கையறு நிலைஎன்னை ஊனமாய்- படைத்த
இறைவனை திட்டினேன் !!
கால்கள் இல்லாத மனிதனை காணும் வரை!!


முத்துகளாய் வியர்வை
முன் நெற்றியில்
தெப்பலாய் சட்டை - மழை அல்ல!!!
விரக்தியின் விளின்பில்
கசக்கப்பட்ட கைக்குட்டை
தெருவில் பொம்மையோடு !!!!
விற்றால் தான் அடுப்பெரியும்....!!!
விற்பனை பிரதிநிதி .....!!!

கூலியை கூவி அழைத்தேன்
பேரம் பேசி தூக்க வைத்தேன்
பேரமே இல்லாமல் கடையில்
ஊதுகுழல் வாங்கி பற்ற வைத்தேன்...
கூலியின் வயிறு எரிந்தது....!!


கணினி பொய் சொல்லாது
வழக்காடினான் நண்பன்
அமைதியாய் சொன்னேன்
உண்மைதான் !!!
ஆனால் நீயல்லவா அதை
இயக்குகிறாய் ???


இன்றைய தினத்தில்
இணையத்தளம்
ஈடு இல்லா பணி செய்கிறது!!
ஆனால் இன்றும் பிச்சை
தட்டில் தான் விழுகிறது!!!
வங்கி கணக்கு பார்த்தாலும்!!!உன்னுடன் பேசணுமாம்
தோழி சொன்ன வார்த்தைக்கு
மௌனமாய் ஒற்றை பார்வை
பதிலேதும் சொல்லாமல்
சென்று விட்டாள் !!!
என்னுடன் பேச
என்ன இருக்கிறது
முறிந்து போன
காதலுக்கு தூது
தோழிக்கு இன்று
தீபாவளி தான்??


பஞ்சம்
பட்டினி
வறுமை
எப்படி சொன்னாலும்
பசி வயிறுக்கு மட்டுமே
தெரியும்!!!
மூளைக்கு வேலை அல்ல?

1 Response to "கையறு நிலை"

  1. rajamanickam Says:

    great .......