கலவையாய் சில கோர்வைகள்....

0 ரசித்தவர்கள்







மேகம்................/

மேலே மேலே

போக போக...

பொதியாய்...

பஞ்சாய்....

நகரும்

பனிதிரைகள்....


பனித்துளி............./

புல்லும்

மலரும்

சூடி கொள்ளுமே..

வைர நெற்றிசூடி!!!!



ரௌத்திரம்................./

பூகம்பமாய்

நெஞ்சில்

வெடித்தாலும்

புன்னகையில்

கோபம்....!!!!


வெற்றி.............../

சேணம்

கட்டிய

குதிரையாய்....!!

இலக்கை

அடையும்வரை...!!!

அதுவரை....?


அன்று...../

கூட்டத்தில்

ஒருவனாய்...

வரிசையில்...


இன்று..../

கூட்டமாய்....

என்

கை அசைவிற்கு...


தலைவன் ...../

தன் பசியை

தூரவைத்து...

பிறர் பசியை

தனதாக்கும்

தார்மீக

தொண்டன்....!!!



தொண்டன்........./


ஊரெல்லாம்

திரிந்தாலும்

உள்ளமெலாம்

தலைவனை

தாங்குமிந்த

தூண்.....


பேராசை................./

புதையலை

அள்ளி

எடுத்தாலும்

கிள்ளி கொடுக்க

மனமிலா

மாசாய்.....


கொஞ்சல்.............../

கால் கொலுசில்

கை வளையில்

கழுத்து புறமாய்...

உச்ணமாய்

உன் மூச்சு காற்று...

அழுத்தமாய்

இதழ்பதிப்பு......


சங்கடம்..................../


மெல்லவோ...

முழுங்கவோ

முடியா....

இருதலை

கொள்ளி

எறும்பாய்... மனம்....


சாதுர்யம்.............../

மௌனமாய்

நீயும்...

பேசியே

நானும்....

செய்யும்...

சரச விளையாட்டு.....

இசை................../

மகுடியின்

பாம்பாய்...

லயிக்கும்

எல்லையில்லா

கடல்...


ஊடல்................./

விடியலில்

தொடங்கி...

விடியும் வரை....

முறைப்பாய்

முரண்....


கூடல்................./

எதுகையும்

மோனையும்

நறுமுகையாய்...

இன்முகமாய்...

இருத்தி.....

பின்னிரவை

பகலாக்கும்

முயற்சி....



முறைபொண்ணு................../


பாவாடை

தாவணி

பதின்பருவம்....

எழிலோவியமாய்

என் தேவதை...


காத்திருப்புகள்.............../

பூங்காவிலே

இருத்தி இருக்கும்

உக்காரும் மேடைகள்

சொல்லும்

என் காத்திருப்புகளை....


தாமதம்./


விரைவாய் செல்லும் !!

புகைவண்டியாய் !!!மனது....

இன்றேனும் சீக்கிரமாய் .....

சந்தித்தால்... சுகமாய்....


தயக்கம்.............../

வெட்கத்தை

வெளியேற்றி

விருப்பத்தை

வினவ தான்

ஆசை..... இன்றேனும்....


இனிமை.............../

மயில்

குயில்

குரலோசை

இனிது...

அதைப்போலத்தான்...

உனதும்....


ஏக்கம்.................../

ஒவ்வொருமுறையும்

கடக்கிறேன்...

மொத்தமாய் உனை

விழுங்கியவாறு....

என்றேனும்

சொல்லுவேன்

எனதான

காதலை...

காதலோடு....



உரிமை................/

ஜனித்த போதே....

முடிக்கப்பட்ட

திருமண

சாசனம்....

சாதி சனம்

கூடி....

இரு மனங்களின்

நிலை அறியாது....


விலை..................../

மண்ணில்

ஜனித்த

உயிரும்

உயிரில் ஜனித்த

உயிரும்

விலையாய்

இன்று...???