விண்ணை தாண்டி வருவாயா 

கவிதையான தலைப்பு... படமும் தான் !!
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காதலின் மென்மையை அழகாய் சொன்னதற்கு கௌதம் வாசுதேவேனுக்கு   ஒரு சிறப்பு விருது கொடுக்கலாம். 
பெண்களை கையாளும் யுக்தி இவருக்கு  மட்டுமே பொருந்தும்.  இவ்வளவு பாந்தமாக அழகாக த்ரிஷாவை இதுவரை படத்தில் யாரும் காட்டி இருக்க முடியாது  (உபயம் : மனோஜ் பரமஹம்சா ) 
ஒவ்வொரு ப்ரமேமும் கண்ணில் ஒத்தி கொள்ளலாம் போல தெளிவாக இருந்தது !!!
முதல் காதல் எத்தனையோ படங்களில் காட்ட பட்ட போதிலும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறு பட்டு இருப்பது பாராட்டுக்குரியது, 
கண்ணியமான கதை அமைப்பு படம் முடிந்தும் எழுந்து செல்ல மனம் இல்லாமல் இருக்கையில் அமர்ந்து கடந்த காலத்தை அசை போட வைத்த இயக்குனர் உண்மையில் காதலை உணர்ந்திருந்தால் மட்டுமே சாத்தியம். 
பெண்கள் எப்போதும் இருதலை கொள்ளி எறும்பாக இன்னும் எத்தனை படத்தில் காட்ட போகிறார்கள் என்ற எண்ணமும் வருவதை தவிர்க்க முடியாது!!! "காதல்' என்ற வார்த்தை  கேட்டாலே இன்னும் முகம் சுளிக்க வேண்டுமா??ஒவ்வொருவர் வாழ்கையில் கடந்து போன காலங்களில் நிச்சயம் காதலும் கலந்து தான் இருக்கும் . தெரியாது என்றும் காதலை பற்றி அறிந்ததில்லை என்றும் கூறுபவர்கள் கண்டிப்பாக பொய் பேசுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.   
காதல் வயபட்டால் எப்படி பட்ட பின் விளைவுகள் ஏற்படும் என்பதை எடுத்து காட்டி இருப்பது மிக நன்று. ஒரு பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவரும் முதலில் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு சான்று. இந்த படத்தில் அனைத்துமே நன்றாய் இருப்பது கை தேர்ந்த சிலருக்கு மட்டுமே புரியும். படத்தை பார்ப்பவர் அனைவரும் தங்களுடைய கடந்த, நிகழ, வருங்கால குறித்து நிச்சயம் யோசிக்க வைத்ததற்கு இயக்குனர் மிகவும் பிரயாசை பட்டு இருக்கிறார். இப்படி எல்லாம் நடக்குமா? இப்படியும் நடக்கும் என்று எதிர்வாதம் செய்ய விடாது அனைத்து விசயங்களை அலசி ஆராய்ந்து மென கெட்டிருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது. 

கதையும் அது கையாள பட்டு இருக்கும் விதமும் மிக அருமை. 
கெளதம் நிச்சயமாக யாருடைய பாதிப்பும் இல்லாமல் படம் எடுத்து இருக்கிறார் என்பது ஆறுதலான விஷயம் அதே சமயம் ஆரோக்கியமான வரவேற்பும் கூட..
இந்த படத்தை பொறுத்த வரையில் அனைவருக்கும் மதிப்பெண் சமமாக கொடுக்கத்தான் வேண்டும். சிம்பு மிக அழகாக நடித்திருக்கிறார் இல்லை அந்த கதை நாயகனாக தன்னை
வரித்து கொண்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். த்ரிஷாவை பார்க்கவில்லை ஜெஸ்சியாக தான்  தெரிந்தார். நண்பனாக வரும் கதாபாத்திரம் மிக அருமை. இப்படி ஒரு நண்பன் இருந்தால் நிச்சயம் எவரும் துணிந்து காதலிப்பார்கள். மிகையாக கூற பட்டாலும் சொல்லப்பட்ட அனைத்தும் என் ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் அன்றி புனைக்க பட்டவை அல்ல.  இத்தனையும் கூறிவிட்டு கதையை பற்றி கூறாமல் விட்டதற்கு இந்த படத்தை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லவில்லை. இந்த படத்தின் இசை குறித்து சொல்ல வார்த்தை இல்லை. மிக மிக மிக .......அருமை. பின்னணி இசையாகட்டும் பாட்டுக்கள் ஆகட்டும்  மனதிற்குள் நம்மை ஆட்படுத்தி இருப்பது படத்தை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவர் உதட்டிலும் பாடல் வரிகளை முனுமுனுத்து கொண்டு வருவதில் இருந்து  புரிந்து கொள்ளலாம்.பாடல் வரிகள் மிக கண்ணியமாகவும் அதே சமயம் அதை படமாக்க பட்ட விதமும் நேரில் காணும் ஒரு பிரம்மிப்பை நமக்குள் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. இதை போன்ற படங்கள் வெற்றி கனியை சுலபமாக பறித்து செல்லும் என்பதில் எந்த ஒரு அச்சமும்  இல்லை.

விண்ணை தாண்டி வருவாயா ...."காதல்" என்ற வார்த்தை இருந்தால் விண்ணையும் தாண்டி வர முடியும் என்பது என் கருத்து. இந்த படம் காதலையும்  தாண்டி வந்துள்ளது!!!

3 Response to " "

  1. Janani Krithiga Says:

    This comment has been removed by the author.
  2. Janani Krithiga Says:

    impartial review.....rightly pointed out d inadequesis n merrits....keep writting for sum more..!!

  3. Anupriya Says:

    excellent review... the words which are praising the vtv are so fantastic than vtv..