காதலும் கற்று அற


காதலும் கற்று அற

உன் விழி மூடி யோசிக்கையில் 
என்னுலகம் இருளானது - நீ
விழி திறந்து   பார்த்தாய் 
என் மதி இழந்து போனது !!

எனது விழியிடம் கேட்டேன் - 
பார்த்தவற்றில் 
உன்னை கவர்ந்தது ஏதென்று ?
அழுத்தமாய் ஒற்றை வரியில் 
உன் பெயரை தான் சொன்னது...?

நெருப்புக்கு அணை நீர்
நீருக்கு அணை காற்று 
காற்றுக்கு அணை மழை 
இயற்கை மட்டுமல்ல 
இணையாக நீ இருந்தால் 
எதையும் என்னால் 
ஈடு செய்ய முடியும் ...?

மழை பொழியும் போது 
சொட்டும் நீர் குமிழ் போல் 
அவ்வபோது வந்து போகிறது 
உன்னை பற்றிய நினைவு !!! 

தூவானமாய் இருக்கும் வரை 
மழைக்கு அழகு ....
பெருமழையாய் வந்துவிட்டால் 
குடையை தேடும் மனது ....
அரணாய் இருக்கும்போது  
அல்லல் இல்லை 
அது மழைக்கு மட்டும் அல்ல
உனக்கும் சேர்த்து தான் !!!

மழலை பேசும் கிள்ளைக்கு 
மடி திறந்தாள் அன்னை 
கவி பாடும் எனக்கு - நீ 
என்ன தர போகிறாய்? 
பரிசாக எதை கொடுத்தாலும் 
பரிவோடு ஏற்றுகொள்வேன் !!!

வழிப்பறி அதிகம் தான் 
ஆனால் நீ பறித்தது 
என்னை அல்லவா? 
யாரிடம் புகார் கொடுக்க? 
அதையும் நீயே சொல்லு ?

காவல் நிலையத்தில் 
அனைவரும் இருக்கும்போதே
என்னை கவர்ந்து சென்றாய் ?
நீ என்ன என் இதயத்திற்கு 
காவலாளியா? இல்லை 
கள்வியா? 
பூட்டுக்கள் இல்லாமல் 
சாவிகள் இல்லாமல் 
திறந்து இருந்த 
என் இதயத்தை 
நேற்று பழகிய நீ 
பூட்டி வைத்து சென்றாயே ?
துடிப்பது என் இதயமடி ?
கிராதகி ... 

எல்லாவற்றுக்கும் 
மாற்று வசதி  இருக்கிறது 
தொலைந்து போன 
என் இதயத்திற்கு 
ஈடாக எதை தர போகிறாய்?

நீ வீட்டில் செல்லமாய் 
வளந்திருக்கலாம் 
என்னையும் ஏனடி 
குழந்தையாய் கொஞ்சுகிறாய் ? 
நீ கிள்ளி கிள்ளி 
என் கன்னங்கள் வலிப்பது 
உனக்கெங்கே தெரிய போகிறது? 
ஆனாலும் சுகமாய் தான் இருக்கிறது!!??!!

அனைவரும் வந்தனர் 
அனைவரும் போயினர்
ஆனால் நீ வரும்போது 
மட்டும் ஏனடி 
எனக்குள் இத்தனை நடுக்கம்? 
ஒரு பிரளயத்தை உண்டுபண்ணிவிட்டு 
ஒன்றுமே அறியாமல் போகிறாயே??

இத்தனை  நாளாக தொலைவில் இருந்து பார்த்தேன்
இன்று தான் அருகமையில் வந்தேன் 
அருகே வர வர அதுவரை 
என்னோடு இருந்த தைரியம் 
உன் அருகில் வந்த உடன் 
அரவமே  இல்லாமல் வெளியேறியது !!
குனிந்த தலை நிமிரவே இல்லை 
உன்னை கடக்கும் வரை??

என்னை உற்று பார்ப்பதை 
எப்போது நிறுத்த போகிறாய் ?
விழிகளில் தேக்கி வைத்திருக்கும் 
காதலை உன்  இதயத்திற்கு 
சொல்லி அனுப்பு !!
மற்றவை இதயம் அறிந்துகொள்ளும்  -
சொல்லாத வரை மனம் கூட 
பிணம் தான்!!!


1 Response to "காதலும் கற்று அற"

  1. agila Says:

    Miga arumaiyana kavithai.
    arumai endru sonnal kuda migaiagathu. Superb poem. Expecting more and more poem from you.........