அருவி



அருவி 

வானத்தில் இருந்து  பிறந்ததா?? - இல்லை
வனத்தில் இருந்து வந்ததா?? -
கல்லுக்குள் ஈரம் உண்டு என்றால் -
அது அருவியாகத்தான் இருக்கும் -
நதி மூலம் ரிஷி மூலம் அறிய முடியா...?
அருவியும் அது போல் தான்...~~~~~~
வானத்தில் இருந்து தண்ணீரை கொட்டியது போல்...!!
பாறைகளை குளிப்பாட்டி -
பளீர் என்று சிரிப்புடன் -
நம்மை நனைக்கையில் -
உள்ளுக்குளே ஒரு உவகை தானே??
அருவியை எதனோடும் ஒப்பிட முடியாது....!
ஆண்பால் பெண்பால் இதற்கு கிடையாது-
கவியின் கற்பனை பொறுத்து வித்யாசபடும்-
ஓங்காரமாய்  இரைச்சல் போடும் போதும் சரி -
நெளி நெளியாய் பாம்பாய்
படர்ந்து வரும்போதும் சரி...!!
கவனித்து பாருங்கள் - நம்மிடம்
ரகசியமாய் ஏதோ சொல்லத்தான் வரும் -
நாம் அழகை மட்டுமே ஆராதிக்கிறோம் -
அதனுடைய பேச்சுகளை கவனிப்பதில்லை -
அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் - மட்டுமல்ல
அருவியில் ஆனந்தமாய் நீராடுவதும்தான்-
தண்ணீருக்கு நிறம் உண்டா? - ஆனால்
அருவிக்கு நிறம் உண்டு -
மேலிருந்து விழுகையில் -
கீழே சென்று  வீழ்கையில்
பளிங்கு போல் நிறம் காட்டும்-
குட்டையை போல கலங்காது -
பேதம் பார்க்காது -
எளியவன் பெரியவன் எவனாயினும்
அதற்கு முன் சமன் தான்-
சுத்தம் என்பதை பிறப்பாய்
சுவீகரித்து வந்த
வானத்து தேவதையோ -
வன தேவதையோ -
நம் மனதில் மகிழ்ச்சி  எனும்
ஒளி வீசும் தேவதை -
நமக்குள் இருக்கும் உள்ளத்து அழுக்குகளை
நம்மிடம் உறவாடி களையும்
நீராடி தான் பாருங்களேன்!!!
மாற்றம் தெரியும்...!!!


1 Response to "அருவி"

  1. Darkmatter Says:

    I like the way u have composed this one. Excellent.