பரிச்சயம் என் பாக்கியம்
வாழ்க்கை ஒரு ஆசான்
ஒவ்வொரு நாளும்
ஒரு அனுபவம் தான்...
சந்திக்கும் ஒவ்வொருவரும்
போதிப்பவன் தான் ....
நட்பின் இலக்கணத்தை
இக்கணம் வரை
வரமாய் தந்தவளே
உற்றார் உறவுகள்
உதாசீன படுத்தும்போது ...
உரிமையாய் என்னை
உறவு கொண்டாடி...
உற்சாக படுத்தும்
உனக்கு ...
கைம்மாறு என்செய்வேன்
எதிர்பார்த்து
செய்வதல்ல என
நட்பிற்கு
மகுடம் சூடினாய்
இனம் மதம்
இன்ன பிற  இத்யாதிகளை
பின்னுக்கு தள்ளிவிட்டு
துவண்டு போன
என் மனதில்
துளிராய் வந்து
விருட்சமாய்
இருக்கிறாய்...
என் அந்திம காலம்
எப்போது என
எனக்கு தெரியாது....
அப்போதும் கூட
உன் மடியாய் இருந்தால்
உவகை கொள்வேன் ...
நட்பிற்கு நன்றி சொல்லி ...
நன்றிக்கு களங்கம் வேண்டாமென
வணங்கி நிற்கிறேன்...
வாழிய நீ ....

1 Response to "பரிச்சயம் என் பாக்கியம்"

  1. vanathy Says:

    super kavithai!