கவிதை தொகுப்பு

அடிக்கடி ஜன்னலை கடக்கிறது என்னின் பார்வை
ஜன்னலுக்குளிருக்கும் நிலவை ரசிக்க....!!!!

இந்த நிலவு பார்வை பட்டாலே மோட்சம் தான்
சிறகுகள் இல்லாமலே பறக்கலாம் மேலே....!!!

விண்ணிலிருக்கும் நிலவு கூட இதன் மேல்
சற்றே பொறாமை கொண்டே .....!!!!

அல்லி குளத்தில் கூட தன்னின் பிம்பத்தை
காட்ட மறுத்தே மேகத்துள் மறைந்தே.....!!!!

காற்றுக்கு கூட உன்மீது மோகமாய் உன்னை
தழுவுகிறதே ஆடையோடு அவசரமாய்....!!!

உன்னழகை எனக்கு வடிவமாய் காட்டியே
மெய் மறக்க செய்கிறதே....!!!!

எனக்குள்ளே ஒலிக்கும் ரகசிய பாஷைகள்
உனக்கு மட்டும் புரிந்த பரிபாஷைகளாய்....!!!!

சிக்கி தவிக்கும் என்னின் மூச்சு காற்றின்
வெப்பம் கூட குளிர் தென்றலாய்
உன்னின் ஸ்பரிசம் பட்டே......!!!!

நிஜத்தை தொடரும் நிழலாய் உன்னை
தொடரும் என்னின் பார்வைகள்....!!!!

மேய்ப்போனிடம் வாஞ்சையாய்
வந்து நிற்கும் ஆட்டு மந்தையாய்....!!!!

உன்னை சுற்றியே நானும் உன்னை
பற்றியே என்னின் மனதும்....!!!! 
 
-------//------//------//--------//------//
 
அழகாய் தெரியும் அத்தனையும் அழகாய்
இயற்கையின் வண்ணத்திலே..........!!!!

வானவில்லும் வண்ண மயிலும்
துள்ளும் மானும் நீந்தும் மீனும்....!!!!

காற்றும் மழையும் பரவியே
புவியும் வானும்.....!!!!

தகதகக்கும் நெருப்பும் தகிக்கும்
சூரியனும் இயற்கையாய்....!!!!

வாழ்க்கை பாடத்தில் எல்லாமே
நேரெதிராய் எதிரெதிர் குணங்களோடே...!!!

உயிராயிருக்கும் மனிதரில் எல்லாமே
ஒரு சாராய் பேதமில்லாமல்.....!!!!

உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில்
வெறுப்பையும் சுமந்தே....!!!!

வஞ்சமதை நெஞ்சமதில் சுமந்தே
விஷமாய் கக்கும் மனிதமே....!!!!

உன்னுளிருக்கும் ஆன்மாவின்
சொரூபத்தை மறந்ததேனோ???

அமைதியும் அன்பும் பண்பும் மட்டுமே
அதனின் இயல்பாய்.....!!!

இயல்பை தொலைத்தே இன்னலை
அழைக்கிறாயே......!!!!

வாழ்க்கையும் ஒருமுறைதான்
வாழ்வதும் ஒருமுறைதான்
வாழ்த்தட்டும் தலைமுறையும்....!!!
 
--------//--------//--------//--------//-------//
 
வசீகரமாய் உன்னின் புன்னகை மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்...!!!!

என்னிடம் நீ பேசிய வார்த்தைகளை விட
உன்னின் பார்வை பேசியதே அதிகமாய்....!!!

அநேகமாய் அன்னோன்னியமாய் என்னும்
வார்த்தைகள் அடிக்கடி விழும் உன்னின் பேச்சில்....!!!

ஓரப்பார்வை பார்க்கும் போதும் ஒருக்களித்து
பார்க்கும் போதும் வீழ்கிறேன் நெடுமரமாய்.....!!!!

வெயில் வேளையில் குளிர்ச்சியாய் உன்னின்
பார்வை என் மீது பட்டால் போதும் சிம்லாவும்
கூப்பிடு தூரம் தான்....!!!

ஹாஸ்யமாய் பேசும் போது வாய் மூடி
சிரிப்பாயே சிரிப்புக்கே அர்த்தம் தந்தாய நீயே....!!!

பூமிக்கு வலிக்குமா உன் பாதம் வலிக்குமா என
மழலையாய் நடப்பாயே நாட்டிய விருந்தாய்.....!!!!

அடர்த்தியாய் கட்டிய மல்லிகையாய்
உன்னின் கருங்கூந்தல் இடைவரை நெளிந்தாடுமே.....!!!!

தினமும் தான் பார்க்கிறேன் ஆனாலும் புதிதாய்
பிறந்ததாய் நீயும்.....!!!!

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்
உன்னை எண்ண எண்ண ஓராயிரம் கவிதைகள்
உனக்கே சமர்ப்பிக்கிறேன்......!!!! 
 
-------//-------//------//-------//-------//-------//------/////------
 
துரத்தி செல்லும் நினைவுகளை
எட்டி பிடிக்கும் கனவுகள்.....!!!!

இரவின் போர்வையில் நித்தம்
நடக்கும் நித்திரை பயணமது.....!!!!

விழியில் விரியும் காட்சிகள்
விழிகள் மூடிய வினாடிகளில்....!!!!

தூக்கமென்னும் போதையில் விடியும்
வரையில் விழாகோலமாய்....!!!!

எது வேண்டுமானலும் நடக்கும்
உயிர் போய் உயிர் வரும் உன்னத விளையாட்டு....!!!

மரண ஒத்திகையில் மனங்கள் பேசும்
மௌன மொழிகள்.....!!!!

விழித்திருக்கும் பொழுதுகளை தின்று
கழித்த இரவுகள்....!!!

விடியலின் அஸ்தமனத்தில் இரவுகளின்
விடியல்கள்....!!!!

ஒவ்வொரு நாளின் இறுதியில் இன்னுமோர்
நாளுக்காய் எத்தனிப்புகள்....!!!!

இத்தனையும் தாண்டியே வாழ்க்கையும்
ஓட்டமாய்.....!!!! 
 
-----//------//-----//-----//-----//------//-----//-----//-----//
 
தினமும் பார்க்கும் கண்ணாடி தாயினும்
இன்று மட்டும் ஏனோ பளீரென காட்டுகிறதே.....!!!

தினமும் தேய்க்கும் பற்கள் தாயினும் இன்று
மட்டும் ஏனோ பளிச்சென தெரிகிறதே....!!!

கோரையாய் நிற்கும் என்னின் தலை முடி கூட
இன்று மட்டும் ஏனோ மிருதுவாய் இருக்கிறதே....!!!

தினமும் உடுத்தும் உடைகள் தாயினும் இன்று
மட்டும் ஏனோ புதிதாய் தெரிகிறதே.....!!!!

தினமும் சாப்பிடும் கைகள் இன்று மட்டும்
ஏனோ நிதானமாய் எனக்கு கொடுக்கிறதே...!!!!!

கோபத்தை கொப்புளிக்கும் என்னின் வார்த்தைகள்
வீணையாய் மீட்டுகிறதே.....!!!!

என்னுள் வந்ததிந்த மாற்றத்தை என்னால்
மட்டுமே உணர முடிகிறதே.....!!!!

இதெல்லாம் எதனால் எப்போதிருந்து என்னுள்
இந்த மாற்றம்....!!!!

மிருகமாய் திரிந்த என்னையும் மனிதனாய்
மாற்றியதெது...??

இப்போது தான் எனக்கு எல்லாம் புரிகிறது
நேற்று என்னிடம் விலாசம் கேட்டு சென்றாயே....!!!!

விலாசம் கேட்டு தான் சென்றாயா இல்லை என்னை
விசாலமாக்கினாயா....??

எனக்கே புரியாத புதிராய் ....!!! ஆனாலும்
இதுவும் நன்றாய்தானிருக்கிறது....!!!!!
 ------//-----//-----//-----//-----//------///------//------//
 
என்னோடு சேர்ந்திருந்த தருணத்திலும்
என்னை விட்டு பிரிந்திருந்த தருணத்திலும்

என் மனதின் எண்ணங்கள் எப்போதும்
உன்னை சுற்றியே பூவை சுற்றும் வண்டாய்.....!!!!

என்னின் தேவைகள் அறிந்தே என்னின் பார்வை
பொதிந்த அர்த்தம் தெரிந்தே அளவளாவியே......!!!!

என்னின் பலமும் பலவீனமும் புரிந்தே
பக்க பலமாய் இருந்தாயே....!!!!

புரிதல் சுகமே அறிதல் சுகமே அதையும் தாண்டி
விட்டுகொடுத்தலும் சுகமே.....!!!

என் வாழ்க்கையில் வெறுமையான பக்கங்களில்
நித்தம் எழுதும் கவிதைகளில் தேங்கியிருப்பதே
உன்னோடுனான என்னின் ஊடலும் கூடலுமே.....!!!!

நினைவு புத்தகத்தை நிரப்புகிறேன் கண்ணீர்
மை வைத்தே.....!!!

ஆனாலும் மனதிற்குள் சொல்லிகொள்கிறேன்
இவையெல்லாம் உனக்காய் செய்த யுத்தங்கள்.....!!!!

சத்தமில்லாமல் எனக்குள் ஒரு ரத்த ஆறு
ஓடுகிறது என் இதயத்தை கொன்றே.....!!!!

உயிர் வாழ்கிறேன் என்றே ஒற்றை வரியில்
சொல்கிறேன் சடலமாய் திரிவதால்....!!!!

இரக்கமில்லாதவன் என சொல்வதை விட
இதயமில்லாதவன் என சொல் பொருத்தமாய்....!!!! 
 ----------//----------//-----------///-------///---------//------///-------
 
இருட்டின் நிசப்தம் எங்கோ கேட்கும்
சுவர் கோழியின் சப்தம் என் காதருகே....!!!!

தெருவில் விகாரமாய் ஓலமிட்டே
ஓடும் நாய்களின் காலடியும் சேர்த்தே.....!!!

தூங்கும் மனிதர்களை ஊது குழல்
சப்தத்தில் எழுப்பும் ராத்திரி காவலாளி....!!!!

இத்தனையும் மீறி தூக்கம் மட்டும்
வராமல் இருட்டை வெறிக்கும் பைத்தியகாரனாய்....!!!

அனைத்தையும் கேட்டு கொண்டு
அமைதியை தேடுகிறேன் இருட்டில்......!!!!

ஒவ்வொரு முறையும் தோற்கிறேன்
தூக்கதோடு ......!!!!

தன்னிசையாய் கண்கள் மூடியே
நித்திரையை துரத்துகிறேன்.....!!!

எப்போது தூங்கினேன் எனக்கே தெரியாது
விடியலின் ராகம் பறவையின் சீழ்க்கையில்.....!!!!

நடுநிசி நேரம் தான் விடியலுக்கு நேரமிருக்கு
தூக்கம் தொடும் தூரத்தில் தான்....!!!!

மீண்டு வர யத்தனிக்கிறேன் கனவுகள்
மட்டும் இலவசமாய்.....!!!!
 -----------//----------//--------///-----------//--------///-----------//
 
மனனமாய் உன்னின் பெயரை தினமும்
மந்திரமாய் ஜபிக்கிறேன்....!!!!

தினமும் காலையில் கானும் உருவமில்லா
கடவுளாய் நம்மின் காதல்.....!!!!

பரிபாஷையில் பார்வைகள் பரிமாறும்
பயணத்தில் பக்கமே இருந்தாலும் தூரமாய்.....!!!

அருகாமையில் இருந்தாலும் அளாவிட மனமும்
துள்ள மௌனத்தை பறை சாற்றியே வருவாயே....!!!!

எப்போதோ வரப்போகும் பேருந்திற்கு இப்போதே
தயார் ஆவாயே....!!!!

சட்டென மாறும் கால மாற்றமாய் அடிக்கடி
உன்னின் முகமாற்றம் எனக்குள் பூகம்பமாய்....!!!!

தெரிந்தும் தெரியாமலும் சில சமயம் உன்னின்
கோப கனலின் வெப்பம் மே மாத கோடையாய்....!!!

தென்றலாய் இருக்கும் வரையில் உன்னருகே
வருவதே வரமாய்.....!!!!

இன்றும் எனக்கு புரியாத புதிர் ஒன்றெனில் அது
உன்னின் மனமெனும் மாயம் ஒன்றே.....!!!!
 --------------//----------------///----------//------------///-----------//
உறக்கத்தின் மௌனத்தில் விரியும்
மொட்டாய் சந்தோசமாய் கனவு....!!!!

நினைவுகளில் காணகிட்டாத நிம்மதியும்
சந்தோசமும் கைகோர்த்து கொண்டு....!!!!

கனவுகளில் மட்டுமே வாழ்கிறேன்
எப்போதுமே சந்தோசமாய்.....!!!!

சிரித்த முகமாய் அருகாமையில் நீயும்
மனம் முழுதும் உற்சாகமாய் நானும்....!!!

அரியதோர் வாழ்க்கை எனக்கு அமைந்ததாய்
அப்படியொரு மகிழ்ச்சியில் பெருமிதமாய்.....!!!

என்னை நினைத்தே தன்னின் தூக்கத்தை
தொலைக்கும் என்னின் தாயும் கூட களித்திருப்பாளே
இப்படி ஒரு காட்சியதை கண்டாலே....!!!!

இத்தனையும் நடப்பது கனவில் மட்டும் தான்
ஆனாலும் மனதுக்குள் உற்சாக தூறல்கள்.....!!!

ஏக்கங்களின் பிம்பங்கள் தான் கனவின்
அஸ்திவாரமாய் எங்கோ படித்த ஞாபகமாய்....!!!!

கனவில் இருக்கவே பிடிக்கிறதுயெனக்கு
தூக்கமில்லா கனவுண்டோ....????

தூக்கத்தை தொலைத்தாலும் கனவுகளை
தொலைக்க இஷ்டமில்லாமல் .....!!!!!

வராத தூக்கத்தை பிராயாசையோடும்
பிரயத்தனதோடும் தேடியே....!!!!

சுடும் கண்ணீரின் வெப்பத்தை தாண்டி
தூக்கத்தில் கண்கள் அலைபாய்ந்தே.....!!!!

எப்போதோ வருகிறாய் அப்போதாவது
உன்னிடம் வரவேண்டுமே.....!!!!

அதற்கேனும் கனவு வேண்டுமே....!!!!

தூக்கத்தை தாருங்கள் என்னின் விடியலை
தருகிறேன் யாருக்கேனும்....!!!!! 
-------------//-----------///----------//-------------///----------//
 
 
 
 

0 Response to "கவிதை தொகுப்பு"