புகைப்படம்புகைப்படம்
உள்ளத்தில் உள்ளதை !!
உள்ளபடி காட்டும் மாய கண்ணாடி!!!
மனதுள்  இருப்பதை மறைக்காமல் காட்டும்!!
ஒளிவு மறைவு இல்லாது ஒப்பிக்கும் ...!!!
சிரித்தாலும் சரி ! சிந்தித்தாலும் சரி!! தன் வேலையை 
செவ்வன செய்யும் !! 
வெட்கத்தையும் வெகுளியையும் 
வெளிச்சம் போட்டு காட்டும்...!!
வயதையும் வயோதிகதையும் 
ஒப்பனை செய்து மறைத்தாலும் 
சுருக்கங்கள் சுத்தமாய் காட்டி கொடுக்கும் !!
கைதேர்ந்த கயவனையும் 
காட்டி கொடுக்கும் 
ஆள் காட்டி கருவிகள் 
ஆங்காங்கு இருப்பதை 
அறிய முடியாது அனைவராலும்...!!
எப்போதோ எடுத்த புகைப்படம் 
நம்மை நிழலாய் வருத்தும் ...!
கடந்த கால நிகழ வாழ்வின் 
நிழல் உருவங்கள் 
நிழல்படங்கள் தான்!!! 
மகிழ்வும் துயரும் தொடர்ந்து வரும் 
மாய பிம்பங்கள்!!!
நிஜங்களை நிழலாக்கி 
நினைவு ஓட்டத்தை 
தொடர் ஓட்டமாய் 
ஓட செய்யும் 
நிழல் !!!
மொத்தத்தில் நம்மை நாமே 
அதிசயமாய் பார்க்கும் 
அற்புதம் புகைப்படம் மட்டுமே!!!!
வருடங்கள் கழிந்தாலும் நம்முள் 
வசந்தத்தை வீசும் 
கால பெட்டகம் 
புகைப்படம் ஒன்றுதான்!!!

 2 Response to "புகைப்படம்"

  1. mano Says:

    mikavum arumai........vidyasamana sinthanai....keep writing...

  2. kiruthiga Says:

    oru photova vatchi evalavu azahga kavithai ezatha mudiumnu epa than therinchithu,vry nice