வளங்கள்
இயற்கை அன்னை தந்த
ஈடு இல்லா சீதனங்கள்
உரமிட்டு உழுது பயிரிட்டு
ஊர் போற்றி வளம் பெற்ற
உலகம் அறிந்த
இந்தியா...
இன்று
உழவு நிலங்கள் எல்லாம்
உவர் நிலங்களாய் !!!!
விவசாயம் மறந்து...
விளை நிலங்கள்
விலை நிலங்களாய்...!!
பட்டயம் போட்டு
பயிரிடும் விவசாயியே விற்கிறான்!!!
பாசமாய் வளர்த்த உழவு
மாடுகள் ......?
கசாப்பு கடைக்கு
கணிச விலைக்கு செல்கிறது!!!
ஏற்றம் இறைத்த பூமி..!!!
வாய்க்கால் பார்த்த பூமி - இன்று
வாசகால் நட்டு நிற்கிறது!!!
வளங்களுக்கு எல்லோரும்
வாய்கரிசி போட்டு விட்டு,,,!!
வளங்கள் இல்லை என
வசைபாடுகிறார் ...!!மனித வள
மேம்பாட்டு அமைச்சர் ....!!!
தண்ணீரை தாரை வார்த்து தந்துவிட்டு...!!
கண்ணீரை மட்டுமே பார்க்கிறோம்....!!!
கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்று
பாரதி பாடியது இதைத்தானா??