என்னை அடிக்கும்போது
வலி தெரியவில்லை
 நீ என்னை கடந்த பிறகு
வலியை உணர்கிறேன்
என்னை தொடாமல்
என்னை அடிக்க
உன்னால் மட்டுமே முடியும்
உன் கண்களுக்கு வலிமை
அதிகம் தான் !!!

பேசிய வார்த்தைகளுக்கு
உயிர் இருந்தால்
இன்றும் அது
உன்னை
நேசித்ததை
உளமார
சொல்லிருக்கும்

உனக்கென்ன பைத்தியமா
மழையில் நனையும்
என்னை ஏளனம் செய்தனர்
என் நண்பர்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
மழையில் நனைவது
பிடித்த விஷயம் என்று
நீ என்னிடம் சொன்னது??

 

2 Response to " "

 1. ரேவா Says:

  உனக்கென்ன பைத்தியமா
  மழையில் நனையும்
  என்னை ஏளனம் செய்தனர்
  என் நண்பர்கள்
  அவர்களுக்கு எப்படி தெரியும்
  மழையில் நனைவது
  பிடித்த விஷயம் என்று
  நீ என்னிடம் சொன்னது??

  superbbbbbbbbb

 2. ஆர்.இளங்கோவன் Says:

  மழைத்தூறல்களில்
  மணித்துளிகள்
  மறைகின்றன....
  மனமெங்கும்
  மகிழ்ச்சித்துளிகள்
  மலர்கின்றன..

  வாழ்த்துக்கள் ஜெயராம்..

  நட்புடன் இளங்கோவன்
  சென்னை