கவிச்சோலை


 உன் விழிகள் காந்தம் தான்...
மறுக்கவில்லை...
ஆனால் நானோ 
கல்லாயிற்றே ....
ஈர்க்கபடுவதற்கு 
இரும்பு அல்லவே...

நித்தம் 
புதிது புதிதாய்
பூக்கள் 
வண்ண மயமாய் 
வாசனைகளும் தான் ...
நீக்க மற
எல்லா இடத்திலும்..
நுகர தெரிந்த 
எனக்கு...
பூக்களை காண தான் 
கொடுத்து வைக்கவில்லையே ?

முடவன் 
கொம்பு தேனுக்கு 
ஆசை படலாமா? 
முன்னோர் சொன்னது...
இளையோர் சொல்லுவது...
முடவனாய் இருந்தாலும் 
முயற்சி செய்தால்
முடியாதது இல்லை...
இவ்வுலகில்...

உன்புருவ 
நாணேற்றி 
கண்களால் 
கணை விடாதே.....
விரயமாகி போகும்...
வீணலுக்கு 
இட்ட நீராகும்... 

உன்னிடத்தில் 
சொல்ல ஆசை...
நீ வரும்போதெல்லாம் 
வீதியே உன்னோடு வருகிறது..
துப்பட்டாவை சரியாய் 
போட்டு கொள்...

உன் பெயர் சொல்லும் 
ஒவ்வொரு முறையும் 
எனக்கு மட்டுமே 
கேட்கிறது ...
என் இதயத்தின் 
சீழ்க்கை ஒலி.....

சிறிது நேர 
சந்திப்பு தான் 
என்றாலும் 
சிறிது சிறிதாய்
அசை போட்டு...
முழு நாளாகி... 
நாட்களாகி 
வாரங்களாகி 
மாதங்களாகி....
வருடங்களாகி...
அந்த சிறிது 
சந்திப்புக்கு 
இன்றும் ஆவலோடு... 

போராட்டம்...
உனக்கு பிடித்த வார்த்தை...
சமாதானம் 
எனக்கு பிடித்த வார்த்தை...
உடன்பாடு 
நம் இருவருக்கும் பிடித்த வார்த்தை..
என்னால் உனக்கு பிடித்தது
உன்னால் எனக்கு பிடித்தது...

விட்டு கொடுப்பதில் நீ 
எப்போதும் என்னை 
மிஞ்சுகிறாய்...
ஒரு முறை கேட்டேன் 
அப்படி என்ன இருக்கிறது என்று...
சிரித்தவாறே சொன்னாய்...
உன் முகத்தில் சிரிப்பை 
காண .....
நான் கொடுக்கும் விலை அது என்று... 

ஏறக்குறைய 
பதினைந்து வருடமாய் 
உன்னை எனக்கு தெரியும்...
தீடிரென இன்று வந்து 
என்னை பார்த்து 
கேட்கிறாய்... 
நீங்கள் தான்....அவரா? 
வெட்கித்து போனேன்... 

என் கவிதைக்கு 
முலாம் பூசும் 
அனைவரையும் 
ஒரு சேர கேட்கிறேன்..
கவிதையே 
 பொய்மைதானே?? 

சிகரம் நோக்கி 
புறப்பட்டேன் 
வளைவுகள் 
நெளிவுகள் 
இடர் பாடுகள் 
ஏராளம்... 
ஆனாலும் 
தளரவில்லை... 
எனக்கு 
தெரிந்தது 
உச்சிச்சிகரம் 
மட்டுமே... 


0 Response to "கவிச்சோலை"