காதல் ஒரு அனுபவ பாடம்


காதல்
திறந்து வைக்கப்பட்ட இதயத்தில்
மூடி வைக்கப்பட்ட ரகசியங்கள்
விழிகளில் உறவாடி
இதழ்களில் விளையாடி
இரவில் மட்டும்
விழித்திருக்கும் செவிகள்
கண்கள் பனித்தாலும்
இமைகள் மூடாது
விடியும் வரை
இருட்டோடு
போட்டி போட்டு
விழித்திருந்து
மொழி பேசிய
மௌன கதைகள்
ஏராளம்..!!!
கோபத்தை கூட
குரலில் காட்ட முடியா
கும்மிருட்டுக்கும் கேட்காது
பேசிய வார்த்தைகள் ...!!
இரவு எங்களுக்கு காவலன்
நிலவு தான் எங்கள்
திண்ணை விளக்கு
நேரம் பார்த்து பேசியதில்லை
நெடிய பயணம் அது
சுவாரசியமாய் இருக்கும்
கணக்கில் அடங்காது
திருமணம் இல்லாமல்
நாங்கள் குழந்தையோடு
கொஞ்சி விளையாடிய
நிகழ்வுகளும் உண்டு
பேர் வைக்க சண்டையும் உண்டு
நினைத்து பார்த்தால்
சிரிப்பாய் இருக்கும்
ஆனால்
காதலில் மட்டுமே
இது சாத்தியம்
கற்பனை திறன்
அதிகரிக்க
காதலித்து பாருங்களேன் ...!!!
நீங்களும் கவி பாடுவீர்கள்
கவி பாடும் அனைவரும்
நிச்சயம் காதலை
உணர்ந்து இருப்பர்!!!
இல்லை என்று சொன்னால்
உண்மை உரைக்கவில்லை
என்று தான் பொருள் ...!
எவரையும் குறிப்பிட்டு
சொல்லவில்லை...!!
என் அனுபவத்தை
உங்களிடம்
பகிர்ந்தேன்..
அவ்வளவே!!!

காதல் ஒரு அனுபவ பாடம்

2 Response to "காதல் ஒரு அனுபவ பாடம்"

  1. kargil Jay Says:

    all are superb poems.. you write in great quality as well quantity too...

  2. Janani Krithiga Says:

    Superb defn for luv uncl ....u hav a different style of writting !!!!