இறைவனிடம் கேள்விகள்
இறைவனிடம் கேள்விகள் 

இதுவரை எனக்காக
இறைவனிடம் ஏதும் கேட்டதில்லை
கேட்கவேண்டும் என்று எண்ணவும் இல்லை
ஆனால் என் தமையனை இழக்கும் வரை
இழப்பை பெரிதாய் நினைத்ததும் இல்லை
இருக்கும் போது  அறியாத விஷயம்
இறந்த பிறகு துளிர்கிறது
வெட்டப்பட்ட மரம் துளிர்ப்பது போல
நினைவலைகள் நெஞ்சை அரிக்கும்போது
கண்களில் இருந்து கடலாய் கண்ணீர்
வெளிதேசம் சென்றிந்தால் கூட
கவலை ரேகை தெரியாது
கலக்கமில்லாது காலம் போகும்
திரும்பி வராது
திரிசங்கு சென்று விட்டான்
திருமாலே
நீதான் பொறுப்பு
இங்கிருந்தவரை
வலி பொறுக்கமாட்டன்
அது பசியாகினும் கூட
உன்னிடம் வந்துவிட்டான்
எது பற்றியும் சிந்தை இல்லை
சிரத்தையாய் நீ பார்த்து கொள்வாய்
என் காலம் வரும்போது
வந்தவனை சந்திக்கிறேன்
அதுவரை என்னை
படுத்தி விடாதே..  

0 Response to "இறைவனிடம் கேள்விகள்"