மரித்து போக ஆசை..
பிறக்கும்போதே
பிரம்மன்
இறப்பையும்
இணைத்து விட்டான்
இலவசமாக
மரணம் என்பது
மறுபடியும் ஜனனமே ....
பிறவா வரம் வேண்டி
தவமாய் தவம் இருந்தோர் பலர் ...
மரித்து போக ஆசை
என்னுடைய மரணம்
சிலரை களிப்புற செய்யலாம்
பலரை கலங்க செய்யலாம்
உறவுகளை
பலம் இழக்க செய்யலாம்
ஆனாலும்
மரித்து போக ஆசை
இரவல் வாங்கி வந்த உயிர் தானே
சுயம்புவாய் இருந்து இருந்தால்
சிறப்பாய் இருந்து இருக்கும்
மரணம் என்பது
மற்றுமோர் பயணம் தான்
ஆனாலும் மரித்து போக ஆசை
தொட்டு விட்ட தூரம் தான்
தொடும் நேரம் தான் தெரியாது
ஆனாலும் மரித்து போக ஆசை
இனியொரு பிறப்பெடுத்து
எனகென வாழ ஆசை
இருந்தவரை வாழ்ந்துவிட்டேன்
இயன்றவரை தந்துவிட்டேன்
நிராயுதபாணியாய் நிற்கிறேன்
கடந்து வந்த பாதை
கடக்க போகும் பாதை
எல்லாமே ஒரு வழி பயணம் தான்
எந்த ஊருக்கு சென்றாலும்
இறுதி ஊர்வலம் மயானம் தான் ....
இடையில் கிடைக்கும் எதுவும்
நிதர்சனம் கிடையாது...
நிம்மதியும் கூட தான் ....
ஆனாலும் எனக்கு
மரித்து போக ஆசை...
இழப்புகள் இருக்கலாம்
வலிகள் இருக்கலாம்
வழிகளும் இருக்கலாம்
வஞ்சமும் இருக்கலாம்
நஞ்சும் இருக்கலாம்
அன்பும் இருக்கலாம் -ஆனாலும்
எனக்கு மரித்து போக ஆசை
அல்லல் படும் உயிரை
அனுதினமும்
சுமந்து
ஊனுக்கு ஊன் - என
உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசும்
பஞ்சமகா பாவிகள்
லோகத்தில் இருந்து
மரித்து போக ஆசை...