தன்னை உணர்தல் பெரும்தவம்
அறியாமல் செய்த பிழை
அறிந்து செய்த தவறு
அழிக்க முடியாத கறை
வடுவாய் நெருஞ்சி முள்ளாய்
மனதில் இனம் புரியாத வலி
மாசு படுத்தியது மனதை .....
தீராத பகையாய்
தினம் தினம்
மடிந்து வீழ்கிறேன்
மண்ணுக்கு இரையாகும் வரை
தீருமா இந்த துயர்?
தீங்கு இழைத்தவன்
தவறை உணர்ந்து
கொள்ளல் நன்று தானே?

0 Response to "தன்னை உணர்தல் பெரும்தவம்"