மழையே நீ
நேராக கடலில்
போய் விழலாமே
எங்கள் வீதிகளில் '
உலா வருவதில்
உனக்கென்ன ஆனந்தம் ?
உன் பலத்தில்
ஒரு பாதி கூட
எங்கள் தெருக்களுக்கு
கிடையாது
நொடியில் உடைந்து போய்
சிதிலமாகி போகும்
பள்ளங்கள் தெரியாமல்
வாகன ஓட்டிகள்
வீழ்ந்து எழுவதை
காண உனக்கென்ன ஆவல் ?
உன் மீது எனக்கிருந்த
அவாவை
அறவே ஒழித்துவிடாதே!!
அன்பை தவிர வேறறியேன் !!

  

1 Response to " "

 1. ஆர்.இளங்கோவன் Says:

  அன்பின் ஜெயராம்
  அற்புதமான ஏக்கங்கள்
  அடங்கிய வரிகள்
  இயற்கையின் சீற்றங்கள்
  சில நேரங்களில்
  இதயத்தினை கீறிவிடுகின்றன..

  வாழ்த்துக்கள்
  நட்புடன் இளங்கோவன்.
  சென்னை