மரங்கள்மரங்கள் 
சுட்டெரிக்கும் சூரியன் கூட ,,,!!
சற்றே இளைப்பாற  இடம் தேடும் நிழல் ...!!
தனக்குள் வெப்பத்தை வாங்கி....
தணிவான நிழலை கொடுக்கும்
தன்னகரில்லா தாய்!!
வெயிலின் அருமையை  அந்த சூரியனுக்கே
அறிய வைத்த  அகத்திணை ...!!!
ஓங்கி வளர்ந்து  உயரத்தை தொட்டாலும்...!!
ஓய்வாக யார் வந்தாலும்  இடம் கொடுக்கும்
கற்பக விருட்சம் .....!!!
இடர் என யார் தன்னை வெட்டினாலும்
இனிவோடு தன்னை தாரை வார்க்கும்...!!!
ஏழை பாழைகள் வீட்டில் கஞ்சிக்கு
தன்னை சுவிகாரம் செய்யும் சுள்ளிகள்....!!!
ஆலிலையில் உலகை காத்த  கண்ணனுக்கு ..
ஆசனமாகிய  விந்தை - அந்த
கண்ணனே அறியான்...!!
சரித்திரம் கண்ட அசோகன்
சாலை ஓரத்தில் மரங்களை நட்டான்...!!!
முதிர்ந்து போனாலும்
தன் உடலை கூறாக வெட்டினாலும்
வெட்டிய கைகள் வலிக்கிறதே - என்று
வேதனை படும் ...!!
மரங்களே மனிதன் உன்னை
பலவாறு நிந்தித்தாலும் - அவனை
உளமார நேசிக்கிறாய்...!!!
உனக்கு இருக்கும் இந்த
பாங்கு ஆறறிவு மனிதனுக்கு இல்லாது -
போனது வருந்தல் தான்!!
உன்னை வளர்க்கும் பேறு கிடைத்தால்
போற்றி வளர்க்க
உவகையோடு உள்ளேன்...!!!1 Response to "மரங்கள்"

  1. hema Says:

    very nice lyrics..great thought too....