புகைபுகை 

கரிய நிறத்தில் கண நேரம் வந்து போகும்
காலனின் தோழன் ...!!!
எப்போது வந்தாலும்
தன்னை சுற்றோரை  சற்றே
தள்ளாட செய்யும் -
புகை நமக்கு பகை...!!
புகையிலை அல்லாது
பிற புகையும் தான்!!!
பிறக்கும் போதே
இறப்பை  சேர்த்தே
பிரசவிக்கும் !!!
கொடிது பாடிய
அவ்வை இருந்தால் - இதையும்
அறிந்தே சொல்லி இருப்பாள் !!!
கொடிது கொடிது  புகை கொடிது-
அதனினும் கொடிது அடுத்தவர் - நம்மீது
அள்ளி தூவும் புகை!!
வாகன புகையாய் இருந்தாலும்
வாயில் ஊதும் புகையை இருந்தாலும்
கேடு என்பதை  கேட்டு வாங்கி
கெட்டு செல்லும் மனிதா..!!
சற்றே கொஞ்சம்
உற்று கவனி
உனக்கே புரியும்
உணர்ந்து கொள்...
புகை என்றும் பகை தான்!!


1 Response to "புகை"

  1. hema Says:

    mikavum arumai..nalla eluthukorvaikal....keep writing