வலியது தாயன்பு

வெற்று காகிதமாய் இருந்த
என் மனதில்
கிறுக்கலாய் சில
வரிகள்
வாரம் தப்பினாலும்
நாட்கள் தப்பினாலும்
நேரங்கள் தப்பினாலும்
நிமிசங்கள் தப்பினாலும்
அவள் நினைவு
தப்பியதில்லை
உறங்கும் பொழுதும்
உறக்கம் வராத போதும்
அவள் சிந்தனை தான்
என்னை ஈன்ற என் தாய்
எவ்வளவு சிரம பட்டிருப்பாள்
நெஞ்சம் கசிகிறது
அவள் கண்ட வலி கண்டு...

1 Response to "வலியது தாயன்பு"

  1. meens Says:

    அருமை .... பெண்கள் நாங்கள் அம்மா ஆகும்போதும் எங்கள் குழந்தை வளரும்போதும் இப்படிதானே நம் அம்மாவும் நம்மை பார்த்து கொடு இருப்பாள் நாமும் இப்படிதானே அம்மாவை படுத்தி இருக்கிறோம் என்பதை உணருவோம் .. நீங்கள் காதலின் நிலையை நினைவுகளை நினைப்பின் காத்திருத்தலின் வலியை உணரும்போது அம்மாவின் வலியை ஈன்று எடுத்தலின் வலியை உணர்வதாக உவமை காட்டி உள்ளது அருமை ஆக உள்ளது ...