வாழ்க ஜனநாயகம்குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
கண்ணாடி தடுப்புகளோடு
தலைவர் வராரு ஒட்டு கேட்டு
கொளுத்தும் வெயிலில்
மாராப்பை குடையாக்கி
மந்தையாய் மக்கள்
வாழ்க ஜனநாயகம்

எங்கள் தலைவன்
ஒட்டு சேகரிக்கிறார்
வேட்பாளர் பேர்
தெரியாமல்
ஆதரவு கேட்டு...

ஐந்து வருடம்
அறுபது மாதம்
நானூத்து இருவது வாரம்
வெற்றிகரமாய் ஆட்சி
ஆயிரம் ஆயிரமாய் கொள்ளை
மக்கள் மட்டும்
இன்றும்
நடை பாதையில் ....

குவியல் குவியலாய்
மக்கள்
சாலையோர
குடித்தனம்
தடையின்றி
நடக்கிறது
பகலில்
ஒரு இரவு...

நாங்களும்
நாய்களும்
ஒன்று தான்
பேதைமை இல்லை
எங்களுக்குள்
எச்சிலை
பொறுக்கும்
பசிக்காக
பரத்தையாய்
இடுப்பிலே
குழந்தை
வாராத தலையோடு
தேர்தல் வந்தால்
பிரியாணி ....
ஏக்கமாய்
குழந்தை ....

0 Response to "வாழ்க ஜனநாயகம்"