வெளிச்சத்தின் பிம்பம்......

0 ரசித்தவர்கள்
இறுக்கமாய்
மூடி இருந்த
மனதினுள்...
வெளிச்சம்
புக முடியா
குகைக்குள்ளும்
கீற்றுகளாய் ...
ஒளிகற்றைகள் .....
பிரமித்து போனேன்..
மெல்ல மெல்ல
தெரிந்தது...
வந்தது
ஒளியல்ல...நீ ....
இதயத்தை
ஓட்ட வைத்தாலும்
அதில் ஒட்டிய
சுவடு தெரிவதை போல்...
அவ்வபோது நீ
கீறுகிறாய்...
வழிகிறது
செங்குருதி.....
ஆனால்
வலி தெரியவில்லை...
மரத்து போன
நெஞ்சிற்கு
இதுவும்
ஒரு காயம் தான்....
சிரிக்க முயல்கிறேன்...
உதடுகள் அசைகிறது...
உள்ளமோ அழுகிறது...
மறைக்க திரை
போட.....
திரையிலும் நீ...
வெளிச்சத்தின்
பிம்பம்......
வெளியேறுமா?
வெறுமையை
சுவைத்த படி .....

காகித கப்பல்...

0 ரசித்தவர்கள்


மனதில் இருக்கும் வலியை
எழுத்தில் வடித்தேன்...
ஒவ்வொரு வரியும்
கண்ணீராய்.....
துளி துளியாய்
சேகரிக்க .....
பெரு வெள்ளம்...
கவிதையில்
தெரிந்தது
என் வலி..
நிம்மதியாய்
திரிந்த காலம்.....
நிர்மூலமாய்
போனது...
நித்தம் ஒரு
கவிதையை
தத்து எடுத்துக்கொண்டு...
மனம்
ஆற்றாமையில்
ஓலமிடுகிறது.....
யாரிடம் சொல்வேன்...
கடை விரித்தேன்...
கொள்வார் இல்லை...
எழிலும் போனது...
அழிய கூடியது தானோ..?
அறிவுக்கு புரிந்தது...
வலியை உணர்ந்தவனுக்கு....
வாழ்க்கை ஒரு
காகித கப்பலாய்....
தண்ணீர்க்கு
இணையாக
என் கண்ணீர்....

சிக்கி முக்கி காதல்...

0 ரசித்தவர்கள்

சிக்கி முக்கி காதல்...

உன் அழகை
பேச பேச
சிக்கி  தவிக்கிறது
வார்த்தைகள்..
உன்னிடம் நான்
தவிப்பதை போல

அடுத்தடுத்து வீடு
அருகருகே வாசல்
அடுக்களை வரை
அவதானிப்பாய்...
அவ்வபோது
அளவெடுத்து பேசுவாய்..
அதிர்வு இல்லாமல்
அன்னமே தோற்று போகும்
அழகிய உன் நடையில்
அதனாலே உன்னை
அதிகமாய் பிடித்து போனது...
அதிலும் நீ தலை சாய
அதிசயிப்பாயே
அன்று தான் உணர்ந்தேன்
அமைதியை  பிடிக்காதவர் எவர்?

இரு விழிகளை 
உருட்டுகிறாயே!!
அப்போது
ஆலையில்
அடிபட்ட
கரும்பாகிறேன் ...
கலகலவென
நீ சிரிக்கையில்
என் உள்ளம்
குலுங்குவது
உனக்கு கேட்கிறதா?
கூட்டமாய்
வந்தாலும்
தனித்து
தெரிவாயே....?
என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்பக்கம் இழுக்க
இவைகள் தான்
காரணிகள்....

சிதறி கிடந்த
புத்தகங்களை
சிதறாமல்
நீ எடுத்தாய்...
மொத்தமாய்
சிதறியது
நான் தான்...
உன்னை பார்த்தவாறு
ரோட்டோரத்தில்
தவறி விழுந்தேன்...?

வெளியே கிளம்ப
எத்தனிக்கையில்
அவசரமாய் வந்து ...
அழுத்தி விட்டு செல்வாய்
கைக்குள் மடக்கிய
ரூபாய் தாள்கள்...
காந்தி சிரிப்பதை
பார்த்திருப்பீர்கள்
என்னழுகை
தெரியாது...
அவள் என் பால்
கொண்டுள்ள
அன்பின் பால்...
அவ்வபோது
வரி கட்டுவாள் ....
அவளை பற்றி
வர்ணிப்பதால்...

காதல்
ஒரு விசித்திர நோய்
பார்க்கும் வரை
எதுவும் இல்லை
பார்க்காத போது
பிரளயமே
நடக்கிறது
மண்டை
கூட்டிற்குள்.. .
யோசிக்க
தெரியாத
நானே கூட
யோசிக்க கற்று
கொடுத்தது காதல்
மட்டுமே...

கவிச்சோலை

0 ரசித்தவர்கள்

 உன் விழிகள் காந்தம் தான்...
மறுக்கவில்லை...
ஆனால் நானோ 
கல்லாயிற்றே ....
ஈர்க்கபடுவதற்கு 
இரும்பு அல்லவே...

நித்தம் 
புதிது புதிதாய்
பூக்கள் 
வண்ண மயமாய் 
வாசனைகளும் தான் ...
நீக்க மற
எல்லா இடத்திலும்..
நுகர தெரிந்த 
எனக்கு...
பூக்களை காண தான் 
கொடுத்து வைக்கவில்லையே ?

முடவன் 
கொம்பு தேனுக்கு 
ஆசை படலாமா? 
முன்னோர் சொன்னது...
இளையோர் சொல்லுவது...
முடவனாய் இருந்தாலும் 
முயற்சி செய்தால்
முடியாதது இல்லை...
இவ்வுலகில்...

உன்புருவ 
நாணேற்றி 
கண்களால் 
கணை விடாதே.....
விரயமாகி போகும்...
வீணலுக்கு 
இட்ட நீராகும்... 

உன்னிடத்தில் 
சொல்ல ஆசை...
நீ வரும்போதெல்லாம் 
வீதியே உன்னோடு வருகிறது..
துப்பட்டாவை சரியாய் 
போட்டு கொள்...

உன் பெயர் சொல்லும் 
ஒவ்வொரு முறையும் 
எனக்கு மட்டுமே 
கேட்கிறது ...
என் இதயத்தின் 
சீழ்க்கை ஒலி.....

சிறிது நேர 
சந்திப்பு தான் 
என்றாலும் 
சிறிது சிறிதாய்
அசை போட்டு...
முழு நாளாகி... 
நாட்களாகி 
வாரங்களாகி 
மாதங்களாகி....
வருடங்களாகி...
அந்த சிறிது 
சந்திப்புக்கு 
இன்றும் ஆவலோடு... 

போராட்டம்...
உனக்கு பிடித்த வார்த்தை...
சமாதானம் 
எனக்கு பிடித்த வார்த்தை...
உடன்பாடு 
நம் இருவருக்கும் பிடித்த வார்த்தை..
என்னால் உனக்கு பிடித்தது
உன்னால் எனக்கு பிடித்தது...

விட்டு கொடுப்பதில் நீ 
எப்போதும் என்னை 
மிஞ்சுகிறாய்...
ஒரு முறை கேட்டேன் 
அப்படி என்ன இருக்கிறது என்று...
சிரித்தவாறே சொன்னாய்...
உன் முகத்தில் சிரிப்பை 
காண .....
நான் கொடுக்கும் விலை அது என்று... 

ஏறக்குறைய 
பதினைந்து வருடமாய் 
உன்னை எனக்கு தெரியும்...
தீடிரென இன்று வந்து 
என்னை பார்த்து 
கேட்கிறாய்... 
நீங்கள் தான்....அவரா? 
வெட்கித்து போனேன்... 

என் கவிதைக்கு 
முலாம் பூசும் 
அனைவரையும் 
ஒரு சேர கேட்கிறேன்..
கவிதையே 
 பொய்மைதானே?? 

சிகரம் நோக்கி 
புறப்பட்டேன் 
வளைவுகள் 
நெளிவுகள் 
இடர் பாடுகள் 
ஏராளம்... 
ஆனாலும் 
தளரவில்லை... 
எனக்கு 
தெரிந்தது 
உச்சிச்சிகரம் 
மட்டுமே... 


அறை கூவல்...

0 ரசித்தவர்கள்
ஒ சிங்கள அரசே... 
உன்னை எச்சரிக்கிறேன்... 
உனது நரித்தனத்தை 
என் இனத்திடம் காட்டாதே... 
நீ செய்யும் சதிகள்...
கொத்து கொத்தாய்
கொய்து போடும் 
என் இன சடலங்கள்... 
புற்றீசலாய் 
வெட்ட வெட்ட 
துளிர்க்கும் 
ஆலம்....
உலகம் முழுதும் 
உயிர் விட்டிருக்கும் 
ஆணி வேராய்...
ஊன கண்ணால் 
அதை காண முடியாது...
உன்னையும் ஈன்றது 
ஒரு தாயோ? 
இலங்கை வேந்தன் 
காதை தெரியாதா? 
எங்கள் இனத்தாலே 
அழிந்தான்... 
பிறன் மனை கண்டதால்... 
நீ இப்போது செய்வதில் 
சிறு மாற்று கூட இல்லை... 
வன்புணர்ச்சி செய்கிறாய் 
மிருகங்கள் கூட 
செய்ய விழையா....
என் இன பெண்கள் 
விடும் கண்ணீர் 
உன்னை தீயாய் பொசுக்கும் ....
கொடுங்  கோலனே.... 
சரித்திரம் அறிந்ததில்லையா? 
ஹிட்லர்... 
இடி அமீன்... 
இவர்கள் வரிசையில் 
நீயும் ஒரு நாள் 
கல்லால் அடி பட்டு தான் 
கல்லறைக்கு போவாய்... 
உன் இன பெண்கள் 
இங்கே சுதந்திரமாய் 
சுவாசிக்கிறார்கள்... 
இதை கண்டாவது... உன் 
இழிசெயலை 
இனியும் செய்யாதே... 
வீறு கொண்டு எழும் 
என் இன இளங்குருதி
உன் தலையும் 
கொய்து உருட்டும் .....
மறவாதே.... 
இதுவும் நடக்கும்... 

தமிழ் தாயே

0 ரசித்தவர்கள்

மண்ணாய் மரமாய் 
ஜடமாய் திரிந்தேன் .....
உன் பார்வை பட்டு 
துளிர்த்தது .....
என்னுள் ஒரு 
மாற்றம்...
இப்போதெல்லாம் 
எதை பார்த்தாலும் 
ரசிக்கிறேன்... 
இளமை கொப்புளிக்க 
கவிதை எழுதுகிறேன்.. 
இடையிடையே 
என்னுள் வந்து வந்து 
போகிறாய்.. 
நான் சுவாசிக்கும் காற்றாய்... 
நாபிகமலத்தில் - என் 
நரம்பு மண்டலத்தில்...
செங்குருதியில்... 
எல்லாமாய் 
வியாபித்து 
என்னை 
புதியவனாய் 
புத்திமானாய் 
மாற்றினாய்... ....
அனைத்தும் 
செய்தாயே 
தமிழ் தாயே... உன் 
பாதம் தொட்டு 
வணங்கினேன்......
கண்களில் வழியும் 
கண்ணீரை 
துடைக்கிறாய்..... 
என்னையும் 
கவிஞன் ஆக்கினாய்... 
என்ன பேறு பெற்றேன் 
இப்படி நான் 
அவதானிக்க 
அவனியில் 
பவனி வர.... 
வார்த்தை இல்லை 
சொல்வதற்கு.... 
வார்த்தையால் 
கட்டிய 
வாடா மாலை இது... 
ஏற்றுகொள் தாயே 
என் உள்ளம் குளிர..... 
-ஜெயராமன் பரத்வாஜ்-

புதிர்கள்....

0 ரசித்தவர்கள்

சிறகடிக்கும் எண்ணங்கள் 
சிறிது சிறிதாய்.....
கடிவாளம் போடப்பட்ட 
எருதாய்.....
சேணம் கட்டப்பட்ட குதிரையாய்....
ஒரு சேர பயணிக்கையில்... 
எண்ணிலடங்கா சிதறல்கள்.. . 
போய் சேரும் இடம் சரியா...
வாயிற் காப்போன் விடுவானா...
விரட்டி அடிப்பானா.. 
விடுதியில் இடம் கிட்டுமா... 
புதிதாய் சேர்ந்த கல்லூரி 
பாடங்கள் எளிதாய் இருக்குமா...
சேக்காளிகள் ஒத்துழைப்பார்களா? 
ஒதுக்கி வைப்பார்களா?
ஒன்றும் தெரியாது.....
தேக்கி வைக்கப்பட்ட 
புதிர்களுக்கு ....
விடியலில் 
விடை காண .....
உங்களை நாடி..... 

உச்சி வெயிலில் 
வெறும் காலில் 
நடக்கையில் ....
சூரியனின் வெப்பம்...
உடம்பை குத்தும் 
ஈட்டிகளாய் குளிரின் உச்சம்...
பனிகாலத்தில்... 
இவை அனைத்தும் 
பழகி போன 
உடம்பிற்கு... 
அவள் பிரிந்து சென்ற 
தினம் முதல்.. 
அவள் சென்ற திசையை 
ஆவலாய் பார்க்கும் கண்களே... 
திரும்பி வந்துவிடுவாளா... 
மாட்டாளா.....
என சிந்தை கலங்கி... 
சிதிலமாகி போனதே... 
உடம்பு மரத்து போன 
உணர்வுகள்... 
இயற்கையை தாங்கும் 
சக்தியை கொடுத்த இறைவா....
இதை தாங்கும் சக்தியையும் 
கொடுத்திருக்க கூடாதா?? 


பயணம்

0 ரசித்தவர்கள்


கருவறையில் விதைக்க பட்ட 
கல்லறை பயணம் இது... 
அஞஞானத்தில்
மெய்ஞானம் காண.. 
அத்தனையும் மீறி...
பாவத்தில் பாவத்தை 
கழுவி... 
தேகத்தின் சுத்தம் 
புண்ணியங்கள் 
அறியா ....
செய்யும் கர்மவினை 
திரும்ப திரும்ப 
வந்தடையும் ....
சுவற்றில் வீசப்பட்ட 
பந்தாய்.....
காற்றில் புதைக்க 
முடியாத ....
வினைகள் இது.... 
புதைந்து போன 
ரகசியங்கள்.... 
யாரறிவார்... 
பரம்பொருளை தவிர.... 
யாருக்கும் தெரியாது 
என்றெண்ணி...
செய்யும் செயல்களை ....
சிரித்தவாறே பார்கிறான் ...
பித்தன் ஒருவன்... 
கல்லறை போகும் போது...
கணித்து சொல்வான்...
உனக்கிருக்கும் 
பிறப்பு குறிப்பு... 
பிறவா வரம் கூட...
கிட்டலாம் ...
மனிதனாய் நீ இருந்தால்... 
மரணம் கூட 
உன்னை வணங்கும்.... 

தினமும் மலரும் 
மலருக்கு தெரியாது...
சூட போவது... 
தேவனிடமா....
தேரடியா...
தேவகியா..... இல்லை 
மக்கி போகும் 
மயானமா... 
ஏதும் தெரியாது... 
அதை போல் தான்...
வான் மழை பொழியும் 
நீர்....
சேரும் இடம் தெரியாது...
பாகுபாடுஇன்றி 
பயணம் செய்கிறது... 
ஆறறிவு கொண்டு...
ஆற்றல் பல கண்டு.... 
அனைத்தும் அறிந்த 
மானிடா... 
நீ மட்டும் ஏன்
பாகு படுத்துகிறாய் 
மனதை மாசு 
படுத்துகிறாய்... 
கீழோன்...மேலோன்... 
என 
பகுதி பிரித்து 
வாழ்கிறாய்...
இருப்பவன் எல்லாம் 
மேலோன் என்றால்.. 
இல்லாதவன் எல்லாம் 
கீழோனா...... 
பிறப்பில் உண்டோ... 
இவையெல்லாம்.. 
இறப்பில் உண்டோ... 
இவை அனைத்தும்...
இடுகாடு போகும்போது... 
அனைவரும் ஒன்று தான்...
சேமிக்க பட்ட செல்வங்கள் கூட 
நிரந்தரம் இல்லை... 
மரணம் ...............
சொல்லும் மந்திரம் என்ன...
கட்டி இருக்கும் கோவணம் கூட... 
வெட்டியான் உருவி விடுவான்... 
அக்னியில் உன்னை 
பொசுக்கும் போது 
நீ உணர்வதென்ன? 
உணராத வரை 
நீயும் ஒரு பொணம் தான்.....

ஆறறிவு பெற்ற 
மனிதன் கண்டான் 
அணுவில் ஒரு ஆபத்து... 
ஆனால்... 
அவையெல்லாம் 
கூட 
நிறுத்த முடியவில்லை... 
இயற்கையின் சீற்றத்தை... 
இப்போதாவது புரிந்து கொள்... 
நீ மேலே செல்ல செல்ல... 
சேரும் தூரம் 
மிக அருகில் ... 

உன்னை பற்றி...

0 ரசித்தவர்கள்

இப்போதெல்லாம் நீ
கண்ணாடி முன்
அதிக நேரம் செலவிடுகிறாய்...
அதிக நேரம் நான் உன்னை
பார்க்கவேண்டும் என்று...

என் கவனம்
எப்போதும் உன் மீது....
உன் முகத்தில் சிறு
சலனம் என்றால்..
பஞ்ச பூதங்களையும்
அடக்கி விடுவேன்...
உன் அருகாமைக்காக...

ஒரு முறை சிரித்தால்
சிநேகம்
மறு முறை சிரித்தால்...
நட்பு ...
மறுபடியும் சிரித்தால்...
எனக்கு புரியவில்லை...
அதையும் நீயே
சொல்லிவிட்டு போ...
அனைவரும் வந்தனர்...
அனைவரும் போயினர்....
ஆனால் நீ வரும்போது - மட்டும்
எனக்குள் ஒரு பிரளயத்தை
உண்டு பண்ணிவிட்டு ....
எதுவுமே அறியாது போகிறாய்...
கேள்விக்குறியுடன் நான்...

என் இயக்கத்தின்
தலைமை செயலகம்
உன் விழிகள் தானே...
இப்போதெல்லாம் என்னை
பார்க்காது செல்கிறாய்...
இரும்பாகி போனது
என் மொத்த சரீரம்...
காற்றில் என் இதயம்
துருபிடித்து போகிறது...

காற்றை கையில்
பிடித்தேன்...
தீயை உணவாய்
கொண்டேன்...
மேகத்தின் கொடை
என்னின் தாகம்....
ஆகாசம் எனது
படுக்கையானது...
அத்தனையும்
எளிதான எனக்கு....
உன்னின் நினைவுகளை
துரத்த மட்டும்
முடியவில்லை...
துணைக்கு
உன்னையே
அழைக்கிறேன்...

இப்போதெல்லாம்
நீ காட்டும் பரிவு
எனக்கு பயத்தை தருகிறது...
பிரிவும் கூட வந்து விடுமென...

பஞ்ச பூதங்களுடன் யாத்திரை..

0 ரசித்தவர்கள்

 

 

 


பஞ்ச பூதங்களுடன் யாத்திரை...

இருட்டில் தொலைத்த
என் சுதந்திரத்தை...
வெளிச்சத்தில் தேடினேன்...
இருட்டில் தொலைத்தால்
தொலைத்த இடம்
தெரியவில்லை....

முழுவதுமாய்
நனைந்தேன்...
முக்காடு கூட
போடவில்லை...
மழை மீது
இருந்த காதல்...

வெயிலின் அருமை
நிழலில் தெரியுமாம்...
தெரிவதற்கு
இருக்கவேண்டுமே...
மரித்து போகாமல்..?

அந்தி சாயும் நேரம்
அருகருகே
மரங்கள்...
கயிற்று கட்டில்
இறுக்கத்தில்...
சுகமாய் வீசிய
தென்றல்...
தாலாட்டு இல்லாமல்
தூக்கம் வந்தது...

தீயாய்
எழுந்தது
மனதில்...
கொழுந்து விட்ட
எண்ணங்கள்..
அணைக்க முயன்று
தோற்று போனேன்....
ஆசை வெட்கமறியாது...
உண்மைதானோ?

ஆல கால விஷம்....

0 ரசித்தவர்கள்

ஆல கால விஷம்....
உன்னுடைய நிஜத்தை
மெல்ல மெல்ல நீ
காட்டுகிறாய்...?
மௌனமான
உன் அலறல்
என்னை சிறிது
சிறிதாக
சிதலமாக்கியது...
என்னை சிறுக சிறுக
கொல்வதில்
உனக்கு
என்ன அப்படி
ஒரு ஆசை..
பழகிய ஒவ்வொரு
நொடியும் உண்மைதானே....
உனை தவிர்த்தேன் என்று
ஒவ்வொரு முறையும் நீ
உரைத்தாய்...
முழுவதுமாய்
தவிர்த்து விட்டு...
போனதன் மாயம் என்ன/
விடை தெரியா கேள்விகள்?
விஷமாய் சுற்றும் வினாடி
முட்களை போல்...
காதல் வலியை
எனக்கு உணர வைத்த
உன் மீது எனக்கு கோவம்
கிடையாது...

வலி தந்த பாடம் என்ன?
தினமும் வேதனை தானே...
காதல் மெல்ல கொல்லும்
ஆல கால விஷம்....
உண்மை தானோ?

என்றும் என்னோடு...

2 ரசித்தவர்கள்
உனக்கு தெரியாமல்
உன்னை தொடரும்
அருவமாய்
காற்றில் கைகளை வீசியபடி...
எத்தனை நளினமாய்
நீ நடக்கிறாய்...
மௌனமாய்
தென்றலோடு ......

ஆசையாய்
சொல்லவந்தேன்
அருகில் வந்த உடன
ஐம்புலனையும்
அடக்கிவிட்டாய்
ஆயாசமாய்
நிராசையாய்
என் மனது...

உன் விழிகளை
பார்த்து பேசும்
தைரியம்
கிடைத்தால்
இன்றே சொல்லுவேன்
உன்மீதுள்ள காதலை...நான்
சொல்லும் வரையாவது
விழியை மூடிகொள்ளேன்...
இப்போது நினைத்தாலும்
சிரிப்பாய் இருக்கிறது
உன் பாத சுவடுகளை
தொடர தொடர
எனக்குள்
வந்தது
அப்படி ஒரு தைரியம் .....

உன்னிடத்தில்
பிடித்தது
என்று
எதுவுமே
எனக்கு
தெரியாது
ஆனாலும்
உன்னை மட்டுமே
பிடித்தது .....

பேருந்து
நிறுத்தம் ....
நிழல் குடை ....
யார் கொடுத்த கொடையோ?
நீ இருப்பதால்....
பூங்காவை விட
ஜில்லென காற்று ....
உன் மீது பட்டதாலா?

அனைவரும்
போனபின்பும்
பேருந்து நிறுத்தத்தில்
அர்ஜுனனை
நினைவு கோரினேன்..
தவமாய்...
நீ வரவில்லையென...

பேருந்தில்
சில்லறையில்லாமல்
வந்தேன்....
நீ சிரித்தாய்...
கொட்டியது
வெள்ளி காசுகள்...

திரை கடல் ஓடி
திரவியம் தேட
பாரதி சொன்னான்..
என் திரவியம்
இங்கிருக்கும் போது...

அவள் கொண்டு சென்ற
காதல்...
இன்று வரை வரவில்லை
இனியாவது வருமா?
தெரியவில்லை..
பீடிகையோடு நான்...

எழுதும் எழுத்துக்களில்
தெரிவதெல்லாம்
அவள் முகம் தான்....
மற்றவையெல்லாம்
அற்றினையாக...
என்னையும் சேர்த்து...

உயிரோடு விளையாடும்
விளையாட்டு காதல்
உயிரற்ற உடலோடு
பிரேதமாய்
இடுகாடு தெரியாமல் ....

எனக்கென
எதுவுமில்லை
என்னையும்
நீ எடுத்துக்கொண்ட பிறகு...