இறைவனிடம் கேள்விகள்

0 ரசித்தவர்கள்இறைவனிடம் கேள்விகள் 

இதுவரை எனக்காக
இறைவனிடம் ஏதும் கேட்டதில்லை
கேட்கவேண்டும் என்று எண்ணவும் இல்லை
ஆனால் என் தமையனை இழக்கும் வரை
இழப்பை பெரிதாய் நினைத்ததும் இல்லை
இருக்கும் போது  அறியாத விஷயம்
இறந்த பிறகு துளிர்கிறது
வெட்டப்பட்ட மரம் துளிர்ப்பது போல
நினைவலைகள் நெஞ்சை அரிக்கும்போது
கண்களில் இருந்து கடலாய் கண்ணீர்
வெளிதேசம் சென்றிந்தால் கூட
கவலை ரேகை தெரியாது
கலக்கமில்லாது காலம் போகும்
திரும்பி வராது
திரிசங்கு சென்று விட்டான்
திருமாலே
நீதான் பொறுப்பு
இங்கிருந்தவரை
வலி பொறுக்கமாட்டன்
அது பசியாகினும் கூட
உன்னிடம் வந்துவிட்டான்
எது பற்றியும் சிந்தை இல்லை
சிரத்தையாய் நீ பார்த்து கொள்வாய்
என் காலம் வரும்போது
வந்தவனை சந்திக்கிறேன்
அதுவரை என்னை
படுத்தி விடாதே..  

வீரம் வந்ததெப்போ?

0 ரசித்தவர்கள்


 வீரம் வந்ததெப்போ?


மலர்ந்து மலராத மொட்டுக்கள் போல்
பதின்பருவம்
வலியது கேட்டு  நெஞ்சு
விம்மும் விடலை போய்
தோள்கள் தினவெடுத்து
மரம் ஏறி கனிகள் பறிக்கும்
தைரியம் யார் சொல்லி வந்தது?
சொன்னதை செய்து கொண்டு
மௌனமாய் இருந்து
இப்போது தீர்மானமாய்
முடியாது என்று
இறுமாப்புடன் சொல்லும்
வீரம் எங்கிருந்து வந்தது ?
முகத்தில் முட்செடிகளாய்
ரோமம் வளர்ந்து
சுவாசம் கூட சீராய் வந்தது
அடிக்கடி பாதரசம் பார்த்து
புதிதாய் முளைத்த
மீசையை ஆசையாய்
நீவி விட சொல்லி கொடுத்ததாரு?
விடை தெரியா கேள்வியோடு
வீதியில் வந்த விமலா 
நெஞ்சோடு அணைத்த புஸ்தகத்தில்
புதிதாக  ஒரு பக்கமாய் கடிதம்
வைக்க  எங்கிருந்து வந்தது
இப்படி ஒரு ஆசை ?
கனவுகளாய் சென்ற
கண்களில்
அவள் விட்டு சென்ற
சுவடுகள் தான்
மிச்சமான எச்சம் !!

0 ரசித்தவர்கள்


ஆளரவம் இல்லா வெளியில்
இருண்ட குகையில்
வெளிச்சம் தேடி
தனியொரு மனிதனாய்
தவிப்புடன் சென்ற
என் மனதில்
எங்கோ ஒரு மூலையில்
கிடைத்த ஒளி வெள்ளம்
மனமுழுதும் மகிழ்ச்சி வெள்ளம்
வெளியே வந்த எனக்கு
இருட்டின் அருமை புரிந்தது
வெயிலின் அருமை போல ....
தேடல் இன்றும் தொடர்கிறது
மனிதம் தேடி.....