இன்று எனது நாள்...


இன்று எனது நாள்...அதிகாலை எழும்போதே
என் மனதில் ஒரு உவகை
சொல்லமுடியாத சந்தோசம்
பிறந்த பிறப்பின்
பலனை உணர்ந்த தருணம்
இன்று மட்டும்
இப்படியே இருந்திட கூடாதா?
எப்போதும் இது போல்
இருந்தால் ஆகாதா ?
என்னை எதிர்நோக்கி -பெரும்
படையே இருந்தது
அனைவரின் முகத்திலும்
சந்தோஷ மின்னல்கள்
முன் பின் தெரியாதோர்
முகம் நோக்கி நலம் விசாரித்து
நினைக்கும் போதே
சீழ்க்கை அடித்தது இதழ்...
எல்லாம் ஆள்காட்டி விரலில்
வைக்கப்படும் ஒரு துளி மை
மந்திரம் தந்திரம்
வசியம் எல்லாம் செய்யும்
வைக்கப்படும் இந்த மை.!!
ஒரு நாள் ராஜா கதை தான் !!
இருந்தாலும் பிடித்து இருக்கிறது!!
நீண்டு நிற்கும் கூட்டத்தில்
இணைப்பாய் என்னையும்
சேர்த்து கொண்டேன்
வாக்கு பதிவிற்கு
சோதனை கூடத்தில்
எலிகளையும் தவளையும்
சோதித்த எனக்கு
என்னுடைய வாக்காளர் அட்டையை
சோதித்த போது ஏனோ அது
எனக்கு நினைவுக்கு வந்து போனது !!
அனைத்தும் முடிந்து
வாக்கு போட்டு வெளிய
வந்த பிறகு
எவரும் என்னை
ஏறடுத்து பார்க்கவில்லை
அவர்களை சொல்லி
குற்றமில்லை
அவர்களும்
அப்படிதானே ....

0 Response to "இன்று எனது நாள்..."