கிறுக்கலாய் ......

கிறுக்கலாய் ...... சிரிக்க கற்று கொடுத்தாய்
சிந்திக்க கற்று கொடுத்தாய்
சிறகடிக்க கற்று கொடுத்தாய்
சொல்லாமல் சென்றாய்
அழுகை மட்டும்
சொல்லி கொடுக்காமல் .....

நேர் வகிடு
நெற்றியில் சந்தன கீற்று
குங்குமமும் சேர்த்து
காதோரம் ரோஜா பூ
எளிமையான வாயில் புடவை
வேறு எதுவும் தேவையில்லை...
அலங்கார பொருட்கள் இல்லாமல்
அம்மன் வீதி உலா...

பரமன்
பிரம்மன்
நாராயணன்
மூவரும் சேர்ந்து
தரிசிக்க வந்தேன்னவோ
உன்னை தான் ...
சக்தியாய் நீ...

கடவு சொல்
கணினி கேட்டது
இன்றும் ஜெபிக்கிறேன்
உன்பெயரில் தான்
என் நாள் துவக்கம் !!!

சத்தம் உனக்கு பிடிக்காது
சாந்தம் எனக்கு பிடிக்காது
நமக்குள் எப்படி நடந்தது
காதல் யுத்தம் ....

ஒரு முறை சிரித்தால் -
சிநேகம்
மறு முறை சிரித்தால் - அன்பு
மறுபடியும் சிரித்தால்
எப்படி எடுத்துகொள்வது ?
அதையும் நீயே சொல்லிவிடு ...!

ஒவ்வொரு முறையும்
உன்னிடம் பேசும்போது
தொலைபேசியில்
காசுகளை போடும்போது
எண்ணுவதில்லை
உன் சிரிப்பிற்கு
விலை ஏது?

காந்தம்
இரும்பை இழுக்கும்
இயற்கை விதி
உன் விழியால்
நான் இழுக்கப்பட்டேன்
ஒ!! இது தான் காதல் விதியா?

நீ மருத்துவம் படிக்கிறாய் !!
உனக்காகவே புதிது புதிதாய்
வியாதிகளை தேடுகிறேன் !!
எனக்குள் செலுத்தி கொள்ள .....

ஊசி எடுத்து
நீ குத்திய உடன
முகத்தை சுருக்கினாய்
அன்று முழுதும்
எனக்கு வலித்தது...

மனதில் ரணமாய்
உன் எண்ணம்
வெளியில் அனலாய்
வீசியது
இப்போதும் கூட
மருந்திட
வர மாட்டாயா....
ரணத்தில் வழிகிறது
ரத்தம்...

முத்தம் கொடுத்தாய்
இரவுக்கு கூட தெரியாமல்
நிலவு மட்டும்
கண்டு களித்தது
அன்று நடந்த
அற்புதத்தை !!!

எப்போதும் போல்
என்னிடம் சண்டை போடு
இப்போதெல்லாம் - என்
தூக்கம் கூட
கெடுகிறது
சண்டையில்லாமல் ....

ஒருவழியாய்
அனைவரையும்
சமாதான படுத்தினேன்
உன்னிடம் தான் பாக்கி
உன் சம்மதம்
எப்போது தருவாய்?

அடிக்கடி கடிகாரம்
பார்க்கும் பழக்கம்
எனக்கு கிடையாது
உன்னிடம் பழகும் வரை ....

நேரம் தவறாமல் நீ...
நேசம் தவறாமல் நான் ...
விழிகளில் விசாரித்து
மௌனமாய் செல்லும்
நமது காதல்
ஒருவகையில்
ஊமை காதல் தான்....

கடற்கரையில்
கால் தடங்கள்
நடந்தது நீ,,,
மனதில் பதிந்தது
ஓவியமாய் !!!


எங்கோ அடிக்கும் 
மணியின் ஓசை
உன்னை நினைவு படுத்துகிறது
உனக்காய்
கோவிலில் காத்திருந்ததை ....!!

1 Response to "கிறுக்கலாய் ......"

  1. கிறுக்கல்கள் Says:

    அற்புதம் .இதை பாராட்டும் தகுதி எனக்கில்லை என்றாலும் உண்மையை உரைக்கும் தகுதி எனக்குண்டு .