தவறிய தருணங்கள்

1 ரசித்தவர்கள்


வழி தவறிய
செம்மறி ஆடு..
கசாப்பு கடையில்
அலங்கார பொருளாய்
அதன் தலை....!!!

வகை வகையாய் மீன்கள்
வரிசையாய் ....
விற்றால் தான்
விறகு எரியும்
மீன்காரி வீட்டில் - பசி
ஏக்கத்துடன்
அவளின் கைக்குழந்தை
பாலுக்கு அழுகிறது...

உன்னிடம் உள்ளதை
கொடுத்துவிட்டு
ஊமையாய் அழுகிறேன்
இதயம் தொலைந்துபோன
துக்கத்தில் ....!!
இன்று
நினைவு நாள்
புதைந்துபோன
காதலை
புதுப்பிக்க ஒரு
நாள் தாருங்கள் !!
மீண்டு உயிர் வாழ?

சொல்லி கொள்ளாமல்
சென்றது அவள் - ஆனாலும்
இன்றும் அழுகிறது
அவளை பற்றிய
என் நினைவு மட்டுமே!!!

எனக்கு தெரியும்
அவள் என்னை
காதலித்ததை விட
என்னுடைய
பரிசை மட்டுமே!!!

என்னுடைய கவிதையை
ரசித்து பேசினாள்
என்னுடைய காதலை
நிராகரித்தாள் - இன்றும்
ரசிக்கிறாள் ....!!!

எழுதுகோல்
ஏட்டை காதலித்தால்
கவிதை குழந்தை
பிறந்தது...!!!

அப்படி என்ன இருக்கிறது
காதலில் ?
காதலித்து தோற்று போன
தந்தை கேட்டார்?

காதல் ஒருமுறை தான்...
அங்கீகரிக்க
பட்டால்!!
சத்தம் இல்லாமல்
இதயத்தோடு இதயம்
சேரும் விந்தை
காதலில் மட்டுமே !!!

இருமனம் சேர்ந்தால்
திருமணம் -
இன்றும் எனக்கு
தனியாவர்த்தனம் தான் !!

பாவூர் ராஜா கவிதைகள்

குறுந்தகவல்

2 ரசித்தவர்கள்




கட்டண தேதியும்
கடன் வசூலிப்பும்
கச்சிதமாய் வருகிறது
குறுந்தகவலாக

காதல் செய்தியை
தூதாக
குறுந்தகவலில்
அனுப்பினாள் - கல்யாண
பத்திரிக்கை
கூரியரில் வந்தது!!
சரியான விலாசத்துடன்

கைபேசியின்
பயன்
குறுந்தகவல்
களஞ்சியமே

குறுந்தகவல்
விலாசம் தெரியாத
தபால் காரன் போல்
எவர்க்கும் கிடைக்கும் - உபயம்
கைபேசி மட்டுமே!!

கைபேசிக்கு
பிடித்த வார்த்தை
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளார்!!!

பிச்சை காரன் கையில் - இருக்கும்
கைபேசியின் ரிங் டோன்
"அம்மா தாயே " !!!!

கைபேசியின்
அழைப்புக்கு
காரிகையின் பதில்
டயல் செய்த எண்ணை
சரிபார்க்கவும்!!!

கைபேசி
நம்கூடவே
இருக்கும் எமன்
பொய்கள் உற்பத்தி
ஆகும் பாசறை
நுணலும் தன் வாயால் கெடும்
என்பதை போல!!

காலையில்
கைபேசியில் விழித்து
குறுந்தகவல் படித்து
காலை கடன் முடித்து
கிளம்பு முன்
இன்று ஒரு தகவல்
இனிய நாளாக !!

காதல் ஒரு அனுபவ பாடம்

2 ரசித்தவர்கள்

காதல்
திறந்து வைக்கப்பட்ட இதயத்தில்
மூடி வைக்கப்பட்ட ரகசியங்கள்
விழிகளில் உறவாடி
இதழ்களில் விளையாடி
இரவில் மட்டும்
விழித்திருக்கும் செவிகள்
கண்கள் பனித்தாலும்
இமைகள் மூடாது
விடியும் வரை
இருட்டோடு
போட்டி போட்டு
விழித்திருந்து
மொழி பேசிய
மௌன கதைகள்
ஏராளம்..!!!
கோபத்தை கூட
குரலில் காட்ட முடியா
கும்மிருட்டுக்கும் கேட்காது
பேசிய வார்த்தைகள் ...!!
இரவு எங்களுக்கு காவலன்
நிலவு தான் எங்கள்
திண்ணை விளக்கு
நேரம் பார்த்து பேசியதில்லை
நெடிய பயணம் அது
சுவாரசியமாய் இருக்கும்
கணக்கில் அடங்காது
திருமணம் இல்லாமல்
நாங்கள் குழந்தையோடு
கொஞ்சி விளையாடிய
நிகழ்வுகளும் உண்டு
பேர் வைக்க சண்டையும் உண்டு
நினைத்து பார்த்தால்
சிரிப்பாய் இருக்கும்
ஆனால்
காதலில் மட்டுமே
இது சாத்தியம்
கற்பனை திறன்
அதிகரிக்க
காதலித்து பாருங்களேன் ...!!!
நீங்களும் கவி பாடுவீர்கள்
கவி பாடும் அனைவரும்
நிச்சயம் காதலை
உணர்ந்து இருப்பர்!!!
இல்லை என்று சொன்னால்
உண்மை உரைக்கவில்லை
என்று தான் பொருள் ...!
எவரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை...!!
என் அனுபவத்தை
உங்களிடம்
பகிர்ந்தேன்..
அவ்வளவே!!!

காதல் ஒரு அனுபவ பாடம்

haikoo

1 ரசித்தவர்கள்




செடியில் இருந்து
விழுந்த மலர்
செடியில் ஒட்டுவதில்லை..
உடைந்துபோன மனங்களும் தான்!!

பொய் பேச தெரியாது
கபடம் அறியாது இருந்தேன் !!!
காதலிக்கும் வரை!!!
இப்போது பொய்
என்னிடம் கற்கிறது!!!
பொய் சொல்ல...???

எனக்கு தெரியாது
எதை வேண்டுமானாலும்
எடுத்து செல்
என் இதயத்தை தவிர!!!
பிடித்தவற்றை பிரியத்துடன்
கொடுத்தல் சுகம்!!!


அழுதால் அழுவேன் ...!!
சிரித்தால் சிரிப்பேன் ...!!
உன்னுடைய நிழல்
பிம்பம் நான் தான்!!
உன் முகத்தை
கண்ணாடியில் பார்ப்பது போல்!!

பூக்கடையில் அளந்து
கொடுக்கிறார்கள் பூக்களை
அவர்களிடம் சொன்னேன் !!
பூக்களை அளக்காதீர்கள்
அழகுக்கு அளவு கிடையாது!!!

சிரத்தையாக
எழுதினேன்
பரீட்சையில் தோல்வி
சிந்தித்து எழுதினேன் -
கவிதை
காதலில் வெற்றி !!!

எப்போதும் சுற்றி வரும்
நீ
இப்போதெல்லாம்
வருவதில்லையே?
நிழலை பார்த்து
நிஜம் கேட்டது ...
குடையை மடக்கும் வரை..

உன்னிடம் சொல்லாமல்
தினமும் கடந்து
செல்கிறேன் ...
ஆனாலும் எனக்கு தெரியும்
நீ என்னை மட்டுமே
பார்க்கிறாய் என்று?!!?

உனக்கு மட்டும் சொல்கிறேன்
உன்னை பேதலிக்க வைக்க
என்னை தவிர
யாரும் இலர்!!

haikoo

0 ரசித்தவர்கள்










மயான காட்டில்
மக்கி போகும்
உடலுக்கு
மரியாதை
பிரேதத்தின் மீது மாலை!!!


பிறக்கும்போது
ஒட்டு துணி இல்லாது
வெற்றுடம்பாய்
அழுத உடன் தெரிகிறது
அம்மணம்...!!!


வழி மாறிய பாதை
நிழல் தப்பிய இரவு
மழை தப்பிய பருவம்
எதுவும் நினைவில் - இல்லை
ஒட்டிய வயிறை நினைக்கையில் ...


பிறப்பும் இறப்பும்
பிரபஞ்சம் அறியும்
பிறவாமல் இருக்க
பிறிதொரு வழி உண்டோ?
பிணியும் பசியும்
பின்னிருந்த போழ்து
பேதலித்த மனது!!!

வாசல் வரை வந்து
பிச்சை கேட்ட மனது
பிச்சை போட எத்தனிக்கும்போது
எங்கோ எட்டி பார்க்கிறது
வறட்டு கௌரவம் ..!!

எப்போதும் சிரித்தேன்
என்னை கேலிபொருளாய்
எண்ணி என்னையும்
காட்சி பொருளாக்கி
கடை விரித்து விட்டனர்...!!!


சிறிது சிறிதாக
சேர்த்து வைத்த
சந்தோசம்
ஒரே நொடியில்
காணாமல் போனது
என்னுடைய கிழிந்த
கோவணம்!!!


களவாணிகள்
நிறைந்த ஊர்
சொன்னது ஒரு
களவாணி...!!
நகரத்தின் காவல் அதிகாரி !!!

அறிவு குருடு

0 ரசித்தவர்கள்




கல்லாய் இருந்தால் -
சுமை கல்லாய் !!!
முள்ளாய் இருந்தால்
ரோஜாவில்...
சதை பிண்டமாய்
இருப்பதால்
ஆறாவது அறிவு
என்னை அறிவு குருடு
என்றது...
தமிழ் கூறும் நல் உலகம்
என்னை மன்னிக்கட்டும்
எட்டு திக்கும் புகழ் பரப்பும்
எட்டாவது அறிவுக்கு
என் முயற்சி வீண் !!!
முடிந்தவரை
முடித்துகொள்கிறேன்
விமர்சனங்கள்
பாராட்டுக்கள்
ஏச்சுக்கள்
பேச்சுக்கள்
இனி முடியட்டும்
சிரித்து கொண்டே
விடை பெறுகிறேன்!!!

தன்னை உணர்தல் பெரும்தவம்

0 ரசித்தவர்கள்



அறியாமல் செய்த பிழை
அறிந்து செய்த தவறு
அழிக்க முடியாத கறை
வடுவாய் நெருஞ்சி முள்ளாய்
மனதில் இனம் புரியாத வலி
மாசு படுத்தியது மனதை .....
தீராத பகையாய்
தினம் தினம்
மடிந்து வீழ்கிறேன்
மண்ணுக்கு இரையாகும் வரை
தீருமா இந்த துயர்?
தீங்கு இழைத்தவன்
தவறை உணர்ந்து
கொள்ளல் நன்று தானே?

கையறு நிலை

1 ரசித்தவர்கள்


என்னை ஊனமாய்- படைத்த
இறைவனை திட்டினேன் !!
கால்கள் இல்லாத மனிதனை காணும் வரை!!


முத்துகளாய் வியர்வை
முன் நெற்றியில்
தெப்பலாய் சட்டை - மழை அல்ல!!!
விரக்தியின் விளின்பில்
கசக்கப்பட்ட கைக்குட்டை
தெருவில் பொம்மையோடு !!!!
விற்றால் தான் அடுப்பெரியும்....!!!
விற்பனை பிரதிநிதி .....!!!

கூலியை கூவி அழைத்தேன்
பேரம் பேசி தூக்க வைத்தேன்
பேரமே இல்லாமல் கடையில்
ஊதுகுழல் வாங்கி பற்ற வைத்தேன்...
கூலியின் வயிறு எரிந்தது....!!


கணினி பொய் சொல்லாது
வழக்காடினான் நண்பன்
அமைதியாய் சொன்னேன்
உண்மைதான் !!!
ஆனால் நீயல்லவா அதை
இயக்குகிறாய் ???


இன்றைய தினத்தில்
இணையத்தளம்
ஈடு இல்லா பணி செய்கிறது!!
ஆனால் இன்றும் பிச்சை
தட்டில் தான் விழுகிறது!!!
வங்கி கணக்கு பார்த்தாலும்!!!



உன்னுடன் பேசணுமாம்
தோழி சொன்ன வார்த்தைக்கு
மௌனமாய் ஒற்றை பார்வை
பதிலேதும் சொல்லாமல்
சென்று விட்டாள் !!!
என்னுடன் பேச
என்ன இருக்கிறது
முறிந்து போன
காதலுக்கு தூது
தோழிக்கு இன்று
தீபாவளி தான்??


பஞ்சம்
பட்டினி
வறுமை
எப்படி சொன்னாலும்
பசி வயிறுக்கு மட்டுமே
தெரியும்!!!
மூளைக்கு வேலை அல்ல?

வினாக்கள் மட்டுமே !!!

0 ரசித்தவர்கள்















என் காலடி தடம் பார்த்து
காதலை உணர்ந்தவன்
என் கால் வயிறு பெருக்கம் பார்த்து
கலவரமாய் ஓடினான்....
அவனை பெற்றதும்
ஒரு பெண் தானே??


வீதியில் விளக்காய் இருக்கும்
பெண்ணாய் இருந்தாலும்
வீட்டில் அவள் விளக்கு வைத்தால்
பிரகாசம் குறையாது...!!!
குறை அவளிடம் இல்லை
அவளை சார்ந்த சமூகத்திடம் தான்!!!
வீதி விளக்கானது அவள் குற்றமா?



நேற்று அவளை நினைத்தேன்
இன்றும் அவளை நினைக்கிறேன்
நாளை அவளை நினைப்பேன்
அவள் தான் பிரிந்து போய்விட்டாள்!!
அவளுடனான என்னுடைய நினைவுகள் அல்ல!!
காலங்கள் கரைந்தாலும்
காதல் நினைவு எப்போதும்
பசுமையாய் நெஞ்சில் ....!
உலர்ந்த பாலைவனமாய்
மனம் இருந்தாலும்
கானல் நீராய் காதல்...!!!


என்னிடம் இருந்து
பிரிந்து போனது
அவள் மட்டுமே
என்னுடன் அவள்
நடத்திய நாடகத்தில்
நாயகனாக
பரிமளிததில்
எனக்கு செருக்கு தான் !!!
என்னை தவிர வேறு யாரும்
இத்தனை சிறப்பாய் நடிக்க
முடியாது என்பது என் வாதம்
சரிதானே?


காதலை பரிசாக
பெறும் முன்
அவளிடம்
நீங்கள் காட்ட வேண்டிய
இத்யாதிகள்
வங்கி இருப்பு...!!
வாகன இருப்பு...!!
அனைத்திற்கும் மேல்
அவளை விட
ஏதேனும் ஒன்றில்
சிறப்பு!!!
மங்கைக்கு தேவை இல்லை
இத்தனை பொறுப்பு!!!
இருப்பதை எல்லாம்
இலவசமாய் பெறும் பேறு
காதலிக்கு மட்டுமே
காதலிக்க படுவதால்!!!

0 ரசித்தவர்கள்

            
 ஹைக்கூ
































இந்த உலகில்
கேட்காமல் எதுவும்
கிடைக்காது...
அன்பும் தான்!!!

நீட்டிய கை
தானாய் சுருங்கியது
அவள் மனம் போல்!!
நட்பிற்கு இலக்கணம்
தேவை இல்லை!!!                                                              
பாகுபாடு
தேவை இல்லை
எண்ணிக்கை தேவை இல்லை !!


உதாசீனம்
மிக பெரிய விசயமன்று
அதை நீ செய்யும் வரை!!!
அடுத்தவர் செய்யும்போது தான்
நம் தவறு நமக்கே தெரிகிறது!!!
நாம் செய்யும் வரை ...?

இன்று ஏசுநாதர்
இருந்திருந்தால்
கட்டாயம் சொல்லிருப்பார்
ஒரு கன்னத்தை காட்டுமுன்
அதற்கு அவன் தகுதியா என்று!!!


என்னை மிகவும்
பாதித்தது
அவள் என்னை
உதாசீனபடுத்தியது அல்ல !!
என்னை கேலி பேசியது!!
அவள் என்ன வானில் இருந்தா வந்தால்?
வயிற்றில் இருந்துதானே வந்திருப்பாள்?

என்னை முழுதுமாய்
தொலைத்தேன்
அடையாளம் தெரியாது
அருவமாய்
அப்போதாவது
உனக்கு தெரியாமல்
உன்னை நேசிப்பேனே?
நீ என்ன செய்ய முடியும்?

என்னுடைய தேடல்
பணங்களை அல்ல
மனங்களை மட்டுமே!!
இன்றும் அது தேடலில்
ஜீவன் அடங்கும் வரை...
அது தொடரும் !!!


உண்மையில்
சுருங்கி இருப்பது
தொட்டால் சுருங்கி அல்ல!!
மனங்கள் மட்டுமே!!!



கடவுளை கண்டவர்
கலங்கியது இல்லை
கலங்கிய எவரும்
கடவுளை கண்டதில்லை!!
உன்னுள் இருக்கும்
உன்னை நேசி
பிறர் உன்னை
கட்டாயம் நேசிப்பார்!!!

3 ரசித்தவர்கள்


விண்ணை தாண்டி வருவாயா 

கவிதையான தலைப்பு... படமும் தான் !!
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காதலின் மென்மையை அழகாய் சொன்னதற்கு கௌதம் வாசுதேவேனுக்கு   ஒரு சிறப்பு விருது கொடுக்கலாம். 
பெண்களை கையாளும் யுக்தி இவருக்கு  மட்டுமே பொருந்தும்.  இவ்வளவு பாந்தமாக அழகாக த்ரிஷாவை இதுவரை படத்தில் யாரும் காட்டி இருக்க முடியாது  (உபயம் : மனோஜ் பரமஹம்சா ) 
ஒவ்வொரு ப்ரமேமும் கண்ணில் ஒத்தி கொள்ளலாம் போல தெளிவாக இருந்தது !!!
முதல் காதல் எத்தனையோ படங்களில் காட்ட பட்ட போதிலும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறு பட்டு இருப்பது பாராட்டுக்குரியது, 
கண்ணியமான கதை அமைப்பு படம் முடிந்தும் எழுந்து செல்ல மனம் இல்லாமல் இருக்கையில் அமர்ந்து கடந்த காலத்தை அசை போட வைத்த இயக்குனர் உண்மையில் காதலை உணர்ந்திருந்தால் மட்டுமே சாத்தியம். 
பெண்கள் எப்போதும் இருதலை கொள்ளி எறும்பாக இன்னும் எத்தனை படத்தில் காட்ட போகிறார்கள் என்ற எண்ணமும் வருவதை தவிர்க்க முடியாது!!! "காதல்' என்ற வார்த்தை  கேட்டாலே இன்னும் முகம் சுளிக்க வேண்டுமா??ஒவ்வொருவர் வாழ்கையில் கடந்து போன காலங்களில் நிச்சயம் காதலும் கலந்து தான் இருக்கும் . தெரியாது என்றும் காதலை பற்றி அறிந்ததில்லை என்றும் கூறுபவர்கள் கண்டிப்பாக பொய் பேசுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.   
காதல் வயபட்டால் எப்படி பட்ட பின் விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்து காட்டி இருப்பது மிக நன்று. ஒரு பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவரும் முதலில் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு சான்று. இந்த படத்தில் அனைத்துமே நன்றாய் இருப்பது கை தேர்ந்த சிலருக்கு மட்டுமே புரியும். படத்தை பார்ப்பவர் அனைவரும் தங்களுடைய கடந்த, நிகழ, வருங்கால குறித்து நிச்சயம் யோசிக்க வைத்ததற்கு இயக்குனர் மிகவும் பிரயாசை பட்டு இருக்கிறார். இப்படி எல்லாம் நடக்குமா? இப்படியும் நடக்கும் என்று எதிர்வாதம் செய்ய விடாது அனைத்து விசயங்களை அலசி ஆராய்ந்து மென கெட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது. 

கதையும் அது கையாள பட்டு இருக்கும் விதமும் மிக அருமை. 
கெளதம் நிச்சயமாக யாருடைய பாதிப்பும் இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம் அதே சமயம் ஆரோக்கியமான வரவேற்பும் கூட..
இந்த படத்தை பொறுத்த வரையில் அனைவருக்கும் மதிப்பெண் சமமாக கொடுக்கத்தான் வேண்டும். சிம்பு மிக அழகாக நடித்திருக்கிறார் இல்லை அந்த கதை நாயகனாக தன்னை
வரித்து கொண்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். த்ரிஷாவை பார்க்கவில்லை ஜெஸ்சியாக தான்  தெரிந்தார். நண்பனாக வரும் கதாபாத்திரம் மிக அருமை. இப்படி ஒரு நண்பன் இருந்தால் நிச்சயம் எவரும் துணிந்து காதலிப்பார்கள். மிகையாக கூற பட்டாலும் சொல்லப்பட்ட அனைத்தும் என் ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அன்றி புனைக்க பட்டவை அல்ல.  இத்தனையும் கூறிவிட்டு கதையை பற்றி கூறாமல் விட்டதற்கு இந்த படத்தை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லவில்லை. இந்த படத்தின் இசை குறித்து சொல்ல வார்த்தை இல்லை. மிக மிக மிக .......அருமை. பின்னணி இசையாகட்டும் பாட்டுக்கள் ஆகட்டும்  மனதிற்குள் நம்மை ஆட்படுத்தி இருப்பது படத்தை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவர் உதட்டிலும் பாடல் வரிகளை முனுமுனுத்து கொண்டு வருவதில் இருந்து  புரிந்து கொள்ளலாம்.பாடல் வரிகள் மிக கண்ணியமாகவும் அதே சமயம் அதை படமாக்க பட்ட விதமும் நேரில் காணும் ஒரு பிரம்மிப்பை நமக்குள் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. இதை போன்ற படங்கள் வெற்றி கனியை சுலபமாக பறித்து செல்லும் என்பதில் எந்த ஒரு அச்சமும்  இல்லை.

விண்ணை தாண்டி வருவாயா ...."காதல்" என்ற வார்த்தை இருந்தால் விண்ணையும் தாண்டி வர முடியும் என்பது என் கருத்து. இந்த படம் காதலையும்  தாண்டி வந்துள்ளது!!!