இருட்டறை வாசம்
நாற்பது வாரம்
முட்டி தள்ளி
மோதி உடைத்து
தண்ணீராய்
வந்த எச்சங்கள்
மொத்தமாய் ஒரு பிண்டம்
கண் காது மூக்கு கொண்டு
ஏதும் அறியா பரப்ரமம்
வாது சூது
வஞ்சம் நஞ்சு
ஏதும் தெரியாது
விழித்த உடன
அழுகையில் தான்
அகரம் ஆரம்பம்
வாத்து நடை பயில
வாகாய் நடைவண்டி
எழுந்து விழுந்து
விழுந்து எழுந்து
விசனமாய் ஒரு புன்னகை
விரைவாய் பேசிட
விம்மும் இளமனது
எழுத்துக்கள் கோணலாய்
வார்த்தைகளும் அப்படியே
தத்தி தத்தி மடி ஏறி
அன்னை முகம் பார்த்து
அம்மா என்றழைக்க
வழிந்தோடும் எச்சில்
அவளின் முகம் நனைக்க
அமுதமாய் அவளும்
அதை ரசிக்க
ஈன்றவள்
முகம் காட்டி
தந்தை முகம்
தெரிந்தது
உறவுகள்
தெரிந்தன
ஒவ்வொன்றாய்
தெரிய தெரிய
மீண்டும் ஒரு
ஜனன போராட்டம்
எனக்கு கருவறையே
போதும் தாயே
வெளிய வந்ததில்
எனக்கு
உடன பாடில்லை
பரப்ரம்மாய்
இருந்திருக்கலாமே
என்னை படைத்த
தாயே
வலி தாங்கி
உயிர் தந்தாய்
இங்கிருக்கும்
வழிகள்
சொல்லி தராமலே ....
இதில் என் குற்றம்
ஏதம்மா...?
இறைஞ்சும் என்
மனதின்
இயலாமை
யாரறிவார்?