மண்ணாய் மரமாய்
ஜடமாய் திரிந்தேன் .....
உன் பார்வை பட்டு
துளிர்த்தது .....
என்னுள் ஒரு
மாற்றம்...
இப்போதெல்லாம்
எதை பார்த்தாலும்
ரசிக்கிறேன்...
இளமை கொப்புளிக்க
கவிதை எழுதுகிறேன்..
இடையிடையே
என்னுள் வந்து வந்து
போகிறாய்..
நான் சுவாசிக்கும் காற்றாய்...
நாபிகமலத்தில் - என்
நரம்பு மண்டலத்தில்...
செங்குருதியில்...
எல்லாமாய்
வியாபித்து
என்னை
புதியவனாய்
புத்திமானாய்
மாற்றினாய்... ....
அனைத்தும்
செய்தாயே
தமிழ் தாயே... உன்
பாதம் தொட்டு
வணங்கினேன்......
கண்களில் வழியும்
கண்ணீரை
துடைக்கிறாய்.....
என்னையும்
கவிஞன் ஆக்கினாய்...
என்ன பேறு பெற்றேன்
இப்படி நான்
அவதானிக்க
அவனியில்
பவனி வர....
வார்த்தை இல்லை
சொல்வதற்கு....
வார்த்தையால்
கட்டிய
வாடா மாலை இது...
ஏற்றுகொள் தாயே
என் உள்ளம் குளிர.....
-ஜெயராமன் பரத்வாஜ்-