1 ரசித்தவர்கள்
மழையே நீ
நேராக கடலில்
போய் விழலாமே
எங்கள் வீதிகளில் '
உலா வருவதில்
உனக்கென்ன ஆனந்தம் ?
உன் பலத்தில்
ஒரு பாதி கூட
எங்கள் தெருக்களுக்கு
கிடையாது
நொடியில் உடைந்து போய்
சிதிலமாகி போகும்
பள்ளங்கள் தெரியாமல்
வாகன ஓட்டிகள்
வீழ்ந்து எழுவதை
காண உனக்கென்ன ஆவல் ?
உன் மீது எனக்கிருந்த
அவாவை
அறவே ஒழித்துவிடாதே!!
அன்பை தவிர வேறறியேன் !!

  

2 ரசித்தவர்கள்
என்னை அடிக்கும்போது
வலி தெரியவில்லை
 நீ என்னை கடந்த பிறகு
வலியை உணர்கிறேன்
என்னை தொடாமல்
என்னை அடிக்க
உன்னால் மட்டுமே முடியும்
உன் கண்களுக்கு வலிமை
அதிகம் தான் !!!

பேசிய வார்த்தைகளுக்கு
உயிர் இருந்தால்
இன்றும் அது
உன்னை
நேசித்ததை
உளமார
சொல்லிருக்கும்

உனக்கென்ன பைத்தியமா
மழையில் நனையும்
என்னை ஏளனம் செய்தனர்
என் நண்பர்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
மழையில் நனைவது
பிடித்த விஷயம் என்று
நீ என்னிடம் சொன்னது??