வீரம் வந்ததெப்போ? வீரம் வந்ததெப்போ?


மலர்ந்து மலராத மொட்டுக்கள் போல்
பதின்பருவம்
வலியது கேட்டு  நெஞ்சு
விம்மும் விடலை போய்
தோள்கள் தினவெடுத்து
மரம் ஏறி கனிகள் பறிக்கும்
தைரியம் யார் சொல்லி வந்தது?
சொன்னதை செய்து கொண்டு
மௌனமாய் இருந்து
இப்போது தீர்மானமாய்
முடியாது என்று
இறுமாப்புடன் சொல்லும்
வீரம் எங்கிருந்து வந்தது ?
முகத்தில் முட்செடிகளாய்
ரோமம் வளர்ந்து
சுவாசம் கூட சீராய் வந்தது
அடிக்கடி பாதரசம் பார்த்து
புதிதாய் முளைத்த
மீசையை ஆசையாய்
நீவி விட சொல்லி கொடுத்ததாரு?
விடை தெரியா கேள்வியோடு
வீதியில் வந்த விமலா 
நெஞ்சோடு அணைத்த புஸ்தகத்தில்
புதிதாக  ஒரு பக்கமாய் கடிதம்
வைக்க  எங்கிருந்து வந்தது
இப்படி ஒரு ஆசை ?
கனவுகளாய் சென்ற
கண்களில்
அவள் விட்டு சென்ற
சுவடுகள் தான்
மிச்சமான எச்சம் !!

0 Response to "வீரம் வந்ததெப்போ?"