அடையாளங்கள் வாழ்வின் அங்கங்களாய்
பால்ய பருவம் முதலே குறியீடு முக்கியமானதாய்....!!!

வீட்டிற்கு பேர் வைக்கும் பழக்கம் எங்கிருந்து
தொற்றி கொண்டதோ தெரியாதே....!!!!


பால் காரர் வீடு மணிய காரர் வீடு பங்களா வீடு
இப்படி சொல்லி கொண்டே போகலாம்.....!!!!

தெருவுக்கு தெரு ஏதாவதொரு வீட்டிற்கு
நிச்சயமெனும் பேரிருக்கும் அடையாளமாய்....!!!!

பேய்க்கு கூட வீடுண்டு அதில் குடியிருக்க மட்டுமே
பயமும் கூடவே உண்டு....!!!!

அக்காக்களின் தோழிகளும் அக்காக்களே ஆனால்
தங்கைகளின் தோழிகள் மட்டுமே தன்னுடைமையாய்....!!!!

மனதிற்குள் பயம் இருந்தாலும் நயந்து பேசியே
கனிய வைக்கும் காதலும் உண்டு....!!!!

வீச்சருவா வேல்கம்பு படைசூழ விரட்டி வரும்
சொந்த பந்தங்களும் தொப்புள் கொடி அறுபட்டால்
அடங்கி போகும் அமைதியாய்.....!!!

எல்லாம் ஒரு நாளில் புரிய வரும் தெரிய வரும்
எல்லாமே வெறும் மாயை தானென மனதினுள்
எங்கோ ஓங்காரமாய் ஒலமிடும் வெளி தெரியாமலே....!!!!

மீண்டும் ஒரு ஜனன மரண போராட்டமாய் வாழ்க்கை
மட்டும் பயணிக்கும் எந்ததொரு சலனமில்லாமல்....!!!! 


------------//---------------///------------------////-----------//////------------


நிதமும் நீ கடந்து போன ஒவ்வொரு நொடியும்
எனக்கு திரும்பி கிடைக்காதாவென ஏக்கத்துடனே
கடந்து போகிறேன்.....!!!!

விடியலில் ஆரம்பிக்கும் உன்னின் துரத்தல்
நன்பகல் பகல் பிற்பகலென விரிந்தே
என்னையும் உன்னோடு சேர்த்து கொண்டே.....!!!!

எப்போதுமே என்னுடன் பயணிக்கிறாய்
இருட்டில் கூட மறைந்து போகும் எந்தன்
நிழலும் இன்னொரு முகமானதாய்....!!!!

நொடி வினாடி நிமிடத்தில் ஜனித்தே
மணியாய் நாளாய் வாரமாய் மாதமாய்
வருடமாய் என்னின் வரமாய்.....!!!!

பிறிதொரு நாளின் துவக்கத்தில் எனக்குள்
அவதியும் அவசரமும் படபடப்புமாய்
தவிப்பும் சேர்த்தே உன்னை உணரவைத்தாயே....!!!!

ஒவ்வொரு நாளும் என்னை அழகுபடுத்துகிறாய்
அடுத்தொரு நாளில் என்னை அவதிக்குள்ளாக்கியே
பிறப்பின் தவத்தை எனக்குள் புகட்டினாயே..!!!!!

வருடங்கள் நகர நகர என்னுள் ஒரு பெரியதோர்
மாற்றமதை நிகழ்த்திவிட்டு நகர்ந்து விடுகிறாய்
ஏதுமறியா கள்வனாய் அருவமாய் அகன்றே....!!!!

காலமே உன்னை வணங்குகிறேன் ஒவ்வொரு
நாளும் என்னை புதுப்பித்தே வழியனுப்புகிறாய்
எனக்குள் இருக்கும் வலிகளை வடிகட்டியே....!!!!

எதையும் தாங்கும் வலிமையதை வலியால்
உணர்த்தியே என்னை இறுக்குகிறாய்
இறுகி போகிறேன் இறுமாப்பாய்/...!!!! 
 
--------------------///---------------------////--------------------/////-----
 
 
ஞானம் என்பதென்ன...?

பிறப்பில் சிறந்ததென இறைவனை கேட்டேன்
பிறந்ததனைத்தும் சிறப்பே என்றான்...!!!

புல்லாய் புழுவாய் எறும்பாய் ஓரறிவாய்
பிறந்தவையெலாம் என எதிர்கேள்வியில் வினவ...!!!

மௌன பார்வையில் முற்பிறவி எதுவோ
அதிலிருந்தே இப்பிறப்பும் என பதிலுரைத்தான்....!!!

செய்யும் செயலும் அறமும் மட்டுமேயன்றி
வேறெதுமில்லை யென கூறி முடித்தான்....!!!!

இப்பிறப்பில் எனை ஏனோ ஆறறிவு படைத்த
மனிதனாய் இருத்தினாயே இதனின் அர்த்தம்
எதை குறித்தே என விளக்கம் கேட்டேன்...!!!!

அர்த்தமாய் சிரித்து விட்டே அவசியமா உனக்கென
அமைதியாய் கேட்டான் ......!!!!

தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்டேனன்றி
வேறெதும் இல்லையென பதிலுரைத்தேன்.....!!!!

இப்பிறப்பு உனக்கு இந்த வையகமே வாழ்த்துரைக்க
வாழ பிறந்தாயென கூறி முடித்தான்.....!!!

வாழ்த்துரைப்பதாய் கூறினாயே வசைபாடி தானே
மகிழ்கிறதென மனம் வருந்தி கூறினேன்...!!!

எல்லாமே ஒரேநாளில் முடிந்துவிட்டால் ஜனன
மரண கணக்கு தவறாகி போகுமென தவறாமல்
சொல்லி முடித்தான்....!!!

இத்தனை காலமும் இழிந்துரைத்த சமூகம் எனை
எப்போது உச்சி மோந்து பாக்குமென கேட்டதொரு
கேள்விக்கு பலமாய் சிரித்தான் பதட்டமில்லாமல்.....!!!

பயிரிட்ட நாளிலே விளைவதில்லை பயிரெலாம்
விட்டதொரு துளியிலே பிறப்பதில்லை கருவெலாம்
அதற்கென காலகெடு இருக்கிறதே நீ அறியாயோ......!!!!

ஞானம் பெற்றால் மட்டுமே என்னோடு பேசமுடியுமென
எப்போது நீ உன்னை உணர்கிறாயோ அப்போது தானுனக்கு
வையகம் பின்னே வருமென வாழ்த்தி சென்றான்....!!!

ஞானம் என்பதென்ன என வினவினேன் அனுபவித்து
அறிந்து கொள்ளென சொல்லி சென்றான்....!!!

அனுபவிக்கிறேன் இன்றும் ஞானமென எதாகினும்.....!!!!

களவா... காதலா... உயிர்வதையா.... கொடுஞ்செயலா...?
ஏதும் அறியாமல் தத்தளிக்கிறேன் தரையில் விழுந்த மீனாய்...!!!
 
--------------------///------------------////------------------////-------------------------///
 
இலையிலிருந்து வெளியேறிய புழுவாய்
மனம் முழுதும் கீறிய ரணமாய்.....!!!

படைத்திட்ட இறைவனிடம் இறைஞ்சினேன்
இப்படி ஒரு இழி பிறப்பு எனக்கெதற்கென..!!!

சிரித்தவாறே இறைவன் சொல்லி சென்றான்
பொறுமையாய் இருவென.....!!!!

நாட்கள் நகர்வதே பெரும்பாடாய் என்னின்
நகர்தலும் சேர்த்தே....!!!!

மெல்ல மெல்ல எனக்குள் பரிணாம வளர்ச்சியாய்
சிறகுகள் தோன்ற வலிபொறுக்காது அரற்றியே....!!!

அப்போது சொன்னான் இறைவனும் அமைதியாய்
இருவென....!!!

பார்ப்பவர் மனம் கவர அழகாய் பவனி வருகிறேன்
அனைவருமே எனை விரும்பியே...!!!!

இப்போது இறைவன் எனை கேட்டான் இந்த
பிறப்பு உனக்கு வேண்டுமா என...!!!

இப்போதும் இறைவனிடம் வேண்டுகிறேன்
இந்த பிறப்பே போதுமென...!!!

 

 

0 Response to " "