அப்படியே............

0 ரசித்தவர்கள்









விழிகள் செதுக்கிய
கண்ணீர் துளிகள்
முத்துக்களாய்...
மௌன பார்வையில்
நீ சொன்ன வார்த்தைகள் ....
என் தோள் சாய்ந்து
நீ பேசிய வார்த்தைகள்
விரும்பிய செவிகள்...
நட்புடன் விரல் பிடித்து
விளையாடிய கைகள்....
காற்றின் நேசத்தோடு
காலாற நடந்த கால்கள்....
மணற்பரப்பில் கட்டிய
கோபுர கலசங்கள்....
கடந்த காலத்தின்
எச்சங்கள் தான்...
எனினும் .....
மூளையோடு
பதிந்து போன
நிழல் படங்கள்...
கண் மூடும் பொழுதும்
கனவிலும் கண் சிமிட்டும்...
நீளா துயிலில்
மீளாமல் போனாலும்
மிச்சமாய் இருப்பதும்
அவைகள் மட்டுமே....
இளமை மாறாமல்....
அதே நளினத்தோடு....
அதே புன்னகையோடு...
உறைந்து போன
நினைவு பெட்டகமாய்....
திறந்து திறந்து
பார்க்கிறேன் ...இவை
யாவும் உயிர் பெறாதா??
எல்லாமே நிஜம்தானே...
நிழலாய் போனதே....
நின்னை நினைக்கின்ற
நொடி பொழுதும் கூட
கடையோர புன்னகை
மட்டும் அப்படியே.....
இரவு வணக்கங்கள்
அன்புடன்
கவிதை சொல்லுங்கள் & கேளுங்கள்
ஜெயராமன் பரத்வாஜ்.

தனியாய் ....

0 ரசித்தவர்கள்






ஜனிக்கும்போதே
நஞ்சுகொடியோடு...
ஆனாலும்
ஆண்டவன் சொரூபம்
எவர் எடுத்து கொஞ்சினாலும்
இதழ்களில் சிரிப்பை தவிர
வேறெதுவும் தெரியாது....
பழக பழக பாலும் புளிக்குமாம்...
அப்படிதான் ஆனது...
மெல்ல மெல்ல ஏறும்
விசமாய் நெஞ்சில்
வினையும் சேர்ந்து...
வல்வினைகள்
தெரிந்து சில
தெரியாமல் பல..
ஆட்டம் ஆரம்பமானது...
கால் சராய் போடும்
காலம் போய்...
பதின்பருவம்
மெல்ல மெல்ல
ஆண்மை வந்ததாய்...
ஆணவம் வந்தது...
ஆசையும் சேர்ந்தது...
கூடாநட்பு....
துணையோடு
வஞ்சும் நஞ்சும்
விளையாட்டாய்
வினையென்று தெரியாது...
சாட்டை சுழற்றிய
பம்பரமாய்...
பரபரவென
மனது...
கள்ளம்...
கபடு....
இன்னும் இன்னுமென
பாபங்களை
பங்கு போட்டு...
திரும்பி பார்கையில்
தன்னந்தனியாய்
துணைக்கு வந்த
துணை எல்லாம்
வழித்துணையாய்...
அவரவர் இடங்கள்
அடைந்ததும்
அறுந்து போயின...
உப்பு தின்னவன்
தண்ணி குடிக்கனுமாம் ...
இப்போது குடிக்கிறேன்...
தனியாய்....
துணையில்லாமல்...

மனம் அலை கடலாய்

0 ரசித்தவர்கள்



பேராழியில் சிக்கி சின்னா
பின்னமாயிருந்தாலும் .....
போராடி என் உயிர்
துறந்திருந்தாலும்....
கடல் தாய் என்னை
முழுதுமாய்
விழுங்கி இருந்தாலும்....
பனை உயர மீன்கள்
என் சதையை பிய்த்து
எறிந்திருந்தாலும்
பரிதவிக்க மாட்டேன்
மை விழியில் சிக்கி
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கட்டிய என் கனவு
கோட்டையை ...
கண நேரத்தில்
இடித்து விட்டு
துளியும் சலனமின்றி
துடி துடிக்க விட்டு விட்டு .....
துயரங்களை சுமக்கும்
துறவியாய் ... ...
மௌனங்களை
மட்டுமே பதிலாய்...
வார்த்தைகள் கூட
சிக்கி தவிக்கிறது
சிந்திய கண்ணீரில்
இருந்த ஈரம் கூட
உன்னிடம் இல்லையென
மனம் அலை கடலாய்
ஆர்பரிக்கிறது...

பாதகங்கள்

1 ரசித்தவர்கள்

மண்ணாய்
மலராய்
மயிலாய்
குயிலாய்
எறும்பாய்...
பொதி சுமக்கும்
கழுதையாய்
பால் தரும் பசுவாய்....
பளு தூக்கும் எருதாய்...
விலங்காய் பிறந்திருந்தால்
வினை ஏதும் இல்லை...
ஆறறிவு பெற்று
மனிதனாய் பிறந்ததே
முதல் குற்றமாகி
முதல் கோணல்
முற்றும் கோணலாய்....
வஞ்சம் ...சூது..
நஞ்சு... களவு...
வார்த்தையில் அடங்கா...
பாதகங்கள் செய்வதே
பணியாய்.....
அறிந்து செய்யுமென
பாபங்களே
துரத்தும்
அறியாமல் செய்ய
பிழை அல்ல வாழ்க்கை...
புரிதல் நலம்...
அறிதல் சுகம்...
தன்னை அறிதல்
முழுமை...
தன்னலம்
வீழ்தல்...
மனிதம்....

விடுமுறை கூட விலங்கு தான்...

0 ரசித்தவர்கள்


சனி ஞாயிறு
தினங்களில்
மட்டும்
தரிசனம்
இல்லையாம்
கல்லூரி
விடுமுறையாம்
இந்த முறையெல்லாம்
யார் கொண்டுவந்தது..?
ஒரு நாள் உன்னை
பார்க்கவில்லையெனில்
உயிர் வலி கொல்லுதடி...
உன் பெயரை உச்சரித்தால்
வலியின் சுவடு
பய்ய பய்ய
மறையுதடி...
கைபேசியில்
உன்னுருவம்
இருந்தாலும் கூட
அசையாமல்
இருக்கும்
பொம்மையாய்
உன்னை காண
பிடிக்கவில்லை
உயிராய் அருகாமையில்
உக்கார்ந்து நீ
பேசுகையில்
குறும்பாய்
என் முடி பிடித்து
விளையாடுகையில்
உணர்கிறேன்
உன் காதலை...
கற்பனையை
நினைத்து பார்த்தாலும்
நிஜமாய் இருக்கும்
நின்னுருவம்
நிழலில் தெரிந்தால்
நிஜமென்று கூற
மனம் கூட
மரத்து போகிறது...
மரகட்டையாய்...
வாரத்தின் முதல் நாள்
வாசலில் தவமிருப்பேன்
வஞ்சி உன்னை காணும்வரை...

மௌன மொழி...

0 ரசித்தவர்கள்






இரவின் நிசப்தம்
காற்றில் கரைந்து
மௌனம் பேசியது
குயிலின் கூவலில்
விடியல் மெல்ல
தலையை எட்டி பார்க்க
சூரியனும் சேர்ந்து
பூவில் மேலுள்ள
பனித்துளியை
துடைத்து
பூக்கள் மலர
அங்கே
தேனீக்கள்
பூக்களோடு
ரீங்காரம் பாட...
மகரந்த சேர்க்கையோடு
பூக்களை
வண்டுகள்
முத்தமிட்டபடி...
பொழுதும் புலர்ந்தது ....
விடியலின் தாக்கம்
மொத்தமாய் தாக்க
புத்துணர்ச்சியோடு
புதிதாய்
தொடங்கினேன்
மற்றுமோர் நாளை..

கருவறையில் பொன் குவியல்

0 ரசித்தவர்கள்




கர்ப்ப கிரகத்தில்
கடவுள் இருந்தார்
கூடவே
பொன்னும் பொருளும் ...
பூதம் காத்த காலம் போய்...
இப்போது கடவுளும்
காத்து வருகிறார்...
காலம் காலமாய்...
மன்னர் ஆட்சி போய்
மக்கள் ஆட்சி வந்தது...
இதுவரை யாரும்
நுழைந்ததில்லை...
கருவறையில்...
படையெடுப்பின்
பிரதானமே
கொள்ளை அடித்தல் தான்...
சேமித்து வைத்ததெல்லாம்
பாதாள அறையில் தான்...
திறவு கோல் கூட
ரகசியம் காக்கும்...
எல்லாம் சரி...
எடுக்க எடுக்க
குவியல் குவியலாய்...
ஏழு மலையானே
மலைத்து தான் போனான்...
எண்ணற்ற திரவியம் கண்டு...
சுபிட்சம் என்பது
கேரளாவை பொறுத்தவரை
அதிகாரமாய் ஒலிக்கும்...
அடுத்து...
திருமால் பள்ளி கொண்ட
சீரங்கதிலும் ....
சிவன் கோயில் கொண்ட
தஞ்சையாம்....
காத்திருப்போம்
தங்க வேட்டைக்கு....

மண்ணாசை... கோல ஆசை...

0 ரசித்தவர்கள்





அதிகாலை பொழுதில்
சூரியோதயத்திற்கு
அஸ்திவாரமாய்...
காலையில்
சந்திரன் வாசலில்
கோலம் போட...
அதை காணும்
ஆவலில்
இருட்டு போர்வையை
போர்த்தி கொண்டு...
பனி விழும் நேரத்தில்
பாது காவலாய்
நின்றேன்...
அவள் கோலம்
போடும் அழகை
வர்ணிக்க
வார்த்தைகள்
கிட்டவில்லை...
கம்பரையும்
வள்ளுவரையும்
கண்ணதாசனையும்
வாலியையும்
வைரமுத்துவையும்
நினைவில் வைத்தேன்...
அவர்கள் பெயர்கள்
நினைவுக்கு
வந்த வண்ணமாய் இருந்ததே
தவிர எனக்கு....
வார்த்தை சிக்கவில்லை...
கேசத்தை அவள்
ஒதுக்கிய போது..
நெற்றியில் முதுமாலையா?
வியப்புடன் நோக்கினேன்...
வியர்வை முத்துக்கள்
கோர்த்திருக்க கண்டேன்....
பூக்களை சூழ்ந்திருக்கும்
பனித்துளியாய்....
அவள் முகம்......
ஒய்யாரமாய்
நின்று அவள்
போட்ட கோலத்தை
ரசித்தாள்....
சுற்றும் முற்றும்
பார்த்து...
திருஷ்டி சுற்றி
சிரித்து கொண்டாள்..
அந்த கோலத்திற்கு
அடித்தது யோகம்...
அவள் நின்ற
மண்ணாய்...
கல்லாய்...
அவள் போட்ட...
கோல மாவாய் இருக்க
மனம் ஆசையானது....

அறிவாய் மனிதம்....

0 ரசித்தவர்கள்





தோன்றலில்
பேதைமை இல்லை...
நம்மை சுற்றி
உலாவும்
இயற்கையில்
பேதம் இல்லை...
எப்போது பிறப்போம்
எப்போது இறப்போம்
என்பதை அறியோம்...
இருக்கும் சில
மணித்துளிகளில்
சாதித்ததாய்
மார் தட்டி
மதம் எனும்
மதம் பிடித்து ....
மனிதம்
மறக்கிறோம் ...
பெற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
கற்றவை எல்லாம்
இங்கிருந்தே...
காற்றில் ஊஞ்சல்
ஆடும் கூடு
ஆறடி ....
காற்றடைத்த
பையில்
சதைகளோடு
எலும்புகளும்
ஆடும் ஆட்டம்
என்னே என்னே..
பலமுறை
யாசித்தலும்
சில முறை
யோசித்தலும்
ஆறறிவை
கொண்டு...
அவன் செய்யும்
விதைகளும்
வித்தைகளும்
விந்தைகளும்
ஏராளம்...
ஏளனம்
எக்காளம்
எகத்தாளம்
எத்தனை எத்தனை
எள்ளி நகையாடி
உதாசீனபடுத்தி..
உன்மத்தம் ஆகும்
மனிதா....
இடும் காடும்
சுடும் காடும்
தொலை தூரம் இல்லை...
தொட்டுவிடும் தூரம் தான்...
நீ போகும் போதும்
அடக்கமாவதும் ...
அனலில் அடங்கி போவதும்
ஆறடி மட்டும் தான்...
அப்பழுக்கில்லா
உன் உயிர் மட்டும்
ஜனனம் தேடி.... 

எனக்கு மட்டுமே.....

0 ரசித்தவர்கள்







ஆழியில் சிக்கிய
துரும்பாய் .....
அல்லல் படும்
மனது......
அல்லும் பகலும்
அளாவிய ....
ஆசை வார்த்தைகள்...
நிதம் நிதம்
நித்திரை மறந்து ....
முத்திரை பதித்த
முரட்டு இரவுகள்...
பின்னிரவு நேரம்
சுவர்கோழி
கூவலையும்
புறத்தே தள்ளிவிட்டு...
பூபாளம் இசைத்த
இரவுகள் ஏராளம் ....
அத்தனையும்
மொத்தமாய் ....
ஊழி காற்றில்
உரு தெரியாது போனதே...
உண்மை அறியாது..
நிந்தனை செய்யும்
நின்னை .....
சரிந்த சீட்டு கோட்டைகளாய்
காற்றில் கட்டிய மாளிகையாய்
கண் முன்னே நொறுங்கி போனதே....
நெஞ்சம் கல்லாய் போனதா...?
நினைவும் மறந்தே போனதா..?
நிஜங்களும் நிழலானதா..?
நிலை கண்ணாடியில்
நித்தம் பார்கிறாயா?
நின்னையே கேட்டு பார்?
நீ செய்வது சரியோ?
நீயாய் வந்தாய்....
நீயாய் சென்றாய்....
உன்னை உளமார
நேசித்ததை தவிர....
வேறென்ன பிழை செய்தேன்...
வேதைனையில் .....
மனமிடும் ஓலம்
எனக்கு மட்டுமே.....

அறிவு சுடர்

0 ரசித்தவர்கள்
 அறிவு சுடர்
 
 
 


மௌனத்தின்
இறுக்கம்
என்னை
மொத்தமாய்
இறுக்கியது...
விழி பிதுங்கிய
சோகத்தில்
கையறு நிலையில்
மெல்ல மெல்ல
நினைவு தப்பியது..
இறுமாப்பு சிரிப்புடன்
அருகாமையில் நீ...
அதிர்ந்து அதிர்ந்து
குலுங்கிய என் மனம்
கொஞ்சம் கொஞ்சமாய்
கெஞ்சியது...
உயிர் போகும் தருணம்...
ஒரு முறையாவது
சொல்லிவிடு...
ஏளனம் செய்யாதே..
என்னுள் கலப்பு
இல்லை...
கனிமத்தில் கூட
கலப்பு இருந்தால்
தான்
பொலிவு ...
ஆனால்...
கரியாய் இருந்தாலும்
பட்டை தீட்டி பார்
உன் கண்களும் கூசும்
என் ஒளி பார்த்து...
அப்போதாவது
புரியுமா...
அப்பழுக்கற்ற
அறிவு சுடர்
என...

மனதின் ஓட்டம் ....

0 ரசித்தவர்கள்
 மனதின் ஓட்டம் ....
 
 
 
சிரிப்பை கொடுத்து...
சிந்திக்கும் அறிவை கொடுத்து
சிறகடிக்கும் எண்ணங்கள் கொடுத்து...
சுதந்திரத்தை சுவாசிக்கவும் ....
சிரமத்தை அணுகவும்
கற்று தந்த நீ...
வலிகளையும்
வடுக்களையும்
மறைக்க கற்று
தராமல் போனாயே..
எந்தையே...
ஏங்க வைத்து
என்னை
மொத்தமாய்
அலைகழிப்பதில்
உனக்கென்ன
ஆனந்தம்....?
துளியாய்
விஷமும் தா..
மயான பாதைக்கு
பூ தூவ
மலரும் கொண்டுவா....
கவிதைகள் அனைத்தும்
எனதே..
ஆண்பாலாய் இருந்தாலும்
அன்பால்
எழுத பட்டவை...
வலிகளை
வார்த்தையில்
கோர்க்கிறேன்...
வடுக்களோடு
போகட்டும்
என் வலி...
பெயர் போட
இஷ்டம் இல்லை...
இதுவும் அவள்(கலை மகள்)
போட்ட பிச்சை தானே...
உயிர் ஜனித்த
பொழுதை விட
உயிர் கொடுத்த
பொழுதை
உயிராய் நினைத்தேன்...
ஜனித்த போது
எனக்கு மட்டுமே
பிடித்தது...
உயிர் கொடுத்த போது
உலகமே வியந்தது..
கவிதை குழந்தை...
உன்னிடம் எதையும்
மறைத்து எனக்கு
பழக்கமில்லை...
இன்றும் அப்படிதான்...
திறந்த புத்தகமாய்
நீ மட்டும்
ரகசியமாய்
வந்தாய்...
ரகசியம்
சொல்லி தந்தாய்...
ரகசியமாய்
போனாயே...
இப்போது ரகசியம்
காக்க தெரியாமல்...
தினம் தினம்
போராட்டத்தில்
கனவுகளை
கொன்று
வருகிறேன்...
ரகசியமாய்
எப்போது வருவாய்??
 
 
 

ஓசையின் நிசப்தம்

0 ரசித்தவர்கள்
 
 
 ஓசையின் நிசப்தம் 
 
 
 
 
கருவேல காட்டு வழி...
மாலை கவ்வும் வேளை....
மையிருட்டு நேரம்...
மையல் கொண்ட தையல்
மைவிழியாலே...
மனதை பிசைந்தாளே....
போதைக்கு போதையானளே
இருட்டுக்கு கூட
கேட்காமல்
சங்கேதமாய்
வார்த்தைகள் பேசி...
சிக்கி தவிக்கும்
முத்துகளை
சிரிப்பில்
கொணர்ந்தாளே....
நேரம் போனது தெரியாது...
நேசத்தை பகிர்ந்தோமே...
கால சுவடுகள்
பாதம் பதிய
சென்ற இடமெல்லாம்
உன் நினைவு தான்
இத்தனையும் செஞ்ச...
எனை மட்டும்
விட்டு விட்டு
வெளி தேசம் செல்ல தான்...
மனசு ஒப்பு வந்தேப்படி?
வடிவே அழகே
உன்னை பிரிந்தாலும்
சுகமாய் இருந்தால்
அது போதும் எனக்கு
ஏழேழு ஜென்மம் வரை
கூட வரும்....
உன்னை பிரிந்து
உயிர் வாழும்
ஒரு ஜீவன்...
கால கண்ணாடியை
துடைத்து தான்
பார்க்கிறது....

காலை மலர்..

0 ரசித்தவர்கள்









இனிய காலையில்
பறவைகளின் சீழ்க்கைஒலிகள்
சங்கீதமாய்.....
விடியலின்
இன்னொரு பரிணாமம்....
மீண்டும் துவங்கும்
புதிய நாளாய்...
உவகையோடு ஏற்று
பறவையோடு மனதையும்
உயர பறக்க விடுங்கள்..
நேற்றைய நினைவுகள்
எச்சங்களாய்..
குப்பையை சேர்க்காது
சுத்தம் செய்யுங்கள்....
வன்மம் வஞ்சம்
வாது சூது
களவு பொய்மை
புறத்தே தள்ளி
புத்தம் புது
மலராய் ...
இந்த நாளை
தொடங்குங்கள்..
காலை வணக்கங்களோடு
கவிதை சொல்லுங்கள்....
கவிதை கேளுங்கள்...

அன்புடன் ஜெயராமன் பரத்வாஜ்.

ஊஞ்சலாடும் நினைவுகள்

0 ரசித்தவர்கள்
 ஊஞ்சலாடும் நினைவுகள்
 
 
 
 
உரசி பார்க்கும்
உன் நினைவுகள்
ஊடுருவி செல்லும்
உன் பார்வைகள்
பழகி போன
பாத சுவடுகள்...
கண்ணை கட்டி
விட்டாலும்
தடம் மாறாது
நீள் தண்டவாளமாய்
கைகளை காற்றில்
அலைய விட்டு
உன் கேச கற்றைகள்
என் கையில் சிக்கி
செல்லமாய் நீ
சிணுங்கும் நொடியில்
வலித்தாலும் அதை
வாய் சொல்லாது
இதழில் சிரிப்பை
தேக்கி வைத்திருப்பாய்
கண்ணா மூச்சி ஆட்டம்
என் முன்னே
வந்து வந்து
எனக்காக நீ
விட்டு கொடுப்பாயே
அப்போது தான்
புரிந்து கொண்டேன்
விட்டு கொடுத்தலும்...
விளையாட்டில் நீ
விட்டு கொடுத்தாய்...
வாழ்கையில் விட்டு
கொடுத்து விட்டு
உன்னுடனான
பொழுதுகளை
துணைக்கு
அழைக்கிறேன்...

நினைவு சாரல்

0 ரசித்தவர்கள்
 
 
 
நீண்ட தொரு பயணத்தில்
துளியாய் ஆரம்பித்து...
கம்பிகளாய் தெறித்து...
தெருவை சுத்தம் செய்து...
அனைவரையும்
ஆடை கழற்றாமல்
குளிப்பாட்டி...
அன்னையை போலவே
அன்பை பொழிகிறது
மழை....
ஆங்காங்கு பள்ளத்தை
சமசீராய் ஆக்கிவிட்டு
அருமையாய் ஒரு
ஜலதரங்கம் பாடும்
மழையை
ஆராதிக்கிறேன்...
இயற்கை அன்னையின்
இன்னொரு கொடை....
 

இன்றும் !!
நினைவு இருக்கிறது...
தூறல் போடும் மழையில்
மிதிவண்டி பயணத்தில்...
துப்பட்டாவை குடையாக்கி
துரிதமாய் செல்ல செல்ல...
மழையின் சாரல்
என் வேகத்தை அணை போட...
வியர்வை துளிகளா...
மழை துளிகளா...
வித்தியாசம் தெரியாது...
சிறியதாய் இருக்கும்
கைகுட்டையால்
என் முக துடைத்து
அழகு பார்ப்பாய்...
எப்போது இல்லாமல்...
அன்று மட்டும்
ஜொலிப்பதாய் சொல்வாயே....
இறந்து போன காலங்கள்..
நினைவுகளை மட்டுமே
என்னிடம் விட்டு
சென்றது......