அன்னை


 அன்னை 

அறியா பருவம் தனில்
அன்பை மட்டுமே உணர்ந்து
ஆதரவை கரம் பிடித்த கைகள்
அன்னையின் முந்தானை விட்டு
என் தமக்கையின் முந்தானையை
கெட்டியாய் பிடித்து கொண்டேன்
"தத்துபுத்திரன்" என்ற பட்டமும்
வாங்கி கொண்டேன்  -இன்றும்
அவள் தான் எனக்கு அமுது ஊட்டுகிறாள் !!
என் மீது உரிமையோடு சண்டையும் போடுகிறாள்
கடிகார முள் சில சமயம் தவறுதலாய் மணி காட்டும் -
இவள் காட்டும் கரிசனம் சொல்லில் அடங்காது !!!
எத்தனை தவறு செய்தாலும் -
முகம் காட்டாது என்னை அரவணைக்கும்
அன்பு நெஞ்சம் !!
காலம் ஒரு ஆசான்
எதையும் நமக்கு தாமதமாய் புரிய வைக்கும்
இவள் அன்பும் அப்படிதான்
புரியாத புதிராய் இருந்தவள்
புரிந்த பின்
நெகிழ்கிறது !!
போருக்கு பின் அமைதி
அனைவரும் அறிந்த ஒன்று
அமைதியாக இருக்கும் கடல்
ஒரு சமயத்தில் பொங்கும்
ஆனால் எவ்வளவு
ஆவேசம் இருந்தாலும்
ஒரு நொடியில்
மறந்து விடுவாள் !!!
இவளிடம்
இன்றும் நான் யாசிப்பது
இவளுடைய அன்பை மட்டுமே - இவள்
அன்பை மட்டுமல்ல
ஆஸ்தியையும் அள்ளி தந்தாள்
மறுபிறப்பில் இவள் மகவாய்
உயிர் எடுக்க ஆசை
இனியொரு பிறப்பு
எனக்கு இருக்கும்
என்ற பட்சத்தில்    

1 Response to "அன்னை"

  1. கிறுக்கல்கள் Says:

    கொடுத்து வைத்தவர் நீங்கள் , நிச்சயம் அடுத்த பிறவி இருக்கும் , அவரின் மகனாக பிறக்க என் பிரார்த்தனைகள்