உன்னை பற்றி...


இப்போதெல்லாம் நீ
கண்ணாடி முன்
அதிக நேரம் செலவிடுகிறாய்...
அதிக நேரம் நான் உன்னை
பார்க்கவேண்டும் என்று...

என் கவனம்
எப்போதும் உன் மீது....
உன் முகத்தில் சிறு
சலனம் என்றால்..
பஞ்ச பூதங்களையும்
அடக்கி விடுவேன்...
உன் அருகாமைக்காக...

ஒரு முறை சிரித்தால்
சிநேகம்
மறு முறை சிரித்தால்...
நட்பு ...
மறுபடியும் சிரித்தால்...
எனக்கு புரியவில்லை...
அதையும் நீயே
சொல்லிவிட்டு போ...
அனைவரும் வந்தனர்...
அனைவரும் போயினர்....
ஆனால் நீ வரும்போது - மட்டும்
எனக்குள் ஒரு பிரளயத்தை
உண்டு பண்ணிவிட்டு ....
எதுவுமே அறியாது போகிறாய்...
கேள்விக்குறியுடன் நான்...

என் இயக்கத்தின்
தலைமை செயலகம்
உன் விழிகள் தானே...
இப்போதெல்லாம் என்னை
பார்க்காது செல்கிறாய்...
இரும்பாகி போனது
என் மொத்த சரீரம்...
காற்றில் என் இதயம்
துருபிடித்து போகிறது...

காற்றை கையில்
பிடித்தேன்...
தீயை உணவாய்
கொண்டேன்...
மேகத்தின் கொடை
என்னின் தாகம்....
ஆகாசம் எனது
படுக்கையானது...
அத்தனையும்
எளிதான எனக்கு....
உன்னின் நினைவுகளை
துரத்த மட்டும்
முடியவில்லை...
துணைக்கு
உன்னையே
அழைக்கிறேன்...

இப்போதெல்லாம்
நீ காட்டும் பரிவு
எனக்கு பயத்தை தருகிறது...
பிரிவும் கூட வந்து விடுமென...

0 Response to "உன்னை பற்றி..."