ஹைக்கூ
சிறை பிடித்த வார்த்தைகள்
கவிதையாய் !!!!
சிறை பிடித்த இதயங்கள்
காதலாய்!!!!
சுதந்திரமாய்  இருந்தால்
எதுவுமே நிலையாய் இல்லை...

உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் எதுவுமில்லை
ஆனாலும் உன்னிடம் பேச
காரணம் வேண்டுமா என்ன?

காலையில் விழித்தவுடன்
கண்ணாடி பார்க்கிறேன்
என் கண்ணில் எப்போதும்
நீ இருக்கிறாய் என்பதற்காக

உனக்கும் எனக்கும்
என்ன சம்பந்தம் ? -கேட்கிறாய்
உன்னிடம் என்னை
தொலைத்துவிட்டு
நான் படும்
அவஸ்தை தெரியாமல்?


கூடு விட்டு கூடு பாயும்
வித்தை
காதலில் மட்டுமே
காரணம்
அவளுக்காக
இவன் படும்  அவஸ்தை

உயிர் இருக்கிறது
எப்படி தெரியும் ?
இதய துடிப்பாய்
நீ இருக்கும்போது !!
மட்டுமே

உலகம் உருண்டை
உலகறிந்த உண்மை
நீ மட்டுமே அழகி
நான் மட்டும் அறிந்த
உண்மை !!!!

ஆலயம் ஆண்டவன்
இருக்கும் இடம்..
அவள் இருக்கும் இடமே
எனக்கு ஆலயம் !!!

என்னை உன் கண்ணால்
தினமும் அடிக்கிறாய்
ஆனாலும் எனக்கு
சுகமாய் தான்
இருக்கிறது...!!
நிறுத்திவிடாதே !!!

மயக்கும் உன் விழிகளை
கொஞ்சம் மூடிகொள்
மருத்துவர் எல்லாம்
உன் வாசலில்
மயக்க மருந்து
மிச்சமாம் !!!

இதயத்தை
பறவையோடு ஒப்பிடாதீர்
எப்போது பறக்கும்
என்று யாராலும்
கணிக்க முடியாது !!!

கொலுசு அணிந்த
உன் கால்கள்
நக பூச்சோடு
உன் கை விரல்கள்
மையிட்ட உன் கண்கள்
இதை எழுதினாலே
கவிதையாய் தெரிகிறது
உண்மைதானே?

பல நிறங்களில் -  நீ -
உடை அணிந்தாலும்
உன் வெட்கபுன்னகையில்
அவைகள் நிறங்கள்
அற்று போகின்றன !!!

உன்பெயர் சொல்லி
அழைக்கும்போது
தேனை   தடவிய
சுளையாய்
நாவில் இனிக்கிறது !!
எனக்கு மட்டுமே!!!

முதன் முதலில்
உன்பெயரை உச்சரித்தேன்
 திரும்பி பார்த்து
புன்னகை பூத்தாய்
இப்போதெல்லாம்
உன்பெயர் தான்
எனக்கு மந்திரமாய் !!!

நேயர் விருப்பமாம்
அவர்களுக்கு தெரியுமா
என்னுடைய விருப்பம்
நீதானென்று ??

உதட்டு பூச்சு
நக பூச்சு
நகை பூச்சு
எல்லாம் சரி
அதென்ன
வெட்கபூச்சு?
யார் சொல்லி கொடுத்தது? 

 

2 Response to "ஹைக்கூ"

 1. kargil Jay Says:

  காலையில் விழித்தவுடன்
  கண்ணாடி பார்க்கிறேன்
  என் கண்ணில் எப்போதும்
  நீ இருக்கிறாய் என்பதற்காக
  wowow..wowowwwww

 2. asha Says:

  simply superd "ஹைக்கூ" jayaram sir..