!

உன்னின் மௌனம் எனக்கு சம்மதமாய் அதே
மௌனம் தான் என்னை கொல்லும் விடமாய்
முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்....!!!!

இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறேன்
ஒரு தலை முழுதும் பாரமாய் அழுத்தியே
சுக்குநூறாய் வெடித்ததாய் உணர்கிறேனே....!!!!

என்னோடு பேசிய பழகிய விரும்பிய நாட்கள்
மட்டுமே கனவாய் இருந்ததோ...? நிஜமாகி போன
உறவுகள் மட்டும் பொய்த்து போனதே....!!!!

வெற்றிடமாகி போன இதயத்தை அப்படியே
விட்டுவிட்டேன் மறுபடியும் நீ வரக்கூடுமென
மனதிற்குள் ஒரு நப்பாசையாய்....!!!

///---------------////-------------------/////----------------/////---------------//-///-///


மௌன ஒத்திகையில் மனம் மட்டுமே லயித்து
கலவி குறித்தே சலனங்களில் சஞ்சலம் மறந்தே

நள்ளிரவு தொடும் நேரம் ஏகாந்தமாய் மனதினுள்
துள்ளி குதித்தே கரை புரண்டோடும் ஏக்கத்தின்
இன்னொரு முகமாய்....!!!!

பின்னிய சர்ப்பமாய் புணர்ச்சி விதிகளை
மீறியதோர் கலவியும்....!!!!

ஆதாம் ஏவாளை நினைவு படுத்தியே
ஆடைகளை துறந்தே ஆசைகளை
வரித்தே....!!!!

ஜனன மரண ஒப்பந்தத்தின் தொலைந்து போன
பக்கங்களாய் பெண் சிசுவதையும்...!!!

பெருமை கொள்ள மனம் நாணுதே பாரத தாய்
திருநாடு எனும் பேச்செடுக்கையில்லெல்லாம்....!!!

இப்படி ஒரு இழி செய்லை செய்வதும் ஒரு
பெண்ணெனும் போதே நெஞ்சமெல்லாம்
பதறுதே....!!!

தாய் திருநாடு தாய் மொழி எல்லாம் சரி
பெண் என்றாலே போக பொருளாய் எண்ணும்
நிலை என்று மாறும் இந்த அவனியில்...!!!!

வெட்கி தலை குனிகிறேன் ஆணாக பிறந்ததையெண்ணி.....!!!! 
 ----------////---------///-----///....///-------/////-------------------//////////-----------/////
 
 

நினைவாய் சில நிமிடங்கள்

0 ரசித்தவர்கள்
மகுடியாய் உன்னின் பார்வையில்
சிக்குண்ட பாம்பாய் நானும்.....!!!!

இரையை விழுங்கும் பாம்பாய்
என்னை விழுங்கி கொண்டே.....!!!!

புன்னகையெனும் மந்திரத்தை
ஜெபித்துக் கொண்டே.....!!!!

மீண்டும் மீண்டும் பார்க்க கொக்கியாய்
உன்னின் விழிகள்.....!!!!

சொக்கியே வீழ்ந்ததே என்னின்
ஆண்மையும் உன்னிடத்தே......!!!!

வீழ்கிறேன் வீழ்ந்தேன் வீழ்வேன்
உன்னின் பார்வையின் வீச்சில்......!!!!

கூர் முனையை விட உன்னின்
கூரிய விழியின் காயங்கள் உதிரமின்றி.....!!!!

தூண்டில் புழுவில் மாட்டும் மீனாய்
என்னின் மனது.....!!!!

உயிர் போகும் அவஸ்தையில்
துடிப்பும் தவிப்புமாய்....!!!!

அனைத்தும் அறிந்தும் அறியாதாய்
அலட்சியமாய் நீயும்.....!!!!

மருவி மருவி மருகி மருகி
உருகி உருகி உயிராய் கலந்தாயே

கபடமும் கள்ளமும் சேர்ந்தே
அலைகழித்தாயே......!!!!

உன்னின் குணம் மாறாதா
உனக்குள்ளும் ஈரம் வாராதா...!!!!

காதலின் வேதனையில் நானும்....!!!! 
-------//-------///-------//---------///---------//--------
பொழியும் பௌர்ணமி நிலவு பனி படரும்
இரவு ........!!!

தூக்கத்தை தொலைத்த விழிகளில் உன்னின்
பிம்பம் மட்டுமே.....!!!!

பார்வையால் சந்தித்தோம் மனமெல்லாம்
தித்திப்பாய்....!!!!

இதே ஊரில் தான் இருக்கிறாய் என்றதோர்
நிம்மதியோடே உன்னை பிரிந்தே......!!!

ஆனாலும் வந்து வெகு நேரமாகியும் உன்
பிம்பமது மறையாது கண்ணிற்குள்

நிற்கிறதே விழி முழுதும் நடக்கிறாய்
தவழ்கிறாய் பறக்கிறாய் நீக்கமற நிறைந்தே.....!!!!

ஒருமுறை சந்தித்த போழ்தே இப்படியெனில்
எப்போதும் என்னுடனே எனில் என் செய்வதோ???

விலாசம் தெரியாது விவரம் தெரியாது
பெயர் மட்டும் அறிந்தே .......!!!!

உனது பெயரை இது வரை எத்தனை முறை
கூப்பிட்டிருப்பேனென எண்ணிக்கை தெரியாது.....!!!!

ஆனால் யார் யாரோ திரும்பி பார்த்தே என்னை
திட்டி சென்றனரே.....!!!!

உன் பெயர் யாருக்கும் இருக்க கூடாதென
இறைவனை பிரார்த்தித்தேன்.....!!!!

உனது பெயர் எவரும் அறியா பெயராய் இருத்தல்
சுகமே....!!!!

மாயம் செய்தாய் மயக்கி விட்டாய் என உன் மீது
பொல்லாப்பு சொல்ல மாட்டேன்....!!!!

ஆனால் ஒரே வார்த்தையில் சொல்வேன்
எனையும் நீ வீழ்த்திவிட்டாய்.....!!!!

ஆயுதம் ஏதும் இல்லாமலே பார்வை
கணையால் என்னை வீழ்த்தி விட்டாய்....!!!!

மன்மதன் கணையும் உனக்கு ஆதரவாய்
என் மீது பாய்ந்தே....!!!!

இருக்கையில்லாமல் தவிக்கிறேன் எதையோ
இழந்ததாய் மனமும் பீடிகையோடே.....!!!!

என் தவிப்பும் என் துடிப்பும் உனக்கு புரிகிறதா
உனக்கப்படி ஏதேனும் நிகழ்கிறதா...?

வினாக்களோடு உன்னிடமே வருகிறேன்.....!!!! 
--------//---------///---------//---------///---------//---------//--------
தொலைந்து போன உறவுகளை தேடியே
தொலைந்து போனேனே...!!!!

வாழ்க்கை எப்போதும் விசித்திரமாய்
காலியாய் கிடக்கும் மூடி திறந்த குடுவையாய்....!!!!

வெறுமையாகி போன வெற்றிடமாய்
மனதின் ஓலங்கள்......!!!!

சிதிலமாகி கடந்து போன கானல் நீராய்
என்னின் கனவுகள்....!!!!

முத்துக்களை பெற்றெடுக்காத மலடான
சிப்பிகள்.....!!!!

நெஞ்சில் பாரமாகி போன நேற்றின்
எச்சங்கள்....!!!!

கடலில் தவறி போன பொக்கிசமாய்
என்னின் பருவங்கள்.....!!!!

தினமும் தேடுகிறேன் தேடலே
வாழ்க்கையாய்....!!!! 
---------//----------///-----------//----------///---------
இருட்டு போர்வைக்குள் அவசரமாய்
நுழையும் இரவின் பொழுது.....!!!!

அந்தி மந்தாரையும் அல்லியும் போட்டியோடே
பூத்த நிலவு காயும் பொழுது....!!!!

கண்கள் பூத்து போய் தூக்கத்தை மெல்ல
மெல்ல தின்று கொண்டே....!!!!

பார்வையில் என்னை விழுங்கினாயே
ஈர்க்கும் இரும்பாய் உன்னை ஒட்டி கொண்டே....!!!

மௌனத்தை மட்டுமே பேசிகொண்டு உன்னிடம்
மொத்தமாய் என்னை ஈந்தேனே....!!!!

வாகை சூடி என்னை வெற்றி கொண்ட
களிப்பில் இறுக்கி கொண்டாயே....!!!

எறும்பு ஊற கல்லும் தேயுமாமே மென்மையான
உனக்குள்ளும் அப்படி ஒரு ஆவேசம்....!!!

எனக்கும் கூட சற்றே கலக்கமாய்
எலும்புகள் நொறுங்கும் சத்தம் உனக்கும் கேட்டதா??

ஊடலில் நீ எப்போதுமே ஆணாகி விடுகிறாய்
என்னை மொத்தமாய் சுவீகரித்து கொண்டு....!!!

இயக்கங்கள் எல்லாமாய் ஆனாய்
அமைதியை என்னிடம் தந்து விட்டு....!!!

சக்தியின் சக்தியை என்னிடம் காட்டினாயே
எனக்குள்ளும் சக்தி வந்தே.....!!!!

மழை ஓய்ந்த பின் வருமே தூவானமாய்
சல சல வென பேசி கொண்டே....!!!

தூக்கத்தை தொலைக்கிறேன் எதற்காக
எனக்கே தெரியவில்லை....!!!!

கைகள் ஆட்டி கண்கள் சுழற்றி நீ காட்டும்
திரை படத்தை தவற விட மனமில்லாமல்....!!!!

சிறு குழந்தையாய் நீ பேசும் பேச்சுக்கு
செவி சாய்க்கும் தாயாய் .....!!!!

அப்பழுக்கில்லாத உன்னின் அன்பிற்கு
ஈடாய் என்னை தவிர தருவதற்கு வேறில்லை.....!!!!

என்னையும் மொத்தமாய் எடுத்து கொண்டாய்
இப்போதும் தெரியவில்லை நீயா... நானா...?

எனக்கு வந்த ஐயப்பாடு வேறொன்றுமில்லை
நீ கணவனா அல்லது கள்வனா....!!!!

இத்தனை முடித்த பிறகும் நீ மட்டும்யெப்படி
அமைதியாய் இருக்கிறாய்...!!!

சாந்தம் என்பது அனைவருக்கும் பொதுவோ....!!!! 
-----------//-----------///----------//-----------///-----------//---------
நீண்ட நாட்களுக்கு பிறகாய் நம்மின் முதல்
சந்திப்பு....!!!

நெடு நாளைய நட்பின் பிரதிபலிப்பாய்
அவரவர்க்கு பிடித்தமானவைகளோடு....!!!!

பரஸ்பரம் பரிமாறிகொண்ட பின்னரே
பீடிகையோடு பேசினாய்....!!!!

பிறிதொரு நாளில் என்னிடம் சொல்ல
மறந்த ஒரு விசயமதை துருவினாய்....!!!!

புதை மணலாய் மூடிப்போன என்னின்
காதல் மெல்ல உயிர் பெற்றே......!!!!

நீ என்னை இப்போதும் நேசிக்கிறாயா யென
நீ கேட்ட ஒற்றை வார்த்தையில்
நீ இன்னும் உயிரோடுதானிருக்கிறாய் யென்பதை
என்னுள் உணர வைத்தாயே....!!!

மறந்ததாய் எண்ணியிருந்த என்னின் காதலில்
துளிராய் வந்தாய்.....!!!!

தனிமை பசியை தண்ணீராலே தணித்துக்
கொண்டே.....!!!

வெப்பத்தையும் வேட்கையையும்
புழுக்கத்தையும் ஒதுக்கிகொண்டே
வேகி கொண்டிருக்கும் என்னின்
சர்ப்ப உணர்ச்சிகள்.....!!!!

காதலின் ஆழ் மனது போராட்டமாய்
அனுதினமும் நனையும் என் தலையணைகள்.....!!!!

சிரிப்பதாய் காட்டிக்கொண்டே முகமுடியோடே
திரியும் கோமாளியாய்.....!!!!

அனைவரும் சிரிக்கிறார்கள் என்னின்
அழுகையை ரசித்தவாறே....!!!

நிஜம் யாருக்கும் தெரியாதே.....!!!! 
-----------//-------------///-----------//----------------///---------
உனக்கான காத்திருப்புகள் விருப்பு
வெறுப்பில்லாமல்.....!!!!

பூங்காவின் இருக்கைகள் காலியாய்
எல்லோரும் என்னை ஏளனமாய் பார்த்தப்படி....!!!

கடிகார முட்கள் மிக மிக மெதுவாய் செல்வதாய்
என்க்குள் ஒரு சந்தேகமாய்.....!!!!

அவ்வபோது நடைபாதையை பார்த்து கொண்டே
உன்னின் வருகைக்கு காவலாய்......!!!!

நம்பிக்கையின் கடைசி ன்னும் முடிந்து
அவ நம்பிக்கை ஆரம்பமாய்.....!!!!

அவசரமாய் ஒரு குறுந்தகவல் மிளிர
பதட்டமாய் பார்க்கிறேன்......!!!!

வர முடியவில்லை யென பச்சை எழுத்தில்
பளிச்சென......!!!!

விவரமறிய கைபேசியை சொடுக்கினேன்
அவசரமாய் துண்டித்தாய் பதில் சொல்லாமலே.....!!!!

அது தான் நம்மின் இடைவெளிக்கு ஒரு
அஸ்திவாரமாய்.....!!!!

இப்போதெல்லாம் உன்னின் அழைப்புக்கு
பதில் சொல்ல கூட இஷ்ட படாமலே .....!!!!

அழைப்பு மணி ஒலிப்பது போல என்னின்
கைபேசியின் ஓசை கூட.....!!!!

சலனமே இல்லாமல் கொறித்து கொண்டே
திரையில் சுவாரஸ்யமாய் விளையாட்டை ரசித்த படி....!!!

அழுது அழுது ஓய்ந்த என்னின் கைபேசியை
எடுத்து பார்த்தால் எண்ணிக்கையில் உன்னின் அழைப்பு....!!!!

இப்போதாவது உணர்வாயா என்னின் காதலை
காத்திருப்பின் வலியை நான் உணர்ந்தது போல்....!!!!

மனது கேட்காமல் மீண்டும் உன்னை அழைக்கிறேன்
மறுபடியும் துண்டிக்கிறாய் கருணையில்லாமல்....!!!!

தொடர்கிறது மௌனமாய் ஒரு பனிப்போர்
காதலில் மட்டுமே நடக்கும் முடிவு தெரியாமலே....!!!!! 
---------//-----------///----------//------------///-----------//----------------
 
இருட்டுக்கு கேட்காமல் மெல்ல பேசிய
முத்தங்களின் பரிமாற்றங்கள் .....!!!

முரட்டு பிடிவாதமாய் என்னை இறுக்கி
கொண்டே புன்னகைத்த தருணம்...!!!

வலித்தாலும் இயல்பாய் இருப்பதாய்
காட்டி கொண்டே உள்ளுக்குள் கலக்கமாய்....!!!

மெல்ல மெல்ல நீ என்னை ஆக்ரமித்தாய்
சீற்றமாய் உன்னின் ஆவேசம்....!!!!

நரம்புகள் தெறித்து மூச்சு காற்றும்
சூடேறி கழுத்தோரமாய் வெப்பத்தின் சுவடு....!!!!

மொத்தமாய் என்னுள் பரவியே
மேவியே மேவியாய் வானத்துள்....!!!!

பரவசமும் பரவசமுமாய் நெஞ்சில்
சில்லென குளிர்க்காற்று.....!!!!

ஒரு நொடியில் கொட்டும் மழையாய்
துளிகளாய் ......!!!!

எஞ்சியிருந்த சில நொடிகளில்
பேசிய ஒரே வார்த்தை முத்தம் மட்டுமே....!!!!

வாசல் திறக்கும் சத்தம் கேட்டே
முழிக்காமலே சொன்னாய் போய் வா என்று...!!!!

இருட்டு விலகுமுன்னே உன்னை விலகி
செல்கிறேன் காத்திருக்கும் குழந்தைக்கு பசிக்குமே...!!!!

உடலை விற்றாலும் அவளுக்குள்ளும்
பொங்கி வழிந்தது தாய்மை.....!!!! 
------------//------------///--------------//---------------///----------
காற்றின் வேகத்தில் மனக்குதிரை அதில் சவாரிக்கும்
உன்னின் நினைவுகள் .....!!!!!

பழகிய இடங்களும் பழகிய நாட்களும்
நாட் குறிப்போடு நீ உடுத்திய வர்ணங்களும்.....!!!!

ஒவ்வொரு நாளும் ஓரே நிறத்தில் உடுத்தி
நம்மின் ஒற்றுமையை போற்றினோமே.....!!!!

மணல் வீடு கட்டும் சிறாரை போலே
மனதில் கட்டினேனே ஆசையாய் .......!!!!!

அலையடித்து சரிந்து விழும் மணலாய்
என்னின் ஆசைகளும் சரிந்தே....!!!!

காதலில் அனைத்துமே அழகு தான்
பிரிந்து போவதும் தான்.....!!!!

சேர்வதில் காட்டும் ஆர்வத்தை சிறிதேனும்
பிரிதலில் காட்டுதல் சுகமே....!!!!

அறிதலில் புரிதலில் இருந்துதான்
உருவானதோ காதலும் கூட....!!!

விட்டு கொடுக்க சொல்லி கொடுத்ததும் நீயே
உன்னையும் சேர்த்தே.....!!!!

விட்டு கொடுத்தேன் வெறுமையை
சுவைத்து கொண்டே.....!!!! 
--------//-----------///------------///-------------//--------------
கொட்டி தீர்த்தது மழை தன் காதல் தோல்வியை
கண்ணீரில்......!!!!
அப்படி ஒரு மழை நாளில் தான் அறிமுகமே

உல்லாசமாய் நனைந்தே நானும் குடையோடு
சர்வ ஜாக்கிரதையாய் நீயும்....!!!

இருட்டை போர்த்தி கொண்டு மழையும்
சாரலை தெளித்ததே பன்னீராய்....!!!

மின்னலில் தெரிந்த உன்னின் சிநேகத்தை
புன்னகையில் காட்டினாயே.....!!!

விளம்பர படத்தில் வருவது போல்
உன்னின் பற்கள் பிரகாசமாய்....!!!!

மறுமொழி சொல்லாமலே அண்டினேன்
குடைக்குள்....!!!!

ஒரு பூக்கடைக்குள் நுழைந்த அனுபவமாய்
சுகந்தமான மணம் அதுவும் பரிச்சயமாய்....!!!

பெண்ணின் கூந்தலுக்கு மட்டுமல்ல
 பெண்ணுக்கும் கூட மணம் உண்டென
உணர்ந்த தருணமது.....!!!!

மரிக்கொழுந்து பூவின் வாசனையை
என் நாசி உணர்ந்தது அதுவே உன்னின்
வாசமென உணர்த்தியது.....!!!!

மழையும் நின்றது அதுவாய்... ஆனந்த மழை
பெய்ய தொடங்கியதே எனக்குள்....!!!

தினமும் மழை வந்தாலென்ன என
மழை கடவுளை பிரார்த்திக்கிறேன்
உன்னை கானும் ஆவலில்....!!!!

வீட்டில் ஐந்தாறு குடைகள் இருந்தாலும்
வீசிய கையாய் வருகிறேன்....!!!!

மழை வருமென தெரிந்தே நீ வரும்
சமயம் அறிந்தே....!!!

உன் ஒற்றை புன்னகை என்னை
மழைக்காக வேண்ட வைத்ததே.....!!!

இப்போதும் மழை பெய்கிறது
சுகமான வலிகளோடு மழையில்
நனைந்தே நானும்.....!!!! 
------------//------------///-----------//--------------///---------//
சிலுசிலுக்கும் காற்றில் அலையடிக்கும் கரையில்
சில்மிஷமாய் சில நிமிடமெனும் உன்னோடு....!!!

சுவாரஸ்யமாய் பேசும் உன்னின் முகமதியை
முடி ஒதுக்கும் வடிவழகை காணவேனும்....!!!

ஒய்யாரமாய் உக்காந்து கொண்டு ஒருக்களித்து
இடம் கொடுத்து உரசி கொள்ளும் சுகம்வேனும்....!!!

மௌனமாய் அலையின் ஓங்கார ஓசையை
அனுபவிக்க வேனும்....!!!

யாரும் அறியாவண்ணம் உன் இடையில்
விரலால் கோலம் போட வேனும்....!!!

திரை படத்தில் வருவது போல் வாயசைக்காத பாட்டோடு
முகம் முழுவதும் கேசத்தோடு கொஞ்ச வேனும்....!!!

செல்லமாய் நீ சினுங்கும் போது உன் கன்னம்
கிள்ளி முத்தமிட வேனும்....!!!!

இத்தனையும் வேனும் இன்னும்
எங்கிருக்கிறாய் சீக்கிரமா தான் வாயேன்.....!!!

---------------//----------------///-------------//----------------///-----------//
வர்ணமாய் வண்ணமாய் என்னுள்
வந்தாயே...!!!!

வார்த்தைகளில் தேனை கலந்தாயே
அமுதாய் பொழிந்தாயே....!!!!

அமைதியின் அர்த்தத்தை அறிய
வைத்தாயே....!!!

பொறுமையை பெருமையாய்
உணர்த்தினாயே.....!!!

இளகிய மனதாய் என்னையும்
இளக வைத்தாயே...!!!

நிதானத்தை பிரதானமாய்
அவதானித்தாயே...!!!!

சொல்லும் செயலும் ஒரு சீராய்
எண்ணமும் எழுத்தும் ஒரு கோடாய்....!!!

சிந்தையில் உனை நிறுத்தி
நிலையாய் இருத்தியே....!!!

மனமுழுதும் பரவசமாய்
பட்டாம் பூச்சியாய்....!!!!

எனக்கே என்னை பிடித்து போனதே
என்னை நீ நேசிக்க தொடங்கிய அந்நொடி....!!!

ஆயிரமாய் பூத்தது கனவுகள்
தூக்கம் பிரியா விடையாய்....!!! 
----------------//-------------///---------------//----------///-----------//
தினமும் வந்து போகும் கால ஓட்டமாய்
என்னின் மனதில் வந்து போகும் பால் நிலவே....!!!!

வற்றாத நதியும் பசுமையான வெளியும்
மாறாத இலக்கணமாய் இயற்கையும்...!!!

கொடிதாய் எததனை இருந்தாலும்
கடிதாய் எத்தனை தடையானலும்

நின்னின் கடைகண் பார்வை ஒன்றே
போதுமே அனைத்துமே துகளாய்....!!!!

உன்னுள் ஓளிந்திருக்கும் மோகன
புன்னகை கட்டியம் கூறுமே காளையெனக்கு....!!!

பொய் கோபம் காட்டி நீ என்னை
கடிந்துரைப்பாயே அதுவும் கூட அழகாய்...!!!!

விழிகளில் நாட்டியமாடியே இருந்தயிடத்தில்
என்னை சுழல வைப்பாயே ....!!!

சாட்டையாயிருந்து பம்பரமாய் என்னை
சுழற்றியே .....!!!!

விசையாயிருந்து எனக்குள்ளே இருந்த
சக்தியை வெளிகொணர்ந்தாயே....!!!

இத்தனையும் செய்துவிட்டு எங்கே
சென்றாய் ......!!!!

இழந்தததாய் எனக்குள் வெறுமையாய்
இருப்பதாய் எண்ணிகொண்டே .....!!!!

காலத்தின் ஓட்டத்தில் காளை நானும்.....!!!! 
----------//---------------//--------------///----------------///---------
 
 
 
 
 
 
 


கவிதை தொகுப்பு

0 ரசித்தவர்கள்
அடிக்கடி ஜன்னலை கடக்கிறது என்னின் பார்வை
ஜன்னலுக்குளிருக்கும் நிலவை ரசிக்க....!!!!

இந்த நிலவு பார்வை பட்டாலே மோட்சம் தான்
சிறகுகள் இல்லாமலே பறக்கலாம் மேலே....!!!

விண்ணிலிருக்கும் நிலவு கூட இதன் மேல்
சற்றே பொறாமை கொண்டே .....!!!!

அல்லி குளத்தில் கூட தன்னின் பிம்பத்தை
காட்ட மறுத்தே மேகத்துள் மறைந்தே.....!!!!

காற்றுக்கு கூட உன்மீது மோகமாய் உன்னை
தழுவுகிறதே ஆடையோடு அவசரமாய்....!!!

உன்னழகை எனக்கு வடிவமாய் காட்டியே
மெய் மறக்க செய்கிறதே....!!!!

எனக்குள்ளே ஒலிக்கும் ரகசிய பாஷைகள்
உனக்கு மட்டும் புரிந்த பரிபாஷைகளாய்....!!!!

சிக்கி தவிக்கும் என்னின் மூச்சு காற்றின்
வெப்பம் கூட குளிர் தென்றலாய்
உன்னின் ஸ்பரிசம் பட்டே......!!!!

நிஜத்தை தொடரும் நிழலாய் உன்னை
தொடரும் என்னின் பார்வைகள்....!!!!

மேய்ப்போனிடம் வாஞ்சையாய்
வந்து நிற்கும் ஆட்டு மந்தையாய்....!!!!

உன்னை சுற்றியே நானும் உன்னை
பற்றியே என்னின் மனதும்....!!!! 
 
-------//------//------//--------//------//
 
அழகாய் தெரியும் அத்தனையும் அழகாய்
இயற்கையின் வண்ணத்திலே..........!!!!

வானவில்லும் வண்ண மயிலும்
துள்ளும் மானும் நீந்தும் மீனும்....!!!!

காற்றும் மழையும் பரவியே
புவியும் வானும்.....!!!!

தகதகக்கும் நெருப்பும் தகிக்கும்
சூரியனும் இயற்கையாய்....!!!!

வாழ்க்கை பாடத்தில் எல்லாமே
நேரெதிராய் எதிரெதிர் குணங்களோடே...!!!

உயிராயிருக்கும் மனிதரில் எல்லாமே
ஒரு சாராய் பேதமில்லாமல்.....!!!!

உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில்
வெறுப்பையும் சுமந்தே....!!!!

வஞ்சமதை நெஞ்சமதில் சுமந்தே
விஷமாய் கக்கும் மனிதமே....!!!!

உன்னுளிருக்கும் ஆன்மாவின்
சொரூபத்தை மறந்ததேனோ???

அமைதியும் அன்பும் பண்பும் மட்டுமே
அதனின் இயல்பாய்.....!!!

இயல்பை தொலைத்தே இன்னலை
அழைக்கிறாயே......!!!!

வாழ்க்கையும் ஒருமுறைதான்
வாழ்வதும் ஒருமுறைதான்
வாழ்த்தட்டும் தலைமுறையும்....!!!
 
--------//--------//--------//--------//-------//
 
வசீகரமாய் உன்னின் புன்னகை மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்...!!!!

என்னிடம் நீ பேசிய வார்த்தைகளை விட
உன்னின் பார்வை பேசியதே அதிகமாய்....!!!

அநேகமாய் அன்னோன்னியமாய் என்னும்
வார்த்தைகள் அடிக்கடி விழும் உன்னின் பேச்சில்....!!!

ஓரப்பார்வை பார்க்கும் போதும் ஒருக்களித்து
பார்க்கும் போதும் வீழ்கிறேன் நெடுமரமாய்.....!!!!

வெயில் வேளையில் குளிர்ச்சியாய் உன்னின்
பார்வை என் மீது பட்டால் போதும் சிம்லாவும்
கூப்பிடு தூரம் தான்....!!!

ஹாஸ்யமாய் பேசும் போது வாய் மூடி
சிரிப்பாயே சிரிப்புக்கே அர்த்தம் தந்தாய நீயே....!!!

பூமிக்கு வலிக்குமா உன் பாதம் வலிக்குமா என
மழலையாய் நடப்பாயே நாட்டிய விருந்தாய்.....!!!!

அடர்த்தியாய் கட்டிய மல்லிகையாய்
உன்னின் கருங்கூந்தல் இடைவரை நெளிந்தாடுமே.....!!!!

தினமும் தான் பார்க்கிறேன் ஆனாலும் புதிதாய்
பிறந்ததாய் நீயும்.....!!!!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்
உன்னை எண்ண எண்ண ஓராயிரம் கவிதைகள்
உனக்கே சமர்ப்பிக்கிறேன்......!!!! 
 
-------//-------//------//-------//-------//-------//------/////------
 
துரத்தி செல்லும் நினைவுகளை
எட்டி பிடிக்கும் கனவுகள்.....!!!!

இரவின் போர்வையில் நித்தம்
நடக்கும் நித்திரை பயணமது.....!!!!

விழியில் விரியும் காட்சிகள்
விழிகள் மூடிய வினாடிகளில்....!!!!

தூக்கமென்னும் போதையில் விடியும்
வரையில் விழாகோலமாய்....!!!!

எது வேண்டுமானலும் நடக்கும்
உயிர் போய் உயிர் வரும் உன்னத விளையாட்டு....!!!

மரண ஒத்திகையில் மனங்கள் பேசும்
மௌன மொழிகள்.....!!!!

விழித்திருக்கும் பொழுதுகளை தின்று
கழித்த இரவுகள்....!!!

விடியலின் அஸ்தமனத்தில் இரவுகளின்
விடியல்கள்....!!!!

ஒவ்வொரு நாளின் இறுதியில் இன்னுமோர்
நாளுக்காய் எத்தனிப்புகள்....!!!!

இத்தனையும் தாண்டியே வாழ்க்கையும்
ஓட்டமாய்.....!!!! 
 
-----//------//-----//-----//-----//------//-----//-----//-----//
 
தினமும் பார்க்கும் கண்ணாடி தாயினும்
இன்று மட்டும் ஏனோ பளீரென காட்டுகிறதே.....!!!

தினமும் தேய்க்கும் பற்கள் தாயினும் இன்று
மட்டும் ஏனோ பளிச்சென தெரிகிறதே....!!!

கோரையாய் நிற்கும் என்னின் தலை முடி கூட
இன்று மட்டும் ஏனோ மிருதுவாய் இருக்கிறதே....!!!

தினமும் உடுத்தும் உடைகள் தாயினும் இன்று
மட்டும் ஏனோ புதிதாய் தெரிகிறதே.....!!!!

தினமும் சாப்பிடும் கைகள் இன்று மட்டும்
ஏனோ நிதானமாய் எனக்கு கொடுக்கிறதே...!!!!!

கோபத்தை கொப்புளிக்கும் என்னின் வார்த்தைகள்
வீணையாய் மீட்டுகிறதே.....!!!!

என்னுள் வந்ததிந்த மாற்றத்தை என்னால்
மட்டுமே உணர முடிகிறதே.....!!!!

இதெல்லாம் எதனால் எப்போதிருந்து என்னுள்
இந்த மாற்றம்....!!!!

மிருகமாய் திரிந்த என்னையும் மனிதனாய்
மாற்றியதெது...??

இப்போது தான் எனக்கு எல்லாம் புரிகிறது
நேற்று என்னிடம் விலாசம் கேட்டு சென்றாயே....!!!!

விலாசம் கேட்டு தான் சென்றாயா இல்லை என்னை
விசாலமாக்கினாயா....??

எனக்கே புரியாத புதிராய் ....!!! ஆனாலும்
இதுவும் நன்றாய்தானிருக்கிறது....!!!!!
 ------//-----//-----//-----//-----//------///------//------//
 
என்னோடு சேர்ந்திருந்த தருணத்திலும்
என்னை விட்டு பிரிந்திருந்த தருணத்திலும்

என் மனதின் எண்ணங்கள் எப்போதும்
உன்னை சுற்றியே பூவை சுற்றும் வண்டாய்.....!!!!

என்னின் தேவைகள் அறிந்தே என்னின் பார்வை
பொதிந்த அர்த்தம் தெரிந்தே அளவளாவியே......!!!!

என்னின் பலமும் பலவீனமும் புரிந்தே
பக்க பலமாய் இருந்தாயே....!!!!

புரிதல் சுகமே அறிதல் சுகமே அதையும் தாண்டி
விட்டுகொடுத்தலும் சுகமே.....!!!

என் வாழ்க்கையில் வெறுமையான பக்கங்களில்
நித்தம் எழுதும் கவிதைகளில் தேங்கியிருப்பதே
உன்னோடுனான என்னின் ஊடலும் கூடலுமே.....!!!!

நினைவு புத்தகத்தை நிரப்புகிறேன் கண்ணீர்
மை வைத்தே.....!!!

ஆனாலும் மனதிற்குள் சொல்லிகொள்கிறேன்
இவையெல்லாம் உனக்காய் செய்த யுத்தங்கள்.....!!!!

சத்தமில்லாமல் எனக்குள் ஒரு ரத்த ஆறு
ஓடுகிறது என் இதயத்தை கொன்றே.....!!!!

உயிர் வாழ்கிறேன் என்றே ஒற்றை வரியில்
சொல்கிறேன் சடலமாய் திரிவதால்....!!!!

இரக்கமில்லாதவன் என சொல்வதை விட
இதயமில்லாதவன் என சொல் பொருத்தமாய்....!!!! 
 ----------//----------//-----------///-------///---------//------///-------
 
இருட்டின் நிசப்தம் எங்கோ கேட்கும்
சுவர் கோழியின் சப்தம் என் காதருகே....!!!!

தெருவில் விகாரமாய் ஓலமிட்டே
ஓடும் நாய்களின் காலடியும் சேர்த்தே.....!!!

தூங்கும் மனிதர்களை ஊது குழல்
சப்தத்தில் எழுப்பும் ராத்திரி காவலாளி....!!!!

இத்தனையும் மீறி தூக்கம் மட்டும்
வராமல் இருட்டை வெறிக்கும் பைத்தியகாரனாய்....!!!

அனைத்தையும் கேட்டு கொண்டு
அமைதியை தேடுகிறேன் இருட்டில்......!!!!

ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்
தூக்கதோடு ......!!!!

தன்னிசையாய் கண்கள் மூடியே
நித்திரையை துரத்துகிறேன்.....!!!

எப்போது தூங்கினேன் எனக்கே தெரியாது
விடியலின் ராகம் பறவையின் சீழ்க்கையில்.....!!!!

நடுநிசி நேரம் தான் விடியலுக்கு நேரமிருக்கு
தூக்கம் தொடும் தூரத்தில் தான்....!!!!

மீண்டு வர யத்தனிக்கிறேன் கனவுகள்
மட்டும் இலவசமாய்.....!!!!
 -----------//----------//--------///-----------//--------///-----------//
 
மனனமாய் உன்னின் பெயரை தினமும்
மந்திரமாய் ஜபிக்கிறேன்....!!!!

தினமும் காலையில் கானும் உருவமில்லா
கடவுளாய் நம்மின் காதல்.....!!!!

பரிபாஷையில் பார்வைகள் பரிமாறும்
பயணத்தில் பக்கமே இருந்தாலும் தூரமாய்.....!!!

அருகாமையில் இருந்தாலும் அளாவிட மனமும்
துள்ள மௌனத்தை பறை சாற்றியே வருவாயே....!!!!

எப்போதோ வரப்போகும் பேருந்திற்கு இப்போதே
தயார் ஆவாயே....!!!!

சட்டென மாறும் கால மாற்றமாய் அடிக்கடி
உன்னின் முகமாற்றம் எனக்குள் பூகம்பமாய்....!!!!

தெரிந்தும் தெரியாமலும் சில சமயம் உன்னின்
கோப கனலின் வெப்பம் மே மாத கோடையாய்....!!!

தென்றலாய் இருக்கும் வரையில் உன்னருகே
வருவதே வரமாய்.....!!!!

இன்றும் எனக்கு புரியாத புதிர் ஒன்றெனில் அது
உன்னின் மனமெனும் மாயம் ஒன்றே.....!!!!
 --------------//----------------///----------//------------///-----------//
உறக்கத்தின் மௌனத்தில் விரியும்
மொட்டாய் சந்தோசமாய் கனவு....!!!!

நினைவுகளில் காணகிட்டாத நிம்மதியும்
சந்தோசமும் கைகோர்த்து கொண்டு....!!!!

கனவுகளில் மட்டுமே வாழ்கிறேன்
எப்போதுமே சந்தோசமாய்.....!!!!

சிரித்த முகமாய் அருகாமையில் நீயும்
மனம் முழுதும் உற்சாகமாய் நானும்....!!!

அரியதோர் வாழ்க்கை எனக்கு அமைந்ததாய்
அப்படியொரு மகிழ்ச்சியில் பெருமிதமாய்.....!!!

என்னை நினைத்தே தன்னின் தூக்கத்தை
தொலைக்கும் என்னின் தாயும் கூட களித்திருப்பாளே
இப்படி ஒரு காட்சியதை கண்டாலே....!!!!

இத்தனையும் நடப்பது கனவில் மட்டும் தான்
ஆனாலும் மனதுக்குள் உற்சாக தூறல்கள்.....!!!

ஏக்கங்களின் பிம்பங்கள் தான் கனவின்
அஸ்திவாரமாய் எங்கோ படித்த ஞாபகமாய்....!!!!

கனவில் இருக்கவே பிடிக்கிறதுயெனக்கு
தூக்கமில்லா கனவுண்டோ....????

தூக்கத்தை தொலைத்தாலும் கனவுகளை
தொலைக்க இஷ்டமில்லாமல் .....!!!!!

வராத தூக்கத்தை பிராயாசையோடும்
பிரயத்தனதோடும் தேடியே....!!!!

சுடும் கண்ணீரின் வெப்பத்தை தாண்டி
தூக்கத்தில் கண்கள் அலைபாய்ந்தே.....!!!!

எப்போதோ வருகிறாய் அப்போதாவது
உன்னிடம் வரவேண்டுமே.....!!!!

அதற்கேனும் கனவு வேண்டுமே....!!!!

தூக்கத்தை தாருங்கள் என்னின் விடியலை
தருகிறேன் யாருக்கேனும்....!!!!! 
-------------//-----------///----------//-------------///----------//