கைபேசி
தொலை பேசியை கண்டுபிடித்த
கிரகாம் பெல் - கூட
பேசியதில்லை கைபேசியில்!!!
அவர் காலத்தில்
அலையோடு பேசும்
அமைப்பு வரவில்லை!!
கைபேசி வந்த நாள் முதல்..!
அதன் குமுறல் அளவிட முடியாது!!!
கைபேசி தன் கதை கூற கேளுங்கள் இங்கே!!!
ஜனிக்கும் போது நான் தூய மழை துளியாய் !!!அது தான்
என்னை நானே சொல்லிகொள்ளும் தேறுதல் !!!
கையில் வாங்கிய நாள் முதல்
அனைவரின் காட்சி பொருளும் நான் தான்
கை பொருளும் நான் தான்!!!
விவஸ்தை அற்றோர் கையில்
விளையாட்டு பொருள் நான் தான்!!
விபரீத விளையாட்டும் என்னோடு தான்!!!
சில் மிசங்களும் சில விஷமங்களும்
என்னை வைத்து தான் !!!
பேரங்கள் பேசி
பெட்டிகள் கை மாறுவதும்
என் முன்னே அரங்கேறிருக்கிறது!!!
அபலை பெண்களின் வாழ்க்கை கூட
அவ்வபோது வந்து போகும்!!
அலட்சியமாய் இருக்கும் தருணம்
அவசியமாய் படம் பிடிக்கும்
அரக்கர் கூட்டம் இங்கு ஏராளம் !!!
தூயவனாய் ஜனித்த என்னை
துயர் மிகுந்தவனாய்
இடர் உடையவனாய்
ஏற்படுத்தியது யார் குற்றம்?
என்னால் பயனுற்றோர் ஏராளம்!!!
என்னை பாவ மூட்டை சுமக்கும்
பலிகடா ஆக்கியது
பாவிகள் தானே!!!
எய்தவன் இருக்க அம்பை நோகுவானேன்?
என்னை எச்சில் படுத்தி
சத்தங்களை கொடுத்து
முத்தங்களை எனக்கு தருகிறார் பலர்!!
இத்தனையும் இருந்தும்
குயிலாய் மயிலாய் கூவும்
குரலால் வசியபடுத்தும்
வளையோசை கரங்கள் ஏராளம்!!
கவனம்!!
ரகசியங்கள் காதோரமாய்!!!
நல்ல காதலும் சரி!!- பாழாய் போன
கள்ள காதலும் சரி!!
என்னை வைத்து தான் !!
காம விளையாட்டும் என்னை வைத்து தான் !!
கை பேசியாய் இருப்பதை விட
உளி உடைக்கும் கல்லாய் இருந்து
மற்றோர் போற்றும் சிலையாய் இருந்திருப்பேன்!!!