என் இயலாமை யாரறிவார்?

0 ரசித்தவர்கள்






இருட்டறை வாசம்
நாற்பது வாரம்
முட்டி தள்ளி
மோதி உடைத்து
தண்ணீராய்
வந்த எச்சங்கள்
மொத்தமாய் ஒரு பிண்டம்
கண் காது மூக்கு கொண்டு
ஏதும் அறியா பரப்ரமம்
வாது சூது
வஞ்சம் நஞ்சு
ஏதும் தெரியாது
விழித்த உடன
அழுகையில் தான்
அகரம் ஆரம்பம்
வாத்து நடை பயில
வாகாய் நடைவண்டி
எழுந்து விழுந்து
விழுந்து எழுந்து
விசனமாய் ஒரு புன்னகை
விரைவாய் பேசிட
விம்மும் இளமனது
எழுத்துக்கள் கோணலாய்
வார்த்தைகளும் அப்படியே
தத்தி தத்தி மடி ஏறி
அன்னை முகம் பார்த்து
அம்மா என்றழைக்க
வழிந்தோடும் எச்சில்
அவளின் முகம் நனைக்க
அமுதமாய் அவளும்
அதை ரசிக்க
ஈன்றவள்
முகம் காட்டி
தந்தை முகம்
தெரிந்தது
உறவுகள்
தெரிந்தன
ஒவ்வொன்றாய்
தெரிய தெரிய
மீண்டும் ஒரு
ஜனன போராட்டம்
எனக்கு கருவறையே
போதும் தாயே
வெளிய வந்ததில்
எனக்கு
உடன பாடில்லை
பரப்ரம்மாய்
இருந்திருக்கலாமே
என்னை படைத்த
தாயே
வலி தாங்கி
உயிர் தந்தாய்
இங்கிருக்கும்
வழிகள்
சொல்லி தராமலே ....
இதில் என் குற்றம்
ஏதம்மா...?
இறைஞ்சும் என்
மனதின்
இயலாமை
யாரறிவார்?

பழக்கமாய் ...

0 ரசித்தவர்கள்





ஒட்டு போடும்
வரிசையில்
அவளும் வந்திருந்தாள்
முகவரி மட்டும்
மாறி இருந்தது ...

இந்த முறை
யாருக்கு ஒட்டு
போட வேண்டும் - என்று
எங்களுக்குள் சண்டை இல்லை
குழப்பமும் இல்லை ...

வாக்காளர் அட்டையில்
சரியாக தெரியாத
என் முகத்தை
சரியாக கணித்த
தேர்தல் அதிகாரி
நெற்றியில் இருந்த
மச்சத்தை காட்டினார்
நெற்றியிலும் எனக்கு
கருப்பு மை....
திருஷ்டி பொட்டு அல்ல...

உதட்டு அருகில்
இருந்த கடுகு
மச்சம்
இடம் மாற்றி
வைக்கப்பட்ட
திருஷ்டி பொட்டு....

இன்றும்
எனக்கு
ஏகாதசி தான்
பரீட்சைக்கு
நீ படிக்கிறாய்...

வாழ்க ஜனநாயகம்

0 ரசித்தவர்கள்






குளிரூட்டப்பட்ட வாகனத்தில்
கண்ணாடி தடுப்புகளோடு
தலைவர் வராரு ஒட்டு கேட்டு
கொளுத்தும் வெயிலில்
மாராப்பை குடையாக்கி
மந்தையாய் மக்கள்
வாழ்க ஜனநாயகம்

எங்கள் தலைவன்
ஒட்டு சேகரிக்கிறார்
வேட்பாளர் பேர்
தெரியாமல்
ஆதரவு கேட்டு...

ஐந்து வருடம்
அறுபது மாதம்
நானூத்து இருவது வாரம்
வெற்றிகரமாய் ஆட்சி
ஆயிரம் ஆயிரமாய் கொள்ளை
மக்கள் மட்டும்
இன்றும்
நடை பாதையில் ....

குவியல் குவியலாய்
மக்கள்
சாலையோர
குடித்தனம்
தடையின்றி
நடக்கிறது
பகலில்
ஒரு இரவு...

நாங்களும்
நாய்களும்
ஒன்று தான்
பேதைமை இல்லை
எங்களுக்குள்
எச்சிலை
பொறுக்கும்
பசிக்காக
பரத்தையாய்
இடுப்பிலே
குழந்தை
வாராத தலையோடு
தேர்தல் வந்தால்
பிரியாணி ....
ஏக்கமாய்
குழந்தை ....