எண்ண சிதறல்கள்.....







என்னை கவிஞனாக்கினாய்...
ஒப்பு கொள்கிறேன்...
செல்லா காசான எனக்கு
மதிப்பு தந்தாய்
மறுக்கவில்லை....
காத்திருப்பின்
வெறுமையை
எனக்கு உணர்த்தினாய்...
உண்மைதான்....
பிரிவின் வலியை
கற்று தந்தாய்.....
சலனபடவில்லை...
புலம்பலின்
அர்த்தம் சொன்னாய்...
அதையும் ஏற்றேன்...
அனைத்தையும் செய்த நீ
அடக்கம் செய்து விட்டு
போயிருக்கலாம் ....
அமைதியாய்
இருந்திருப்பேன்...
சுவாசம் கூட
சிறு சலனமே
என்னை பொறுத்த வரை...
நீ இல்லாத போது...


இன்று மட்டும்
நீ சொல்லிவிட்டு போ ...
இதுவரை நடந்தவை
கனவு தான் என்று...
நிஜத்தின் சுவடு
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னை அரிக்கட்டும்.....
அப்போதாவது
நீ உணர்வாய்...
என் வார்த்தைகள்
கலப்பு இல்லை என்று... 



துரத்தி துரத்தி
சென்ற
மழையின் வேகம்
கடைசியில்
என்னை தொட்டு
நனைத்து சென்றது...
தோல்வியின்
முகத்தில்
வேர்வை
சிதறல்கள்
மழை துளிகள்...
மௌனமாய்
ஒரு புன்னகை...

மழையின் சாரல்...
அந்தி சாயும் பொழுது..
ரோந்து பணியில்
கண்ணும் கருத்துமாய்...
காவலாளிகள்....
வாகன சோதனை...
மனங்களின்
புலம்பல்கள்...
டியூஷன் போன
பையன் திரும்பி
வந்தானா...?
கல்லூரியில் இருந்து
கன்னி பெண் திரும்பினாளா?
பெண் காவலாளியாய்
இருந்தாலும்
அடிப்படையில் அவளும்
ஒரு தாய் தானே? 


2 Response to "எண்ண சிதறல்கள்....."

  1. ரேவா Says:

    நிஜத்தின் சுவடு
    கொஞ்சம் கொஞ்சமாய்
    உன்னை அரிக்கட்டும்.....
    அப்போதாவது
    நீ உணர்வாய்...
    என் வார்த்தைகள்
    கலப்பு இல்லை என்று...

    super lines

  2. Ram Says:

    உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_03.html