நினைவு சாரல்

 
 
 
நீண்ட தொரு பயணத்தில்
துளியாய் ஆரம்பித்து...
கம்பிகளாய் தெறித்து...
தெருவை சுத்தம் செய்து...
அனைவரையும்
ஆடை கழற்றாமல்
குளிப்பாட்டி...
அன்னையை போலவே
அன்பை பொழிகிறது
மழை....
ஆங்காங்கு பள்ளத்தை
சமசீராய் ஆக்கிவிட்டு
அருமையாய் ஒரு
ஜலதரங்கம் பாடும்
மழையை
ஆராதிக்கிறேன்...
இயற்கை அன்னையின்
இன்னொரு கொடை....
 

இன்றும் !!
நினைவு இருக்கிறது...
தூறல் போடும் மழையில்
மிதிவண்டி பயணத்தில்...
துப்பட்டாவை குடையாக்கி
துரிதமாய் செல்ல செல்ல...
மழையின் சாரல்
என் வேகத்தை அணை போட...
வியர்வை துளிகளா...
மழை துளிகளா...
வித்தியாசம் தெரியாது...
சிறியதாய் இருக்கும்
கைகுட்டையால்
என் முக துடைத்து
அழகு பார்ப்பாய்...
எப்போது இல்லாமல்...
அன்று மட்டும்
ஜொலிப்பதாய் சொல்வாயே....
இறந்து போன காலங்கள்..
நினைவுகளை மட்டுமே
என்னிடம் விட்டு
சென்றது......

0 Response to "நினைவு சாரல்"