ஹோலி

வான வில்லின் வர்ணங்கள்
வண்ண வண்ண பொடிகளாய்
பொழுது பூக்கும் வேளையில்
பூக்களை போல்
கூட்டம் கூட்டமாய்
வண்ணங்களை பூசிக்கொண்டு
வாலிபமும் வயோதிகமும்
வயது மறந்து
விளையாடும்
வண்ண வண்ண விளையாட்டு
வெட்கம் கூச்சம் எல்லாம்
வெட்கத்தோடு
வெளியேறி போகும்
விண்மீன் கூட்டமாய்
வீதியெங்கும்
விடலைகள்
விதி விலக்கில்லாமல்
குழல் ஊதிய கண்ணனாய்
குழல் கொண்டு வர்ண ஜாலத்தை
பன்னீராக தெளித்து
வாழ்த்து பாடும்
வைபோக விழா
காதலின் ஊடலும்
கண பொழுது
பின் தள்ளும்
உவகையோடு
உள்ளம் கொஞ்சும்
உலகம் கொஞ்சும்
உன்னத விளையாட்டு
உணர்வுகள் தெறிக்க
உளமாய் வாழ்த்தினேன்
2 Response to " "

 1. மதுரை பொண்ணு Says:

  ம்ம் அருமை தொடர்ந்து எழுதுங்கள்..

 2. meens Says:

  //வெட்கம் கூச்சம் எல்லாம்
  வெட்கத்தோடு
  வெளியேறி போகும் //..... வயது ஆண் பெண் பேதமின்றி விகற்பமில்லாமல் வண்ணம் பூசி விளையாடும் விளையாட்டை அற்புதமாக வெளி படுத்தி உள்ளீர்கள் ....//குழல் ஊதிய கண்ணனாய்
  குழல் கொண்டு வர்ண ஜாலத்தை
  பன்னீராக தெளித்து
  வாழ்த்து பாடும்
  வைபோக விழா//.....மிகவும் அருமையாக உள்ளது ..