கானகம் என் அகம்

 கானகம் என் அகம்

வண்ணமாய் எண்ணங்கள் 
எண்ணங்கள் எழுத்துக்களாய் 
முன் எப்போதுமில்லாமல் 
இப்போது தூரிகை 
பிடித்த ஓவியனாய் 
சொற்களில் 
நளினம் 
என்னை சுற்றி பார்க்கிறேன்
எல்லாமே ஓவியமாய் 
நான் மட்டும் அருவமாய் 
அனைத்தையும் உணர்கிறேன் 
மௌனமாய் இருக்கும் ஓசை 
காற்றின் ஒலியை எனக்கு 
அறிமுகம் செய்கிறது ...
பறவையின் சிறகுகள் 
படபடப்பாய் ....
தட்டுகளை எறிந்தது போல்... 
மரத்தில் இருந்து உதிரும் 
சருகுகளில் எழும் 
சங்கேத மொழி 
உயிர் விட்ட துயரத்தை- என்னுள் 
உணர செய்கிறது .....
தாலாட்டு பாடும் 
தென்றல் 
மரத்திற்கு இதமாய் 
ஓங்கி நின்ற மரத்தின் 
இலைகளின் சலசலப்பு 
வகுப்பறையில் ஆசிரியர் 
இல்லாத சமயம் 
சலசலக்கும் 
பள்ளி சிறார்கள் போல ... 
மரத்தில் ஓட்டை போடும் 
கள்ள மரங்கொத்தி 
எதை திருட வந்தது...? 
யாருமில்லா தேசத்தில் 
யாருக்காய் பாடுகிறது குயில்?
சுவடுகள் இல்லாத 
பாதங்கள் 
மணலில் 
அணில்களின் நாட்டியம் 
கானகம் 
என் அகமாய் மாற
எனக்குள் தோன்றிய 
ஒரு சிறிய கற்பனை 
அதற்கு அணையேது?


1 Response to "கானகம் என் அகம்"

  1. NILA ( நிலா ) Says:

    மணலில் அணில்களின் நாட்டியம்
    கானகம் .....அருமை....